கர்ப்பிணி மெஹந்தி வைப்பது

நான் 3 மாத கர்ப்பிணி. எனக்கு மெஹந்தி வைக்குரதுன்னா ரொம்ப பிடிக்கும். ஆனால் அம்மா வைக்காதே என்று சொல்கிறார்கள். குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் நேரமே கிடைக்காது. நீங்க என்ன சொல்றீங்க தோழிகளே?

மெஹந்தி வைப்பதால் சிலருக்கு ஜலதோஷம் பிடிக்கலாம் (முன்பு போல் இலையை வீட்டிலேயே அரைத்து கை நிறைய வைக்கும்போது வர வாய்ப்புண்டு). இப்ப பவுடரை வாங்கி கோன் -ல் வைத்து போடுவதில் ஜலதோஷம் வர வாய்ப்பில்லை.

அம்மா அதனால் அப்படி சொல்லியிருப்பார்கள். உங்களுக்கு ஒன்றும் செய்யாது என்றால் நீங்கள் வைக்கலாம் என்றே நினைக்கிறேன்.

உங்களுக்கு மெஹந்தி ஸ்பெஷலிஸ்ட் வனிதா வந்து விளக்கமா பதில் சொல்வாங்க.

அன்புடன்,
இஷானி

ஹாய் கிருத்திகா முதல்ல உங்களுக்கு வாழ்த்துக்கள். நீங்க தாராளமா மெஹந்தி போட்டுக்கொள்ளுங்கள்.
மெஹந்தி கோன் வாங்கும் பொழுது நேச்சுரல் ஹென்னாவான்னு பார்த்து வாங்குங்க போதும்(செயற்கை கலர் சிலசமயம் அலர்ஜி உண்டாக்கும்). உங்களுக்கு வெதர் மற்றும் உடம்பு எப்படி பட்டது குளிர்ச்சியா, சூடானதான்னு பார்த்து அதற்கேற்றார்ப்போல் வச்சுக்கோங்க.எதுவும் ஆகாது.
இஷானி சொன்ன மாதிரி இலை அரைச்சு போடும் பொழுது தான் நல்லா சூடு குறைந்து குளிர்ச்சியாகும் உடம்பு. ஆனால் கோன் வச்சா எந்த ஒரு மாற்றமும் இருக்காது.
இப்போ என் தோழிக்கு இன்னும் நான்கு நாளில் பிரசவம் அவங்களுக்கு வளைகாப்பு மட்டுமின்றி நான் இடையில் பல முறை வச்சு விட்டேன். எதுவும் ஆகலை. அதனால் கவலைப்படாம நீங்களும் வச்சுக்கோங்க.
உங்களுக்கு எத்தனையாவது குழந்தை? எங்கே இருக்கீங்க?

ஹிஹிஹீ.... நன்றி இஷானி ;)

கிருத்திகா... நான் அறுசுவை'கு அனுப்பின டிசைன் எல்லாமே கர்ப்பமா இருந்தப்போ போட்டது தான். இப்போ குழந்தை பிறந்த பின் நேரமே கிடைக்கல நீங்க சொன்ன மாதிரி :(

உமா சொன்ன மாதிரி நல்ல தரமான கெமிக்கல் கலக்காத ஹென்னா கோன் கிடைச்சா போடுங்க. நீண்ட நேரம் வைக்காதிங்க.அதிகபட்சம் 1 மணி நேரத்தில் எடுத்துடுங்க. :) இலை அரைத்து வைக்கிறதுன்னா நானே வேண்டாம்'னு தான் சொல்வேன். ரொம்ப குளிர்ச்சி... இன்நேரத்தில் பலருக்கு ஒத்துக்காது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி இஷானி, pops, வனிதா

வாழ்த்துக்களுக்கு நன்றி pops

வனிதா,
அறுசுவைல உங்க டிசைன் பாத்துதான் எனக்கு மெஹந்தி போடணும்னு ஆசை வந்துச்சு.

நீங்க எல்லாரும் மெஹந்தி போடலாம்னு சொன்னது ரொம்ப சந்தோசம் வந்திருச்சு.

எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால் ஏமாற்றம் குறைவாக இருக்கும்.

என்றும் அன்புடன்
கிருத்திகா

மேலும் சில பதிவுகள்