ஸ்கிரப்பிங் செய்யலாமா

ஹாய் தோழிகளே,நான் தினமும் கடலை மாவுடன் சிறிது சீனி சேர்த்து ஸ்கிரப்பிங்காக உபயோகிக்கிறேன்,எனது சருமம் கம்பைனேஷன் சருமம்,தினமும் இந்த மாதிரி ஸ்கிரப்பிங்க் உபயோகிக்கலாமா?தெரிந்தவர்கள் கூறுங்கள்

மஞ்சு ,
பொதுவா டெட் செல்ஸ்சை நீக்குவதற்குதான் நாம் ஷ்கரப் உபயோகப்படுத்துகிறோம்.
இதனை மாதம் ஒருமுறை பயன்படுத்தினால் போதும்.
பார்லரில் கூட மாதத்தில் முதல் தடவை ஷ்கரப் உபயோகப்படுத்தியும், 15 நாள் கழித்து மீண்டும் ஃபேசியல் செய்யும்போது ஷ்கரப் உபயோகப்படுத்தமாட்டார்கள்.

Don't Worry Be Happy.

மஞ்சு ஸ்ரப்பிங்கு இப்படி ஒரு வழி இருக்கா? நான் அரிசி மாவுடன் தயிர் கலந்து அதில் தான் ஸ்க்ரப் பண்ணுவேன். 15 நாட்களுக்கு ஒரு முறை பண்ணுவேன்.

ரொம்ப நன்றி ஜெயலக்ஷ்மி,இது இயற்கையான பொருள்கள்தானே,இதனால் ஸ்கின் முரடாக மாறுமா?யாலினி கடலைமாவு எண்ணெய் சருமம் உடையவர்கள் உபயோகிப்பார்கள்,உங்களுக்கு வறண்ட சருமமா?

மேலும் சில பதிவுகள்