கரிசலாங்கண்ணி பற்றிய சந்தேகம்

ஹாய் ஃப்ரண்ட்ஸ் தலை முடிக்கு கரிசலாங்கண்ணியை எண்ணையில் கலந்து தேய்க்கலாம் என்று ஒரு லிங்கில் பார்த்தேன்.வெள்ளை பூ இருப்பது வெள்ளை கரிசலாங்கண்ணி என்றும் மஞ்சள் பூ இருப்பது மஞ்சள் கரிசலாங்கண்ணி என்றும் இரண்டு வகை உள்ளது என்கின்றனர்.இதில் எது கரிசலாங்கண்ணி எதை நான் எண்ணையில் கலந்து தேய்ப்பது தயவு செய்து பதில் கூறுங்கள் ப்ளீஸ்
அதே போல் இளநரைக்கு மருதாணியை அரைத்து அடிக்கடி தலையில் தேய்த்தாலோ அல்லது மருதாணியை அரைத்து எண்ணையில் போட்டு தேய்த்தாலோ முடி கறுப்பாகுமா இல்லை பழுப்பு நிறத்தில்தான் இருக்குமா இதற்க்கும் பதில் ப்ளீஸ்

ஹாய் தோழி,

1. கரிசலாங்கண்ணி,செம்பருத்தி,மருதாணி ( சிறிதளவு தான் போடவேண்டும் ), கறிவேப்பில்லை இவற்றை நன்றாக அரைத்து வெயிலில் உலர்த்த வேண்டும். பிறகு தேங்காய் எண்ணெய்,விளக்கெண்ணெயையும் நன்றாக காய்ச்சி அதில் காய்ந்த கலவயை போட்டு ஊறவைக்க வேண்டும். இந்த எண்ணெயை தினமும் தடவி வந்தால் முடி நரைக்காது, எங்கள் வீட்டில் இது போன்றுதான் இன்னும் என் அம்மாவும் நானும் பயன்படுத்துகின்றோம்.

2. மேலும் மருதாணி பற்றி கேட்டிருந்தீர்கள், வெறும் மருதாணியை மட்டும் போட்டு தேய்த்தால் முடி பழுப்பு நிறத்தில் தான் இருக்கும். அதனுடன் கரிசலாங்கண்ணி சேர்த்துக்கொண்டீர்கள் என்றால் பழுப்பாகாது.

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

Renuka Rajasekaran - வெள்ளி, 20/08/2010 - 15:00

1அவுன்ஸ்க.க சாறு(15ml)பசும் பாலுடன்(20ml) சேர்த்து காய்ச்சி காலை வெறும் வயிற்றில் பருகிவர இரத்த அழுத்தம் குணமாகும்...
1.மழைகாலத்தில் அதிகமாக கிடைக்கும் க.க லிவர் பிரச்சனையையும் குணப்படுத்த வல்லது.
2.வெள்ளையை விட,மஞ்சள் க.க ரொம்ப பவர்ஃபுல் தனி இலையாகவோ,பொடியாகவோ உண்டால் உடலுக்கு நல்லது.
3.அரைத்த விழுதாக அல்லது கூட்டு,கீரையாக சாப்பிடும்போது பல்,தோல்,முடிக்கு நல்லது.
4.அஜீரணம், முகச்சுருக்கங்கலைப் போக்கும் .அல்சர், பொன்ற பிரச்சனைகளை தீர்க்கும்.
5.As karisalankanni starts working in the system, it sets right the liver and cures jaundice, fatty liver, splenomegaly, hemorrhoids, indigestion etc. Regular intake strengthens the inner organs.

ஹாய் ஹேமா & ரேனுகா தங்கள் பதிலுக்கு நன்றி.மஞ்சள் பூ பூக்கும் கரிசலாங்கண்ணியை Use பண்றதா இல்லை வெள்ளை பூ பூக்கும் கரிசலாங்கண்ணியை Use பண்றதா. ஒரிஜினல் கரிசலாங்கண்ணி எது.தயவு செய்து எனது சந்தேகத்தை தீர்த்து வைக்கவும்
என் மாமா மகளுக்கு 17 வயது தான் ஆகிறது ஆனால் அதற்குள் பாதி நரைத்து விட்டது அவளுக்காகத்தான் கேட்கிறேன் மருதாணியையும் கரிசலாங்கண்ணியையும் அரைத்து அப்படியே பேக் போடலாமா அல்லது எண்ணையில் கலந்து தேய்க்கவா அப்படி செய்வதனால் தற்பொழுது இருக்கும் நரை முடி கருப்பாக மாறுமா பதில் கூருங்கள் ஹேமா ப்ளீஸ் சிரமத்திற்க்கு மன்னிக்கவும்
அறுசுவை தோழிகளே இள நரைமுடியை கருப்பாக்க முடியுமா முடியும் என்றால் அதற்க்கான டிப்ஸ் தெரிந்தால் யாரவது கூறுங்கள் ப்ளீஸ்

http://www.arusuvai.com/tamil/node/14742

நீங்க இந்த லின்க்ல போய் கேளுங்க, தேவா தெளிவா சொல்லுவாங்க.

அன்புடன்
பவித்ரா

மஞ்சள் க.க,கருவேப்பிலை,மருதாணி இவற்றை மையாக அரைத்து (தண்ணீர் அதிகமில்லாமல்)சிரு உருண்டை பிடித்து அதை தட்டையாக தட்டி நிழலில் 2,3 நாட்கள் காய வைக்கவும்(நடுவில் வரை காய வேண்டும்) பிறகு வெறும் தேங்காய் எண்ணையை சூடு பண்ணி,எண்ணையில் போட்டு அந்த ஆயிலை தினமும் தேய்த்து வரவும் சில நாட்கள் கழித்து உங்களுக்கே வித்தியாசம் தெறியும் .முடி கருமையாவது மட்டுமல்லாமல் அடர்த்தியாகவும் வளரும். தயங்காமல் இதை செய்யலாம்.

ka

karisallankanni with white flowers is available normally. so we can use that

-

கரிசலாங்கண்ணி, இலை எப்படி இருக்கும் என்று ஒரு படம் அனுபவும். ஏன் என்றால் எனக்கு அதனுடைய, பலன்கள் தெரியும். ஆனால் நான் அதை பார்த்தது இல்லை. உங்கள் விளம்பரம் பார்த்து, அதை எங்கள் மாமாவிடம் வயலில் எடுத்துவர சொன்னேன். இன்டெர்நெட்டில் கரிசலாங்கண்ணி, இலை, வேறு மாதிரி இருக்கிறது. ஆனால் எங்கள் மாமா, கொண்டு வந்த இலை, கரிசலாங்கண்ணி என்று சொல்கிறார். தயவு செய்து பதில் கூறுங்கள் ப்ளீஸ்

Hello mam
Don't get fear and i will clarify your doubts.
1 Mix Naalennei + karisalankanni(white) in equal proportion and heat till the boiling sound comes. Filter this mixture and save this herbal oil. For weakly twice (wednesday, Saturday) Apply this oil for 15 or 20 min and take hot water bath. Hair will not fall out and grows without any distortion.
2 If white hair(Narai) is present apply Nellimulli santhu ( dry nellikai + Unboiled milk) after the above mention oil is applied.
(The abve information is obtained from Vallalar writings and i finally clarified it throuh siddha specialist. weekly once take karisalankanni (white or yellow) it will protect our body)

3 Don't apply Maruthani to hair this causes the hair to become brownish. Normally it is used to eleivate "Podugu".

மேலும் சில பதிவுகள்