குழந்தை (கலை) வளர்க்க வாங்க

ஹாலோ தோழிகளா,

குழந்தை வளர்த்தல் என்பது ஒரு கலை. அதை நிங்க எல்லோரும் எப்படி பண்றிங்கனு சொன்னா எல்லார்க்கும் உதவியா இருக்கும்.ஏன் இதை சொல்றன்னா ஒவ்வொருத்தரும் ஒரு முறையை பின்பற்றுஓம். அதை எல்லோரும் பகிர்ந்துட்டா உதவியா இருக்கும் இல்லையா? நம்முடைய தவறுகளை திருத்தவும், சிறப்பினை பாராட்டவும் சையலாம் அல்லவா, வாருங்கள் தோழிகளே.

பின்குறிப்பு:
இதில் நிறையா பிழை உள்ளது. பெரிய மனசுடன் மன்னிக்கவும்

நன்றி,
சாந்தி

குழந்தை என்றவுடன் குறும்புத்தனம் தான் நினைவிற்கு வரும்.என் மகனிற்கு வயது 2. அவன் எப்பொழுதும் என் கண்பார்வையிலேதான் இருப்பான். புரிந்து கொள்ள ஆரம்பித்தவுடன் நான் அவனிடம் பேசியபடியே வேளை செய்வேன். காய் வெட்டும் போது அதன் நிறம்,பெயர் சொல்லித்தருவேன்.அருகில் வேறு சிறுவர்கள் இல்லாததால் நானே அவனுடன் சிறுமியாக மாறி விளையாடுவேன்.பாட்டு வழியாக விளையாடும்போது அ,ஆ... 1,2,3 சொல்லிக்கொடுத்தேன், சிறுநீர் கழிப்பது முதல் குளிப்பது வரை பாடலுடன் விளையாட்டு செய்முறையாக கற்றுக்கொடுத்தேன்.பொருட்களின் பெயர்களை சொல்லிக்கொடுத்ததால் நான் தேடும்போது அவனிடம் ஒரு வார்த்தை கேட்டால் அவனே எடுத்து தருகிறான்.தினமும் 10ரூபாய் கொடுத்து உண்டியில் போடசொல்லி கொடுத்தேன்.இப்போது பணம் பார்த்தால் எடுத்து உண்டியில் போட்டுவிடுகிறான். புத்தகத்தில் படம்பார்த்து அவனே பெயர் சொல்கிறான்.கடந்த ஒரு வாரமாக பாட்டி வீட்டில் இருக்கிறான், அனைவரும் அவனைப்பற்றி சொல்கின்றார்களாம் வெறி கிளவர்,வெறி நைஸ் என்று.
அவன் பெயர்-PRAWINRAJA

en payanuku 11 months aguthu tata solla solli kudukiren 2 months ah innum solla matran unga payan solratha ellam appa understand panikitan enaku athavathu idea kuduanga pa plz

en payan 11 months innum solrathu puriyala tata 2 months ah solli kudukren solla matran.appadi solli kudukanum idea kudunga

en payan 11 months innum solrathu puriyala tata 2 months ah solli kudukren solla matran.appadi solli kudukanum idea kudunga

ஹாய் ரேனு,

பிரவின்ராஜ் எப்படி இருக்கிரான்.உங்கள் பதிவுக்கு என் நன்றி, நிங்கள் சொல்வதும் சரிதான். குழந்தைகளுக்கு அன்போடு பாடியும், விளையாடியும், சொல்லிக்கொடுத்தா அவர்களுக்கு சிக்கிரம் மனதில் பதியும். தோழிகளே வாருங்கள் உஙகள் பதிவுகலை அனுப்புங்கள் அடுத்த தலைமுறையை அன்போடு உருவாக்குவோம்.

அன்புடன்
சாந்தி

ரேணுகா, நானும், நீங்க உங்க பையனுக்கு டிரைனிங் குடுத்த மாதிரிதான் என் குழந்தைகளுக்கு குடுத்துட்டு வர்றேன். எனக்கு இரட்டை குழந்தைகள். ஆண் - 1, பெண் - 1. அவங்களுக்கு 2 வயசு ஆகுது. அவங்க யூரின் போனா அவங்க கிட்ட சொல்லி அவங்களையே ஈரமான டிரஸ்ஸை கழற்ற சொல்லுவேன். மாற்று துணி எங்கிருக்குன்னும் சொல்லி தந்துருக்கேன். அவங்களே போய் எடுத்துட்டு வந்து என் கைல தந்துடுவாங்க.

அதே மாதிரி சாப்ட தட்டை கொண்டு போய் சமையல் ரூம் சிங்க்ல போடுவாங்க. அவங்களுக்கு எட்டாது. நானும் பின்னாலேயே போய் வாங்கிக்குவேன். எந்த பொருள் எங்க இருக்கும்னு சொல்லி தந்திருக்கேன். எனக்கு தேவைப்படும்போது அந்த பொருள் பேர் சொல்லி கேட்டா அவங்களே கொண்டுவந்து தந்துடுவாங்க. அப்புறம், அவங்களுக்கு சாப்பாடு தர ரூமுக்கு போகும் போது ஹால்ல லைட், டிவி, பேன் எல்லாம் நிறுத்திட்டு போவேன். அதை பார்த்து அவங்களும் அப்படியே பண்ணுவாங்க. சாயந்திரம் 6 மணிக்கு கொஞ்சம் இருட்டா இருக்குற மாதிரி இருந்தா என் பொண்ணு லைட்டை போட்டுடுவா. அவங்க அப்பாவோட டிரஸ் எல்லாம் தெரியும். அப்பா, ஆபிசில் இருந்து வந்தவுடனே அவரோட லுங்கிய பொண்ணு எடுத்து தருவா. அவர் களைப்பா இருக்குன்னு விட்டாலும் அவ விடமாட்டா, செய்கைல சொல்லி கதகளியே ஆடிடுவா :D.

பையன் யூரின் போய்ட்டு அதை கிளீன் பண்றதுக்கு, வேலைக்கார பொண்ண அவர் மொழில பேர் சொல்லி கூப்டு கிளீன் பண்ண சொல்லுவாரு ;)

கீழே ஒரு துரும்பு இருந்தாலும் விடமாட்டாங்க உடனே குப்பை கூடைல போட போய்டுவாரு. குப்பை கூடை சமையல் ரூம்ல இருக்கும். அங்க தானே அவங்களுக்கு வேண்டிய விளையாட்டு சாமான்லாம் இருக்கும் . அதுக்குதான் இந்த பிளான். அவங்களுக்கு சாப்பாடு தரும்போது பறவைகள் பெயர், உடல் உறுப்புகள் பெயர், காய்கறி பழங்களின் பெயர், ஏபிசிடி,123 இப்படி சொல்லித் தருவேன். வீட்ல இருக்குற ஒவ்வொரு சின்ன பொருளோட பேரையும் சொல்லி அதனோட பயன்களையும் சேர்த்து சொல்லுவேன். அவங்களுக்கு இப்ப புரியலனாலும், நாம சொன்னது மைன்ட்ல ரிஜிஸ்டர் ஆகி இருக்கும். அது பின்னாடி யூஸ் ஆகும். உறவுமுறைகள் பெயர் சொல்லித் தருவேன். இன்னும் என் பசங்கள பத்தி பேசினா பேசிகிட்டே இருப்பேன். அதனால் இத்துடன்................:)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மஹேஷ்குமார் என் மகனுக்கும் 11 மாதம் தான்.இந்த வயது குழந்தைகளுக்கு எதையும் நாம் சொல்லி கொடுக்க கூடாது செய்து காட்ட வேண்டும்.நீங்கள் அவர் அப்பா போகிற பொழுது தினசரி டாடா காட்டுங்கள்..குழந்தை கைய்யை பிடித்து ஆட்டி காண்பிடுங்கள்...வாயால் நல்ல முகத்தை பார்த்து சொல்லி காண்பியுங்கள் பழகிடுவார்.

நல்ல த்ரெட்

இதனை பற்றி ஒரு விஷயத்தை சொல்ல ஒரு த்ரெட் போடலாம் என்று வந்தேன் சரியான தலைப்பு

குழந்தைகளுக்கு நிறம் சொல்லிக் கொடுப்பது பற்றி..சில குழந்தைகள் 2 வயதிலேயே பல நிறமும் கற்று விடுவார்கள்..சில குழந்தைகளுக்கு பல கலரும் 4 வயது கூட ஆனபின் தான் பழகும்.

எளிமையாக கற்றுக் கொள்ள நிறமுள்ள புத்தகமோ காண்பித்து கற்பிப்பதோ நடக்காது..எந்த ஒரு விளையாட்டு பொருளும் உபயோகிக்கும் பொருளும் அதை குழந்தையிடம் சொல்கிறபொழுது நிறத்தோடு சொல்லி கொடுங்கள்.

உதாரணத்திற்கு பின்க் பாள் எடுத்து தரவோ, ரெட் புத்தகம் எடுத்து தரவோ,க்ரீன் ஸ்டாகிங் கப் தரவோ இப்படியாக சொல்லலாம்...சீக்கிரம் பழகுவார்கள்..அல்லது ஒரு நல்ல களர்களரான கதை புத்தகம் வாங்கி அதுலுள்ள கலர்களோடு கதை சொல்லுங்கள்..என் மகளுக்கு இப்படி தான் பழகினேன்.
உதாரணத்திற்கு க்ர்ரின் மரங்கள் உள்ள காட்டில் வழியே ஒரு மஞ்சள் நிற காட்டேஜ் அதன் சிகப்பு நிற கதவு ,அதில் பர்பில் கோட் போட்ட கரடி..இப்படியாக சொல்லி விரல் வைத்து காட்டினாள் சீக்கிரம் பழகுவார்கள்.
நேற்று என் மகளுக்கு முதன் முறை சொல்லி கொடுத்த பழைய புத்தகம் கண்ணில் பட்ட பொழுது இந்த நியாபகமெல்லாம் வந்தது..அதனால் பகிர்ந்து கொள்ளலாம் என வந்தேன்

ஹாலோ தளிகா மேடம்,

how r u?

நிங்கள் சொல்வது சரிதான். நாம் எப்படி குழந்தைகள் முன் நடந்து கொள்கிறோமோ அதை பார்த்து தான் கற்றுக்கொள்கிறார்கள். நாம் சொல்லித்தருவதும் முக்கியம் அதைவிட அவர்கள் சேட்டை சையும்பொதும், அடம்பிடிக்கும்பொதும் எப்படி சமளிப்பது. (பொருமையுடன்)

அன்புடன்
சாந்தி.

மேலும் சில பதிவுகள்