வெங்காய உதிரிபக்கோடா (பேச்சுலர்ஸ்க்கு)

தேதி: August 20, 2010

பரிமாறும் அளவு: 3 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (8 votes)

 

வெங்காயம் -100 கிராம்
கடலை மாவு -50 கிராம்
பச்சரிசிமாவு -50 கிராம்
உப்பு -தேவைக்கு
சோடா உப்பு -சிறிதளவு
மிளகாய் தூள் -1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் -1/4 ஸ்பூன்
எண்ணெய் -பொரிக்க தகுந்த அளவு


 

வெங்காயத்தை வட்டமாக நறுக்கி உதிர்த்துவிடவும்.

மாவுகள்,உப்பு,சோடா உப்பு, மஞ்சள் தூள்,மிளகாய் தூள் கலந்து இட்லி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும்.

வெங்காயத்தை அதில் போட்டு கிளறி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.


உடனடியாக எளிதாக செய்துவிடக்கூடியது. மாலை வேளை ஸ்நாக்ஸாகவும், துரித உணவுகளுக்கு சைட் டிஷ் ஆகவும் சாப்பிட நன்றாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

இப்படி குறிப்பா அள்ளி தள்ளறீங்க, வாழ்த்துக்கள்.. ட்ரை பண்ணிட்டு சொல்றேன் ஆமி.

அன்புடன்
பவித்ரா

உன் வார்த்தை எனக்கு புத்துணர்ச்சியை தருகிறது!

தெரிஞ்சதை சொல்கிறேன். அவ்வளவு தான் பவி. மற்றபடி சமையல் ல இன்னும் கத்துக்குட்டி தான் :(

செய்து பார்த்துட்டு சீக்கிரமா வந்து பதில் சொல்லுங்க!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நல்லாருக்கீங்களா? நான் சமையலை பொறுத்தவரை ரொம்ப ரிஸ்க் எடுக்கவே மாட்டேன் எடுத்தாலும் ரொம்பல்லாம் நல்லா வராது ஏதாச்சு ஒன்னு அதிகமா இருக்கும் இல்ல கம்மியா இருந்து எனக்கே புடிக்காது. தெரிஞ்ச ஐட்டம் பன்னாகூட அவ்ளோ டேஸ்ட்டா இருக்காதுன்னு தான் நினைக்கறேன் வினீட்ட தான் கேக்கனும் அதுமட்டும் இல்லாம புதுசா எது சமைச்சாலும் வினீ பயந்துட்டு இதுவரைக்கும் தொட்டதே இல்லை. சமையல்லாம் அம்மாதான்(வினீ அம்மா). உங்க பக்கோடா பாக்கும் போதே பன்னனும்னு தோனுது கண்டிப்பா ட்ரை பன்னிப்பாக்கறேன்...

மீண்டும் பேசலாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

லதா
நானும் உங்களை மாறி தான். அதிகமா சமையலுக்கு நேரம் ஒதுக்க பிடிக்காது. பெரிய வேலையா இருந்தா செய்யபிடிக்காது. என்னா அவ்வளவா எனக்கு சமையல அனுபவம் இல்ல. அதுனால நான் ஏதாவது வித்தியாசமா செய்யப்போயி என் கெட்ட நேரம் சொதப்பிச்சுன்னா என் டைமும் வேஸ்ட், இது வரைக்கும் காப்பாத்துன பெயரும் (?) வேஸ்ட். ஆனாலும் அப்பப்ப கை ஊறும். ஏதாவது வித்தியாசமா செய்யச்சொல்லி. அப்படி செய்து சாப்பிட்டு நல்லா இருந்தா தான் என் ஹஸ் க்கு குடுப்பேன். இப்ப தான் கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கிட்டேன். எப்படி சமைச்சாலும் அதை சுவையா மாத்தவும், ஏதாவது சமைப்பதில் மிச்சமானால் கொட்டாமல் மறுபடியும் ஏதாவது புதுவிதமாய் மாற்றி சமைக்கவும்.

சமையல் ஒன்னும் பெரிய விஷயமே இல்ல. பக்குவம் சமைக்க சமைக்க தான் கிடைக்கும்.

இதை செய்துப்பாருங்கள். கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும் :)

நன்றி லதா. உங்க கருத்துக்கும்,வருகைக்கும். அடிக்கடி வாங்க. செய்தும் பாருங்க :)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

இந்தபக்கோடா வகைகளில் வெங்காய பாக்கோடா ஒரு ராஜாதான்.
பண்ணும்போதே வீடு பூரவும் வாசனை பரவி நம் பசியைக்கிளறிவிட்டுடும்.
நான் சோடா போடாமல், முத்லில் கொஞ்சம் தயிர்,கொஞ்சம் டால்டா
போட்டு உள்ளங்கையால தேய்த்து பேஸ்ட்மாதிரி பண்ணிட்டு அதில் பாக்கி
சான்களைப்போட்டு மிக்ஸ் பண்ணி செய்வேன்.

சரி தான் கோமு!

அந்த வாசனை தான் செய்யும் போதே வாயில் பாதியை அனுப்பும்.

தயிர்,டால்டா சேர்ப்பது புதுவிதமா இருக்கு. செய்து பார்த்துட்டு ரிஷல்ட் சொல்கிறேன்.

இது வெங்காய பஜ்ஜி செய்ய வட்டமா வெங்காயம் நறுக்கி வச்சுட்டு போன் அட்டன் பண்ண போய்ட்டேன். அதுக்குள்ளையும் என் மகன் கிச்சனில் நுழைந்து வெங்காயத்தில் அவன் வால் தனத்தை காட்டிட்டான். என் கணவருக்கு வெங்காயம் சேர்த்து எது செய்தாலும் பிடிக்கும். எந்த உணவிலும் வெங்காயத்தை தேடி சாப்பிடும் ஆள். வேறு வழியில்லாமல் உதிர்ந்த வெங்காயம் அனைத்தும் அதில் அப்படியே கொட்டி பொரித்து கொடுத்தேன். அதுக்கு வெங்காய உதிரி பக்கோடான்னு சட்டனா பெயர் வேற! ஒரே பாராட்டு தான். அது முதல் இவ்வாறு செய்து வைப்பது. பழைய குழம்பு என்றாலும் சத்தமில்லாமல் மனுஷன் சாப்பிடுவார்:)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமினா ,
வாசம் இங்கே வரைக்கும் வருது
லக்நோவிற்கு இப்போவே கிளம்பி விடவா?
மேலும் பல குறிப்புகள் எழுத வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

ஆமி... ஆஹா!!! எப்போ இருந்து சமையல் பண்ண ஆரம்பிச்சீங்க அறுசுவை'ல?? ;) அருமை. விரைவில் உங்களுக்கு சதம் அடிச்சுட்டீங்கன்னு வாழ்த்து சொல்லி இழை நானே துவங்கனும்'னு ஆசை எனக்கு :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அக்கா எடுத்ததும் என்ன இப்படி சதம்னு சொல்லிட்டீங்க?

25 தாண்டுவதே பெரிய விஷயம். அந்த அளவுக்கெல்லாம் தெரியதுக்கா!

ஆனாலும் நீங்கள் கொடுத்த இந்த ஊக்கம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.

நன்றி அக்கா!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமி,
இப்போ தான் உங்க சமையல் குறிப்பு படிச்சேன். நல்லாயிருக்கு. ஒவ்வொரு சமையல் குறிப்புக்கும் உங்க பதிவை பார்க்கும் போதே உங்க சமையல் ஆர்வம் தெரிஞ்சது. உங்க வார மெனு பார்த்தே நான் அசந்துட்டேன். இப்பொ சமையல் குறிப்பிலும் அசத்துறீங்க. சீக்கிரமே விளக்கப் படங்களுடன் குறிப்பு அனுப்புங்க. வாழ்த்துக்கள்.

ஹர்ஷா

உண்மையாகவே சமையலில் அதிக ஆர்வம் தான் பா. ஆனா என் ஹஸ்க்கு சமைக்கும் போது பெரிய எக்ஸ்பெர்ட் மாறி பாவ்லா பண்ணுவேன். ஆனா யாராவது வீட்டுக்கு விருந்தாளி வந்தா பயங்கரமா திணறுவேன்:(
என் அத்தை வீட்டில் எல்லாரும் எக்ஸ்பெர்ட். அங்கே காய்கறி நறுக்கும் வேலை மட்டும் தான் செய்வேன் :(

பாரட்டுக்களுக்கு நன்றி ஹர்ஷா!

கூடிய சீக்கிரமே விளக்கபட குறிப்பு தர முயற்சி செய்கிறேன்.

செய்து பாருங்க!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமினா உங்க வெங்காய உதிர்பக்கோடா சூப்பர் உங்க குறிப்பு இன்னும் இரண்டு இருக்கு பார்த்திவிட்டு பதிவு போடுறேன் விளக்கப்பட குறிப்புகளுடன் உங்களை எதிர்பார்கறேன் சிக்கிரம் வாங்க ஆமி....

அன்புடன்
நித்யா

எனக்கும் ஆசை தான் பா. என் காமிரா ரிப்பேர் போயிருக்கு. சோனி எரிக்‌ஷன் மொபைலில் படங்கள் எடுத்தேன். தெளிவே இல்லை. ஆரஞ்சு நிறத்தில் வருகிறது!

ஆர்வத்திற்கு மிக்க நன்றி பா.

செய்து பாருங்க. கண்டிப்பா இது உங்களுக்கு பிடிக்கும்!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

சீக்கிரம் வாங்க!

பக்கோடா செய்து வைச்சுட்டு உங்களுக்காக காத்துட்டு இருக்கேன். வந்ததும் கிச்சனுக்கு உங்களை அனுப்பி இந்த பக்கோடாவ சாப்பிட்டுட்டே மலபார நெய்சோறும்,மலபார் குழம்பும் பண்ண சொல்லி நான் ரெஸ்ட் எடுப்பேன். இந்த டீல் ஓக்கேயா?

சும்மா சொன்னேன். கண்டிப்பா வாங்க. நிறையா இடம் இருக்கு சுத்தி பாக்க. தாஜ்மகால்,காசி,பதேபுர்சிக்ரி,அலகாபாத் சுத்தி பக்கலாம். லக்னோவில்
பூல் புலையா, இமாம் பாரா, சோட்டா இமாம் பாரா,ரூமி தர்வாஷா......இன்னும் நிறைய இடம் இருக்கு! என் கையாலேயே சமச்சு அசத்துறேன்.

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி பா!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

வித விதமான சமயல் நல்ல பயனளிக்கிரது

ஆமினா ரொம்ப ஈசியான குறீப்பு, பகோடா என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும்,
எங்கு இருக்கீங்க.

ஜலீலா

Jaleelakamal

எந்த ஊரில் இருக்கீங்கள்.
ஜலீலா

Jaleelakamal

ஜலீலா அக்கா

உங்க பின்னூட்டம் பார்த்து ரொம்ப சந்தோஷமா இருந்தது. ஒரு சீனியர் வந்து வாழ்த்தும் போது வரும் சந்தோஷத்திற்கு அளவேது?!

நான் இருப்பது லக்னோ(உத்திர ப்ரதேஷ்).

எல்லோரையும் அழைத்து கொண்டு வாங்க அக்கா. உங்க வரவுக்காக காத்திருக்கேன் :)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

புது வரவுக்கு வாழ்த்துக்கள்.

ப்ரொபைல் பார்த்தேன். இந்தியாவில் பிறந்து மலேசியா சொந்த நாடானது. அப்படியே தலைகீழா மாற்றினா என் விவரம். மலேசியாவில் பிறந்து இந்தியா சொந்த நாடானது :)

நீங்களும் அறுசுவையில் பல நல்ல பயனுள்ள தகவல்கள்,படைப்புகள் தர வாழ்த்துக்கள்!!!!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

arusuvai friend hai

ஆமினா போன மாதம் உத்திர பிரதேஷம் தான் வந்திருந்த்தேன். எனக்கு சில டீடெயில்கள் வேண்டும்.
முடிந்தா உங்கல் மெயில் ஐடி கொடுங்க.
ஜலீலா

Jaleelakamal

முதலிலேயே சொல்லியிருக்க கூடாதா? மிஸ் பன்ணிட்டேனே!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

எனக்கும் இப்படி வட்டமாகப் பொரிப்பது பிடிக்கும் ஆமினா.

புனிதா
அப்ப செய்து பார்த்துட்டு ஆமினா கிட்ட சொல்லிடுங்க எப்படி இருந்ததுன்னு!

வெங்காயம் பொரிந்ததும் வரும் வாசனைக்கே சாப்பிட்டு விடுவேன். அவ்வளவு பிடிக்கும் வெங்காயம் என்றால்!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமினா வெங்காய உதிர்பக்கோடா நேற்று செய்து பார்த்தேன் மிகவும் அருமையக வந்தது என் கண்வருக்கும் பிடித்துவிட்டது
குறிப்புக்கு நன்றி.
உங்கள் ஸ்பேஷல் ஜட்டத்தை எல்லாம் கொஞ்சம் எடுத்துவிட்டுகிட்டே......... இருங்க, வாழ்த்துக்கள்

அன்புடன்
நித்யா

நித்யா

நன்றி பா செய்து பார்த்துட்டு சொன்னதுக்கு!

கணவருக்கு பிடித்ததா? கேக்க மிக்க மகிழ்ச்சி :))

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமி என் அண்ணாக்கு வெங்காய பக்கோடா/வெங்காய பஜ்ஜினா ரொம்ப இஷ்டம்.இந்த குறிப்ப விருப்ப பக்கத்தில சேர்த்திட்டேன்.. அண்ணா வீட்டுக்கு வரும் போது இல்லை நான் அங்க போகும் போது செய்து அசத்திட வேண்டியதுதான். பக்கோடாலாம் ரொம்ப கஷ்டமோனு நினைச்சிட்டு இருந்த்தேன்.. ஆனா இது படிக்க ரொம்ப சிம்பிளா இருக்கு ... இன்னும் பல எதிர்பார்க்கிறேன் ஆமியிடம் இருந்து... :)

சாந்தினி

செய்துட்டு சொல்லிடுங்க மறந்திடாம! அண்ணா என்ன சொன்னாருன்னும் சொல்லனும் சரியா?

//இன்னும் பல எதிர்பார்க்கிறேன் ஆமியிடம் இருந்து... :)//-சரக்கு தீரும் வரை குறிப்புகள் தருவேன்.ஆனால் சாந்தினிட்ட இருந்து செய்தாச்சு என்னும் பின்னூட்டங்கள் எதிர்பார்ப்பேன்!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

உங்க வெங்காய பக்கோடா ரெசிபி செய்து பார்த்தாச்சு.. அடுத்த வாரத்தில் ஊருக்குப் போகப் போறேன் அண்ணாக்கு செய்து தரதுக்கு முன்னாடி ட்ரையல் பார்த்தாச்சு.. ;) நேற்று சாயந்திரம் தான் செய்தேன்.. நல்லா வந்தது.. ஆனா அரிசி மாவு தான் கொஞ்சமா கலந்திட்டேன்.. ரொம்ப க்ரிஸ்பியா வரலை.. :)

சாந்தினி
அன்னைக்கே உங்க பின்னூட்டம் பார்த்தேன். பதிலிட தான் தாமதமாச்சு. மன்னிச்சு :)
செய்து மறக்காம சொன்னதுக்கு மிக்க மகிழ்ச்சி. அடுத்த முறை மாவு பார்த்து போடுங்க. நல்லா பொரிஞ்சாலே நல்லா க்ரிஸ்பியா வரும் :)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா