working ladies- வீட்டு வேலைகளை எப்படி சமாளிப்பது-ideas kottuga pa...

நான் காலை 10 மணி அளவில் வேலைக்கு செல்வேன். என் கணவர் 9 மணி அளவில் செல்வார். அதற்குள் நான் tiffin,lunch எல்லாம் செய்ய வேண்டும்.அது மட்டுமின்றி என் குழந்தைக்கு தேவையான உணவும் தயார் செய்ய வேண்டும்.என் மாமியார் குழந்தையை மட்டும் கவனித்து கொள்வார். எல்லாம் தயார் செய்தால் time-kku கொடுப்பார்.morning ஒரு வழியா manage செய்த பின்பு ,இரவு மீண்டும் நான் வர 8 மணி ஆகும். அதன் பின்னர் தான் நான் சமைக்க வேண்டும். Office 'ல் இருந்து வந்தவுடன் சுட சுட சாப்பிடவே தோன்றும். பிறகு எங்கே சமைக்க mood செல்வது.இதனால் நான் மிகவும் விரக்கத்தில் உள்ளேன். ரொம்ப அழுகை அழுகையா வருது பாஇதற்கு தயவு செய்து ஒரு தீர்வு சொல்லுங்க.if it is my mom's place.. den i would b like queen.. now ????????

i cannot take food at proper timing.. so day by day my health is becoming very weak. i cannt spend time for myself n kid. Still im mother feeding also. n moreover im nt getting proper maid too.. all household i need to do..

How should i must manage.. pls advice

யசோதா

தலைப்பை சின்னதாக மாற்றுங்க

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

done.. now is it ok..

எது நடக்கக்கூடாதென்பதற்காக , நீங்கள் கோபப்படுகிறீர்களோ, நீங்கள் கோபப்பட்டு நிதானமிழந்த ஒரே காரணத்துக்காக, அது நடந்தே விடுகிறது" .....

உங்க மாமியாரிடம் பேசி பாருங்க. இரவு மட்டும் டிபன் செய்து வைக்குமாறு, அல்லது 2 நாட்களுக்கு ஒரு முறை மாவு அரைத்து பிரிட்ஜில் வைத்து விடுங்கள்.

அவங்க சொன்ன செய்வாங்க... ஆனால் சொல்லி சொல்லி காட்டுவாங்க.. எனக்கு அது சுத்தம பிடிக்காது . ஆனாலும் அவங்க சொல்லுவாங்க.. குழந்தையை வைத்து கொண்டு எப்படி செய்வது என்று.

எது நடக்கக்கூடாதென்பதற்காக , நீங்கள் கோபப்படுகிறீர்களோ, நீங்கள் கோபப்பட்டு நிதானமிழந்த ஒரே காரணத்துக்காக, அது நடந்தே விடுகிறது" .....

if it is my mom's place.. den i would b like queen.. now ????????

இப்படி சொல்லலாமா? அம்மா வீட்டில ராணின்னா. இந்த வீட்டில நீங்க மகாராணி இல்லயா?

மாமியார் குழந்தையை பாத்துக்கறாங்களேன்னு சந்தோஷப் படுங்க. நான் 5 மாத குழந்தையை க்ரீச்சில் விட்டு விட்டு வேலைக்குச் சென்றேன். பெண்ணை வேலைக்காரியிடமும், பிறகு பக்கத்து வீட்டு மாமியிடமும் விட்டு விட்டுச் செல்வேன். வீட்டில் இருந்து ஆபீஸ் கிட்டத்தட்ட 35, 40 கி.மீ. கணவரோ கம்பெனி வேலை. காலை எட்டரை மணிக்கு கிளம்பினால் இரவு ஒன்பதோ பத்தோ. இதில் அடிக்கடி டூர் வேறு சென்று விடுவார்.

இன்னும் நிறைய இருக்கு. ஆனால் உங்களை போர் அடிக்க வைக்க விரும்பவில்லை.

வேலைக்குப் போவது நமக்காகத்தானே. உங்களை விட கஷ்டப் படுபவர்களைப் பாருங்கள்.

இதுவும் கடந்து போகும் என்று நினையுங்கள்.

வாழ்க வளமுடன்
அன்புடன்
ஜெமாமி

other than work im maharani only.. but household work i could not manage.. im asking tips for dat jayanthi.. pls share your experience

எது நடக்கக்கூடாதென்பதற்காக , நீங்கள் கோபப்படுகிறீர்களோ, நீங்கள் கோபப்பட்டு நிதானமிழந்த ஒரே காரணத்துக்காக, அது நடந்தே விடுகிறது" .....

என் கணவர் 7 மணிக்கு ஆபிஸ் போகனும். நான் 8 மணிக்கு கிளம்புவேன். என் 2 1/2 மாதக் குழந்தையய் காலைலேயே குழிக்க வைத்து அவனுக்கு தேவையானவைகளை ஹாட் வாட்டர் முதல் கொண்டு ரெடி பண்ணி கொண்டுபோயி பேபி ஸிட்டீங்கில் விடுவேன்.

5 1/2 மாதம் வரை தாய்பால் மட்டுமே கொடுத்தால் ஃபிரீஸ் பண்ணி கொடுத்துவிடுவேன். 1 1/2 வயது வரை பேபிஸ்ட்டீங்க் தான். அப்புறம்தான் அம்மா வந்து 6 மாதம் வரை இருந்தாஙக.

இரவே காய்கறி கட் பண்ணி வைச்சுடுவேன். அவருக்கு டயட் ஃபுட்ங்கிறாதால ஃப்ரசாதான் சமைப்பேன். ஓட்ஸ்கஞ்சி,சாதம்,தால்,பொறியல்னு தான் சமைப்பேன். ஏன்னா நானும் ஃபீட் பண்ணிட்டு இருந்தேன் இல்லையா!

ஆபிஸ் போனாலும் நியாபகம் எல்லாம் பையன் மேலதான் இருக்கும். அவனுக்கு 6 மாதத்திலேயே பல்லு முளைச்சுதுனால கீழே விழும்போதெல்லாம் உதடு கிழிஞ்சு ரத்தம் வந்திருக்கும். பெரும்பாலும் கூப்பிடபோகும்போது அழுதுட்டுதான் இருப்பான். மனசு வலிச்சாலும் வெளியகாட்டமுடியாது. அவங்ககிட்ட சிரிச்சுட்டே குழந்தையய் எடுத்துட்டு வருவேன்.

இப்ப இரண்டாவது குழந்தைக்காக வீட்டிலதான் இருக்கேன்.அவ வாஸ்ரூம் போனாக்கூட பயங்கரமா அழுகறா. பையன் ஸ்கூலுக்கு 5 1/2 மணிக்கே போகனும். பூரி, புலாவ்னு தான் கேக்கறான். பேக்கரி ஐடம் கொடுக்ககூடாதுன்னு ஸ்கூல் ஆர்டர்.ஃப்ரசாதான் பண்ணிக்கொடுகிறேன்.

உங்களுக்கு இவ்வளவு சிரமம் இருக்காதுனு நினைக்கிறேன். உங்க மாமியார் குழந்தையாய் பாத்துக்க சம்மதிச்சதே பெரியவிசயம்பா. உங்க குழந்தை நிம்மதியா ஸேஃபா இருக்கான் இல்லையா. இத விட வேற என்ன வேணும் உங்களுக்கு.

Don't Worry Be Happy.

1. முதல் நாளே என்ன சமையல் செய்யணும்ன்னு முடிவு செய்து கொண்டாலே போதும். 50% முடிந்தா மாதிரிதான். காய் முதல்நாளே நறுக்கி வெச்சுடுவேன்.
2. முடிந்தவரை சுலபமான சமையலா செய்யுங்க.
3. காலையில் சைட் டிஷ்ஷெல்லாம் அதிகமா செய்துட்டு ராத்திரி சூடா சாதம் மட்டும் வெச்சுக்கங்க. நீங்க அசைவம் தானே. அறுசுவையில எவ்வளவு ஈசி குறிப்புகள் இருக்கு. நோட் பண்ணிக்கங்க.
4. என்னை மாதிரி தோழிகளை நினைத்துக்கொள்ளுங்கள். பாருங்க பாத்துக்க ஆளே இல்லாத போதே தைரியமா இரண்டாவது குழந்தை பெற்றுக் கொண்டேன். நாட்கள் வேகமாக ஓடி விடும்.
இன்னும் சொல்றேன். அப்பப்ப.
அன்புடன்
ஜெமாமி

அப்படியே நேரம் கிடைக்கும்போது ‘பல்சுவை’யில் ‘ காலச்சக்கரம்’ தலைப்பில் உள்ள என் கதைகளைப் படியுங்கள்.

என்னுடைய அனுபவங்களையே கதைகளாக்கி இருக்கிறேன்.

அப்பப்ப எங்களோட வந்து பேசுங்க. அதுவே மனசுக்கு தெம்பா இருக்கும்.

அன்புடன்
ஜெமாமி

rellay jayanthi.. thanks alot for ur advice.... after ur ideas.. really i started thinking.. i feel der is no by my side to give positive strokes to me.. so i feel very deprived.. so recgonition.. so pls keep in touch all aruvusai thozigle..

எது நடக்கக்கூடாதென்பதற்காக , நீங்கள் கோபப்படுகிறீர்களோ, நீங்கள் கோபப்பட்டு நிதானமிழந்த ஒரே காரணத்துக்காக, அது நடந்தே விடுகிறது" .....

மேலும் சில பதிவுகள்