மிக்சர்

தேதி: April 9, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

காராபூந்தி செய்வதற்கு :
கடலை மாவு - 2 கப்
அரிசி மாவு - அரைக் கப்
சமையல் சோடா - கால் தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு
ஓமப்பொடி செய்வதற்கு :
கடலை மாவு - 2 கப்
அரிசி மாவு - ஒரு கப்
உப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு
டைமண்ட் கட் செய்வதற்கு :
மைதா மாவு - ஒரு கப்
வெண்ணெய் - கால் கப்
உப்பு - ஒரு சிட்டிகை
சர்க்கரை பொடி செய்தது - அரைக் கப்
இதரப் பொருட்கள் :
அவல் - தேவையான அளவு
வேர்க்கடலை - தேவையான அளவு
கடலைப் பருப்பு - தேவையான அளவு
கார்ன் ஃப்ளேக்ஸ் - தேவையான அளவு
உருளைக் கிழங்கு - தேவையான அளவு
முந்திரிப் பருப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு


 

காராபூந்தி செய்வதற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் தண்ணீர் விட்டு, இட்லி மாவை விட சற்றுத் தளரக் கரைத்துக் கொள்ளவும். நன்றாகக் கையால் அடித்துக் கலக்க வேண்டும்.
அடுப்பில் அதிகக் குழிவில்லாத வாணலியில் எண்ணெயைக் காய வைக்கவும்.
பூந்திக் கரண்டியை எண்ணெய் மேலே ஒரு கையால் பிடித்துக் கொண்டு, இன்னொரு கையால் ஒரு கரண்டி மாவை அதில் விடவும்.
முத்துக்கள் தானாக அதிலிருந்து விழவேண்டும். சற்று தாரளமாக எண்ணெய் வைத்தால்தான் முத்துக்கள் வட்டவடிவில் விழும்.
நன்றாக முத்துக்கள்(பூந்தி) வெந்ததும் எடுத்து வடிய வைக்கவும்.
ஓமப்பொடி செய்வதற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை எடுத்துக் கொண்டு, அவற்றைத் தண்ணீர் விட்டுக் கெட்டியாகப் பிசைந்து ஓமப்பொடி அச்சில் வாணலியில் எண்ணெயில் பிழிந்து, நன்கு வேக வைக்கவும்.
வெந்த பிறகு சாரணியில் அரித்து எடுத்து, எண்ணெய் வடியுமாறு வைக்கவும்.
டைமண்ட் கட் செய்வதற்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு, சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசையவும்.
மெல்லிய அப்பளங்களாக இட்டு, டைமண்ட் வடிவத்தில் சிறிய துண்டுகளாகக் கத்தரித்து எண்ணெயில் பொரித்துப் போடவும்.
கடைகளில் பொரித்த அவல் வாங்கி, மண் போக சுத்தப் படுத்தவும்.
வேர்க்கடலை கடைகளில் வறுத்த வேர்க்கடலை வாங்கி, தோலை நீக்கி எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கப் கடலைப் பருப்பை நன்கு கழுவி சுமார் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
பின் கழுவித் தண்ணீர் வடிந்ததும் ஒரு துணியில் நிழலில் காய வைக்கவும்.
நன்கு ஈரம் சுண்டியபின் எண்ணெயில் சிறிது சிறிதாக அள்ளிப் போட்டு நன்கு பொரித்து எடுத்து வடிய வைக்கவும்.
அதற்குப் பதிலாகப் பொட்டுக்கடலையை வறுத்த சூட்டுடன் வாங்கி, தோலிப்பருப்பில்லாமல் சுத்தம் செய்தும் போடலாம்.
பச்சையாக தற்போது கார்ன் ஃப்ளேக்ஸ் கடைகளில் வாங்கக் கிடைக்கிறது.
அதை வாங்கி எண்ணெயில் சிறிது சிறிதாக அள்ளிப் போட்டு நன்கு பொரித்து எடுத்து வடிய வைக்கவும்.
உருளைக் கிழங்கை கழுவி, சற்று மெல்லிய வில்லைகளாக, சற்று நீளமாக நறுக்கி, மீண்டும் நன்கு அலசி பிறகு அதனை ஈரம் சுண்ட உலர்த்தி எண்ணெயில் பொரித்து போடவும்.
முழுப்பருப்பாகவோ, இரண்டாக உடைத்தோ எண்ணெயில் பொன்னிறமாக வறுத்து போடவும்.
கறிவேப்பிலை இலைகளைக் கிள்ளிப் போட்டு எண்ணெயில் வறுத்து, உடன் எடுத்து, ஈரம் உறிஞ்சி எடுக்கும் தாள்களில் போட்டு எடுக்கவும்.
மேற்கண்ட எல்லாப் பொருட்களையும் தயார் செய்த பின், ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு, தேவையான அளவு, மிளகாய்ப்பொடி, உப்பு, பெருங்காயப் பொடி போட்டு, அடியிலிருந்து மேல் வரை நன்றாகக் கலந்து விடவும்.


இது தீபாவளிக்கு முக்கியமாக செய்யப்படும் ஒரு பலகாரம். கீழே அதைச் செய்யும் ஒரு விதம் கொடுக்கப்பட்டுள்ளது. கீழ்க்கண்டவற்றை எல்லாம் தனித் தனியே செய்து கடைசியில் கொடுத்த படி கலக்க வேண்டும்.

மேலும் சில குறிப்புகள்