வெற்றி பெற்றோருக்கு வாழ்த்துக்கள்

இந்த இழை தொடங்கப்பட்டதன் நோக்கம், கவிதை போட்டி வெளியானதும் வெற்றி பெற்றவர்களையும், பங்கேற்றவர்களையும் பாராட்ட இழை தேடினேன் கிடைக்கவில்லை, அதனால் தான் நானே ஆரம்பித்துவிட்டேன்.

கவிதை மட்டுமல்ல யாருக்கு வெற்றிக்கான வாழ்த்து சொல்வதாயினும் உங்கள் வாழ்த்துக்களை நீங்கள் இங்கு வந்து பதிவிடலாம்.

கவிசிவா, இஷானி கவிதைபோட்டியில் வென்றதற்கு என் மனம் கனிந்த இனிய நல்வாழ்த்துக்கள். நீங்கள் இருவரும் இதே போல தொடர்ந்து கவிதைகளை தரவேண்டும் என வாழ்த்துகிறேன். எனக்கும் கவிதை எழுத சொல்லிங்குடுங்களேன் பா ;)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கவிதைப் போட்டியில் வென்று பரிசைத்தட்டிச்சென்ற கவிசிவாவுக்கும், இஷானிக்கும் வாழ்த்துக்கள்.

எனது கவிதையய் அங்கிகரித்து மதிபெண் இட்ட நடுவர் குழுவிற்கு நன்றிகள்.

Don't Worry Be Happy.

Ithayam kanintha Vaazhththukkal. . .

ரசிராஜா
முத்துகவி
ரம்யா
மது
தேன்மொழி
ஷேக் அண்ணா
இஷானி
ஆனந்தி ஐபிஎஸ்
இந்து
கவிசிவா
கீதா
ஜெயலெட்சுமி
Mrs. ஜெயசீலன்
கீர்த்திநாதன்

எல்லாருக்கும் என் வாழ்த்துக்கள். எனக்கு நானே வாழ்த்து சொன்னா நல்லா இருக்காதே! அதான் ஆமி பெயர் விடுபட்டு விட்டது:)

வெற்றி பெற்ற தோழி கவிசிவா,இஷானி அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

எல்லார் கவிதையிலும் நிறைய வரிகள் என்னை மிகவும் கவர்ந்தது, ஒவ்வொரு வரிகளாய் திரட்டி பதிவிட நினைத்தேன், அண்ணாவிற்கு பயந்து பதிவிடவில்லை. எல்லாருடைய கவிதையுமே அருமை, சொல்ல வார்த்தை இல்லை. கண்களில் கண்ணீர் திரவியம் தேடி.

பாதி வரிகளை காப்பி பண்ணி பதிவு போட ரெடியாயிட்டேன், பார்த்தாவே வால் மாதிரி நீலமா இருந்தது அதான் நான் ரசித்த வரிகளை இங்கு பதிவிட முடியவில்லை.

போட்டியில் பங்கெடுப்பதே முக்கியம், பங்கேற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.தொடரட்டும் உங்கள் கவிப்பணி.

அன்புடன்
பவித்ரா

வெற்றி பெற்ற கவிக்கும்,இஷானிக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
பங்கு பெற்ற எல்லா அன்பு உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்
மதிப்பெண்கள் வழங்கி தேர்வு செய்த நடுவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
இதுபோன்ற போட்டிகள் வைத்து கவியார்வம் வளர்க்கும் அட்மின் நண்பருக்கு சிறப்பு நன்றியும் ,வாழ்த்துக்களும்

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

கவிதை போட்டியில் கலக்கிய கவிசிவா!

’க” ’வி’’ தையின் ’’சி’’றப்பினால் முதல் பரிசை தட்டி வந்துட்டீங்கோ!
’வா’’ழ்த்துகள்!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

விடு பவி. அண்ணா ஆரம்பிச்சது கவிதை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்காக. நீ ஆரம்பிச்சது வெற்றி பெற்றவர்களுக்காக (பொதுவாக)

அதனால் யார் வெற்றி பெற்றாலும் இங்கே பதியலாம் ஓக்கே வா?
இதுக்கு போய் அண்ணா கிட்ட மன்னிப்புலாம் கேக்கலாமா?

செண்பகா கழுத்துல 10 பவுன் செயின் பார்த்தேன். அதை கேளு. சரியா போகும்:)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

சத்தியமா எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை. அவ்வளவு சந்தோஷமா இருக்கு. ஏன்னா நமக்கெல்லாம் கவிதை ரொம்ப தூரம்னு நினைக்கிற(இப்பவும் அப்படித்தான்)ஆள் நான்.
நன்றி பாபு அண்ணா. இப்படி ஒரு வாய்ப்பை நீங்க ஏற்படுத்திக் கொடுக்கலன்னா நிச்சயம் கவிதை எனக்கு சாத்தியம் இல்லை.

கவிதைப்போட்டியில் பங்கு கொண்ட தோழிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். கவிதைகள் ஒவ்வொன்றும் உணர்வுப்பூர்வமாக இருந்தது. பலவற்றை வாசிக்கும் போது கண்ணீர் வழிந்தது.

வாழ்த்து தெரிவித்த தோழமை உறவுகள் அத்தனை பேருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வெற்றி பெற்ற கவிசிவா, இஷானி மற்ரும் அழகுற கவிதை எழுதிய மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.கவிதைப்போட்டியின் ஆரம்பமே அமர்களமாக உள்ளது.அறுசுவை குழுமத்திற்கும் வாழ்த்துக்கள்

arusuvai is a wonderful website

மேலும் சில பதிவுகள்