குழந்தை வளர்ப்பு

ஹலோ ஃபிரண்ட்ஸ்,
என் பையனுக்கு 4 வயது ஆகுது. ரொம்ப அடம்பிடிக்கிர்ரான். எனக்கு பொருமை குறைந்து கொண்டு போகிறது. குழந்தை என்றால் அடம்பிடிக்கும் தான் அதை எப்படி சமாளிபது. சொல்லுங்கள். தோழிகளா?

அன்புடன்
ஷாந்தி

ஷாந்தி, வணக்கம். நலமா?

குழந்தை அடம்பிடிச்சா அடிக்கவோ, அவன் கேட்டதை கொடுக்காவோ செய்யாதீங்க. கொஞ்ச நேரம் அழுதுட்டு அப்புறம் அவனே அமைதியாயிடுவான். அவன் அழும் போது நீங்க அடிச்சீங்கன்னா ஒரு முறை அல்லது ரெண்டு முறை அமைதியா இருப்பான். அப்புறம் அவனுக்கு அதுவே பழக்கமாகி அம்மா, என்ன மிஞ்சிப்போனா அடிக்க தானே செய்வாங்க, சரி, அடி வாங்கிட்டாவது நினைச்சத சாதிக்கலாம்னு நினைப்பான். பயம் விட்டுப் போகும். அதே போல அவன் ஏதாவது கேட்டு அடம் பிடிச்சா உடனே வாங்கி தராதீங்க. பரவாயில்லை நாம அழுத உடனே அம்மா வாங்கி தந்துடறாங்கன்னு பையன் அதே டெக்னிக்கை ஃபாலோ பண்ண ஆரம்பிச்சுருவான்.அழுது அழுது சோர்ந்து போயி அமைதியாயிடுவான். பையன் ஒரு அஞ்சு ஆறு வயசு ஆகும் போது நாம பொறுமையா (??) சொன்னா கேட்டுப்பான். அதுவரை நீங்கதான் கோபம் காட்டாம பொறுத்து போகணும். எப்பவாவது அவன் பண்ற தப்புக்கு அடிச்சீங்கன்னா அதுக்கு பயப்படுவான். மறுபடி அதுபோன்ற தப்பை பண்ண மாட்டான். அவனை அன்பாலேயே வழிக்கு கொண்டு வரலாம்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நன்றி கல்பனா,
நிங்க சொல்றது சரிதான், நான் அதிகமாதான் கோபப்படறன். நானும் என் குழந்தையை அடிக்காம வளர்க்கனும் தான் நினைக்கிறன். ஆனா, அவன் ரொம்ப அடம்பனும் போது அடுச்சிடறன். எனக்கு ரொம்ப கஷ்டமாதான் இருக்கு.பாவம் என் குழந்தை. நிங்க சொன்னதையும் பின்பற்றுகிறன்.
நன்றி
சாந்தி

மேலும் சில பதிவுகள்