திருமணத்திற்கு தயாராவது எப்படி?

கடந்த 1 மாதம் முன்பு என் மன கவலையை இங்கு எழுதியிருந்தேன். அதற்கு நிறைய சகோதர, சகோதரிகள் பதில் அளித்து இருந்தனர். அவர்களின் பதில் எனக்கு ஆறுதலாகவும் மனதுக்கு நம்பிக்கையாகவும் இருந்தது. http://www.arusuvai.com/tamil/node/15393 , அதன் பிறகு சந்தர்ப்ப சூழ்நிலையால் உடனடியாக பதில் அளிக்க முடியவில்லை.இப்போது அடுத்த வாரம் எனக்கு திருமணம் நிச்சியிக்கப்பட்டுள்ளது. இது கலப்பு திருமணம் என்பதால் என் வீட்டில் யாரும் கலந்துக் கொள்ள வில்லை.

அடுத்த வாரம் நிக்காஹ் நிச்சியிக்கப்பட்டுள்ளது. அதற்கு நான் எப்படி தயாராக வேண்டும். என்னென்ன தேவையானவைகளை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பேஷியல் செய்துக் கொள்ளலாமா, நான் சென்னை கோடம்பாக்கத்தில் இருக்கிறேன். இங்கு எந்த பார்லர் பெஸ்ட் னு யாராவது தெரிஞ்சா சொல்லுங்க. நோன்பு டைமா இருக்கறதால எந்த மாதிரி உணவு எடுத்துக்கலாம்.

ப்ளிஸ் பதில் சொல்லுங்க.......

உங்களுக்கு பதிவு போடாம போக முடியல. உங்கள தான் தேடிட்டு இருந்தேன். நல்லா இருக்கீங்களா?

உங்கள் திருமணத்திற்கு என் வாழ்த்துக்கள்!

எனக்கு விளக்கமா சொல்ல இப்போதைக்கு நேரமில்லை. பிறகு வந்து சொல்கிறேன்.

இப்போதைக்கு

எந்த ஒரு நகையும் இல்லாமல் இருங்கள். மோதிரம்,வளையல்,தோடு, தலைக்கு பூ, பவுடர், செண்டு என எந்த அலங்காரம், ஆபரணங்கள் இல்லாமல் இருங்கள். இதற்கு பெயர் மகர் இருத்தல்.

இவ்வாறு செய்தால் நிக்காஹ் நேரத்தில் ஸ்பெஷல் பவர் முகப்பொலிவு கிடைக்கும் (நூர் இறங்கும்).

இது 40 நாள் செய்யவேண்டிய சடங்கு. இப்போது 1 வாரம் கூட செய்கிறார்கள்.

மிச்சத்தை பிறகு சொல்கிறேன். உங்களுக்காக தான் இந்த பதிவு!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அல்ஹம்துலில்லாஹ். உங்க பதிலுக்காக காத்திட்டு இருக்கேன்.

Love is Life Beautiful

பேஷியல் பண்ணுவதாக இருந்தால் ஒரு வாரம் அல்லது 3,4 நாட்களுக்கு முன்பே செய்துவிட வேண்டுமென தேவா சொன்னதாக நினைவு. மற்றபடி என்ன பொருட்கள் எடுத்துச்செல்வது என தெரியவில்லை. சில முறைகள் மாறலாம் இல்லையா?

இருங்கள். அனுபவமுள்ளவர்கள் யாராவது பதில் சொல்வார்கள்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

கோடம்பாக்கம் என்றால் Green trends, Lakme , Naturals, எல்லாமே இருக்கே. பிடிச்சதை ட்ரை பண்ணுங்க. பேஷிஅல் செய்வது என்றால் கண்டிப்பா 1 வாரம் முன் பண்ணுங்க. பேஷியல் செய்துட்டு ஷாப்பிங் அது இதுன்னு வெளியே சுத்தாதிங்க. அப்படி போகும் வேலை இருந்தா பார்லர்'லயே லோஷன் கேளுங்க. அதை தேச்சுகிட்டு போங்க, இல்லைன்னா சுமாரா இருந்த முகம் கூட மோசமா ஆயிடும். த்ரெட்டிங்'ம் அப்படி தான் 1 வாரம் முன் செய்ய வேண்டும். இல்லை என்றால் வித்தியாசம் தெரியும். மருதாணி போடுவதென்றால் 3 நாள் முன் போட்டுக்கங்க. திருமணத்துக்கு தேவையான துணிகளை சரியா எடுத்து வைங்க. கூடவே தேவையான அளவு கொண்டை ஊசி, சேஃப்ட்டி பின், ஹேர் பின், ஒரு கத்திரி, சீப்பு, எல்லாம் வைங்க. மேகப்'கு பியூட்டிஷன் வராங்கன்னா அவங்ககிட்ட நீங்க என்ன என்ன வாங்கி தரணும்'னு கேட்டுடுங்க. இல்லை நீங்களே தான் எல்லாம் வாங்கணும்'னு பிரியப்பட்டா ஒரு கிட் வாங்கிடுங்க.

உங்க நகை எல்லாம் சரியா வகைபடுத்தி என்ன என்ன இருக்குன்னு சரி பார்த்து அழகா எடுத்து வெச்சுக்கங்க. எந்த புடவைக்கு எதை போட போறீங்க, திருமணத்தன்று எந்த புடவை, அதுக்கு என்ன நகை, என்ன மேக்கப், என்ன தலை அலங்காரம்... வரவேற்புக்கு என்ன புடவை, என்ன அலங்காரம், என்ன நகை எல்லாம் முடிவு பண்ணி செட்'அ எடுத்து வைங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா வீடு எங்க இருக்குண்ணு கேட்டு போனால் அவங்களே எல்லாம் பண்ணிடப் போறாங்க :-) இப்ப அவங்க தங்கச்சி கூட field-ல இறங்கிட்டாங்க :-) என்ன வீட்டிலேயே traditional set-up ல இருக்கிறதால கொஞ்சம் காஸ்ட்லி. அவ்வளவுதான். கொடுக்குற காசுக்கு worth தான். try பண்ணிப் பாருங்க :-)

அன்புடன்,
இஷானி

முதலில் வாழ்த்துக்கள் யாஸ்மின். போராடி எப்படியோ ஜெயிச்சுட்டீங்க நல்லா சந்தோஷமா இருங்க யாஸ்மின். கடவுள் எப்போது துணையிருப்பார்.

ஒரு வாரத்திற்கு முன்பே பேஸியல் செய்துக் கொள்ளவும். இரண்டு தினங்களுக்கு முன் மெஹந்தி போட்டுக் கொள்ளவும்.
திருமணத்திற்கு, அதற்கு மறுநாள், இப்படி அடுத்தடுத்து உள்ள சடங்குகளுக்கு எல்லாம் புடவை கட்டிக் கொள்ள வேண்டுமென்றால் அதற்கான மேட்சுங் ப்ளவுஸ் எல்லாம் ஒரு வாரத்திற்கு முன்பே தைத்து வாங்கி வைத்து விடுங்கள். அப்போது தான் போட்டு பார்த்து கரைக்டா இருக்கானு பார்த்துக் கொள்ளலாம்.
பூ, மாலை, சடை பட்டி இதற்கு எல்லாம் இப்பவே ஆர்டர் கொடுத்துடுங்க.
மண்டபத்தில் தான் கல்யாணம் என்றால் உங்களுக்குனு ஒரு சூட்கேஸில் உங்களுக்கு தேவையானவைகள் எடுத்து வைத்துக் கொள்ளவும். புடவை, அதற்கான மேட்சிங் ப்ளவுஸ், உள்ளாடைகள், டவல் இப்படி எல்லாவற்றையும். இரவே போய் விடுவீங்கன்னா உங்களுக்கு சவுகரிமா இருக்குற மாதிரியான ஒரு நைட்டி அல்லது சுடிதார் எடுத்து வச்சுக்கோங்க. எப்படியும் மேக்கப் போட்ட பிறகு தான் புடவை கட்டுவார்கள் அதனால் அதுவரை போட்டுக் கொள்ள ஒரு டிரஸ்.
பார்லரிலிருந்து வந்து மேக்கப் செய்து விடுவாங்கன்னா அதற்காக ஆயத்தததை இப்பவே செய்து வைங்க. முகூர்த்த தினங்களில் அவங்க பிஸி ஆகிடுவாங்க. எப்பப்போ என்ன மாதிரி புடவை டிசைன்ஸ் கட்ட போறீங்கன்னு அவங்ககிட்ட சொல்லி அப்ப போட போகிற accessesories எல்லாம் ரெடி பண்ணி வச்சுக்கோங்க. இல்லைனா ஆர்டர் கொடுத்து வைங்க. நீங்களே பேக்கப் போட போறீங்கன்னா அதற்கு தேவையானவைகளை இப்பவே தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.
சிலர் பேஷன் ஜுவல்லரி போட்டுக் கொள்வார்கள். அப்படி அல்லாமல் தங்க நகை தான் போட்டுக் கொள்வீர்கள் என்றால் திருமணத்திற்கு அன்று போட்டுக்க கூடிய நகைகள் ஒரு பேக்கில் போட்டு நம்பிக்கையானவர்கள் யாரிடமாவது கொடுத்து வைங்க இல்லைனா உங்களிடம் இருப்பது சேஃப் என்றால் நீங்களே அதை பத்திரமாக சூட்கேஸில் வைத்துக் கொள்ளுங்கள்.
அப்பறம் முக்கியமான விஷயம் அந்தந்த கடை போன் நம்பர், பார்லர் நம்பர், பூ ஆர்டர் கொடுத்தவங்க நம்பர் எல்லாவற்றையும் கேட்டு வாங்கி வச்சுக்கோங்க. முன்னாடியே போன் செய்து சொல்லிட்டா கடைசி நேர டென்ஷனை குறைக்கலாம்.

யாஸ்மின் வாழ்த்துக்கள்.
என்னிக்கிப்பா நிக்காஹ். கவலைப்பாடின்க அல்லாஹ் எல்லாவற்றிர்க்கும் துனையாக இருப்பான்.
ஆமினா அக்கா சொன்ன மாதிரி தோடு, வளையல் எல்லாம் போடதிங்க. எங்க வீட்டுலயும் அப்படிதான் எனக்கு அம்ம செஞ்சான்க. நிக்காஹ் ல நல்லா நூர் இருந்தது.
அப்புறம் கேரட்-ல பண்ங்கற்கண்டு சேர்த்து ஜூஸ் குடிங்க. நல்ல பொலிவு கிடைக்கும்

நன்றி வனிதா மேடம். வரிசையா என்ன பண்ணனும், பண்ணலாம்னு தெளிவா சொல்லியிருக்கிங்க. நீங்க சொன்னபடி அரேன்ஜ் பன்னிக்கறேன். கௌரி மேடம் நீங்க சொன்ன டிப்ஸ் சும் யூஸ்புல்லா இருக்கு. நான் அதன் படி செய்துக்கறேன். நன்றி

Love is Life Beautiful

அஸ்ஸலாம் அலைக்கும். இன்ஷா அல்லாஹ் வரும் 29 ஆம் தேதி நிக்காஹ் நிச்சயிக்கப்பட்டுள்ளது. துஆ செய்யுங்க. நன்றி shabanu.

Love is Life Beautiful

//இப்ப அவங்க தங்கச்சி கூட field-ல இறங்கிட்டாங்க :-) // - இஷானி, இது தான் எனக்கு எத்தனை முறை படிச்சும் புரியல. :((

//கொடுக்குற காசுக்கு worth தான்// - என்னையா சொல்றீங்க? நான் தான்னா, அறுசுவை தோழிகளுக்கு நோ ஃபீஸ் ;) ஆனா பாவம் மாப்பிள்ளை!! பெண்ணை பார்த்து பயந்துடுவார்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்