தேதி: August 24, 2010
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
அரிசி - 1 1/2 கப்
துவரம் பருப்பு - 3/4 கப்
முருங்கைக்காய் - 3
கத்திரிக்காய் - 3
சின்ன வெங்காயம் - சிறிதளவு
புளி - நெல்லிக்காய் அளவு
தக்காளி - 2
மஞ்சள்தூள் - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
வறுத்து அரைக்க:
கடலைப்பருப்பு - 1/4 கப்
தனியா (மல்லி) - கால் கப்
மிளகாய் வற்றல் - 7 (காரத்திற்கு ஏற்ப )
பெருங்காயம் - சிறிதளவு
தேங்காய் துருவல் - 1/4 கப் (கொப்பரையாக இருந்தால் நன்றாக இருக்கும்)
தாளிக்க:
கடுகு - சிறிதளவு
கடலைப்பருப்பு - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி, முந்திரி - அலங்கரிக்க
வெங்காயத்தை தோல் உரித்து வைத்துக் கொள்ளவும். முருங்கைக்காய், கத்திரிக்காய் மற்றும் தக்காளியை நறுக்கி வைத்துக் கொள்ளவும். அரிசி, பருப்பு இரண்டையும் ஒன்றாக சேர்த்து குக்கரில் குழைய வேக வைத்துக் கொள்ளவும்.

பிறகு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு, மிளகாய் வற்றல், தனியா மற்றும் பெருங்காயம் சேர்த்து வறுத்துக் கொள்ளவும். தேங்காயை தனியாக வறுத்துக் கொள்ளவும்.

வறுத்தவற்றை அனைத்தையும் ஒன்றாக மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.

பிறகு வாணலியில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கி பிறகு நறுக்கின முருங்கைக்காய், கத்திரிக்காய், தக்காளி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு புளியை கரைத்து ஊற்றி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

காய்கறிகள் வெந்ததும், பொடித்து வைத்துள்ள பொடியை தூவி சிறிது நேரம் கொதிக்க வைக்கவும். பிறகு வேக வைத்த அரிசி, பருப்பு இரண்டையும் இதில் போட்டு நன்கு கிளறவும். நன்கு கலந்த பிறகு சிறிது நேரம் கழித்து அடுப்பை அணைத்துவிடவும். மேலே கொத்தமல்லி தழை மற்றும் நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து பரிமாறவும். சுவையான சாம்பார் சாதம் ரெடி..

Comments
அன்பு ராதா சிஸ்டர் ..இது
அன்பு ராதா சிஸ்டர் ..இது நல்லா இருக்குதோ இல்லையோ இன்று அல்லது நாளை டெஸ்ட் பன்னி டேஸ்ட் சொல்கிறேன் ஓக்கே வா..
ஆனா பார்த்தால் நாக்கில் எச்சில் ஊறுதுப்பா..நோன்பு டைம்வேற.. இப்படியா மனுஷனை கொல்வது?நன்றி
இந்தா வைத்துக் கொள் என்னுடைய முதல் ஃபைவ் ஸ்டார்1
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
ஷேக் அண்ணா தங்களுடைய பாராட்டு
ஷேக் அண்ணா
தங்களுடைய பாராட்டு தான் முதல்ல கிடைச்சுருக்கு.. தேங்ஸ்... வீட்டுக்குவாங்க.. விருந்தும் மருந்தும் 3 நாளைக்குனு சொல்லாம நிறைய சமைச்சு போடுறேன்.. ஆனால் ஒரு கண்டிஷன். என்னால வெஜ் மட்டும் தான் சமைத்துதர முடியும்... மறுபடியும் ஒரு முறை நன்றி அண்ணா.. நீங்க தான கேட்டீங்க எப்படி பண்ணனும்னு.. அதான் பண்ணிக்காமிச்சுட்டேன். அண்ணிகிட்ட சொல்லி சமைக்க சொல்லுங்க..
"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"
ராதா ஹரி
அட்மின் அவா்களுக்கு
பாபு அண்ணா... என்னுடைய குறிப்பை வெளியிட்டதற்கு மிக்க நன்றி... என் கணவரிடம் காமித்தேன்.. அவா் என்னை கேலிபண்ணிக் கொண்டிருக்கிறார்.... உன் சமையல் போட்டாவா வருதேனு....... தேங்ஸ்ணா... நிறைய குறிப்புகள் அனுப்ப சொல்லி பாராட்டிட்டார்....
"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"
ராதா ஹரி
ராதா!
உ
சாம்பார் சாதமா! பேஷ் பேஷ் ரொம்ப நன்னாருக்கும்!
பரக்காவட்டிக்கு பத்து பிளேட் பார்சல்!
வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...
ராதா
ராதா
வாழ்த்துக்கள்.. சாம்பார் சாதம் பாக்கவே அழகு.. அதில் டெக்கரேஷன் வேற செய்து கொல்றீங்க..
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
ராதா
விருப்பப்பட்டியலில் சேர்த்துட்டேன். வாழ்த்துக்கள். செய்துட்டு சொல்கிறேன்!
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
ராதா மேடம்
ராதா மேடம்,
சாம்பார் சாதம் அழகா இருக்கு
மேலும் பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்,
கவிதா
ராதா,
ராதா,
சாம்பார் சாதம் பார்க்க ரொம்ப நல்லாயிருக்கு. படங்களும் பளிச்சுனு இருக்கு. முதல் குறிப்பே அசத்தலா கொடுத்து இருக்கீங்க. வாழ்த்துக்கள்.
ராதா மேடம், உங்களுக்கு
ராதா மேடம், உங்களுக்கு சமைக்கலாம் தெரியுமா? சொல்லவே இல்ல ;) பார்க்கும்போதே நாக்கில் தண்ணி வருதுப்பா. நிஜம்மா. நான் நாளைக்கு பண்ணி டேஸ்ட் பார்த்துட்டு சொல்றேன் பா. என்னோட பேவரட் டிஷ் பா. என்ன ஒரு குறை எனக்கு இங்க சின்ன வெங்காயம் கிடைக்காது :( ஒரு கிலோ வாங்கி அனுப்பி வைங்க. வாழ்த்துக்கள். தொடர்ந்து அனுப்புங்க சமையல் குறிப்புகளை. நாங்க புதுசு புதுசா செஞ்சு சாப்டுட்டு இருக்கோம். :)
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
மாமி...
பத்து ப்ளேட் என்ன மாமி... நீங்க போறும் போறும்னு சொல்ற அளவுக்கு செய்து கொடுத்துட்டா போச்சு... உங்களுக்கு இல்லாததா?....
"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"
ராதா ஹரி
ரம்யா
ரம்யா உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி... எல்லாரும் எந்த அளவுக்கு ஏத்துப்பீங்கனு தெரியாம தான் அனுப்பினேன். ஆனா எல்லாரும் பாராட்டிருக்கீங்க... தேங்ஸ்..
"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"
ராதா ஹரி
ஆமினா
உங்க பாராட்டுக்கு ரொம்ப நன்றி ஆமினா... சீக்கிரம் செய்துட்டு சொல்லுங்க...
"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"
ராதா ஹரி
கவிதா
கவிதா ரொம்ப நன்றிப்பா.. உங்கள பாத்துதான கத்துக்கறோம்... உங்களோட வாழ்த்துக்கள் தான் ஊக்குவிக்கும்.. நன்றி..
"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"
ராதா ஹரி
ஹர்ஷா, உங்க பாராட்டுக்கு
ஹர்ஷா, உங்க பாராட்டுக்கு மிக்க நன்றிப்பா... இதுதான் முதல் குறிப்பு.. அதனால் ஒரு சிறு பயம் இருந்தது.. ஆனா இப்போ இல்ல...நீங்க எல்லாரும் பாராட்டினது சந்தோஷமா இருக்கு...
"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"
ராதா ஹரி
கல்ப்ஸ்
என்ன கல்பனா இப்படி சொல்லிட்டீங்க... 5 வருஷமா என் கணவரை நான் படாதபாடு படுத்தி கத்துக்கறேன்... சீக்கரம் டேஸ்ட் பண்ணி பாத்துட்டு சொல்லுங்க.. சின்ன வெங்காயம் என்ன... வீட்டுக்கு வாங்க சமையலே செய்து தரேன்... கல்ப்ஸ்-க்கு இல்லாததா?
"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"
ராதா ஹரி
Wow. Good recipe. Thank u for
Wow. Good recipe. Thank u for this. I'll try in my home n then i'll write to u. thank u again for ur sambar sadham recipe.
Bye
சித்ரா
உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி. கண்டிப்பா செய்து பாத்துட்டு சொல்லுங்க எப்படி இருந்தது என்று.. நன்றி
"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"
ராதா ஹரி
ராதா ஹரி
இன்று சாம்பார் சாதம் செய்து பார்த்தேன் மிக அருமையா இருந்தது .
ராதா ஹரி
அன்பு ராதா ஹரி,
இதே போலத்தான் நானும் செய்வேன். முன்பெல்லாம் நானும் புளி கரைத்து, கொதிக்கவிட்டு, சேர்த்துக் கொண்டிருந்தேன். இப்பல்லாம், ஒரு சுளை புளியை வறுக்கும் பொருட்களோடு சேர்த்து, வறுத்து, பொடித்து, சேர்க்கிறேன்.
காய்களிலும் - பீன்ஸ், காரட், பட்டாணி, காலிஃப்ளவர், முள்ளங்கி, என்று எல்லாவற்றையும் சேர்த்து விடுவேன்.
நிறைய குறிப்புகள் கொடுத்திருக்கிறீர்கள். ஒவ்வொன்றாகப் பார்க்கிறேன்.
இன்னும் நிறைய குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள்!
அன்புடன்
சீதாலஷ்மி
அன்புடன்
சீதாலஷ்மி
ரம்யாஸ்ரீனி, சீதாம்மா
ரம்யா ஸ்ரீனி
செய்து பார்த்து பின்னுாட்டம் கொடுத்ததற்கு மிக்க நன்றிப்பா..
சீதாம்மா
என்னுடைய குறிப்புக்கு பின்னுாட்டம் கொடுத்ததுக்கு மிக்க நன்றி.. அடுத்த முறை செய்யும்போது புளியை வறுத்து அரைத்து செய்கிறேன். நீங்க சொல்ற மாதிரி எல்லாகாயும் சேர்த்து கண்டிப்பா செய்து பாரக்கிறேன். மிக்க நன்றிம்மா..
"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"
ராதா ஹரி
ராதா ஹரி
இந்த குறிப்பு இத்தனை நாளா நான் கவனிக்கல போலும்... இன்று தான் பார்க்கிறேன்... பார்த்ததும் மிஸ் பண்ணிட்டோமேன்னு ஃபீல் ஆயிடுச்சு!!! அத்தனை சூப்பரா இருக்கு. நாளை இது தான் எங்க வீட்டு ஸ்பெஷல். செய்துட்டு வரேன் :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ராதாஹரி
ரொம்ப சுவையா இருந்தது. எல்லாருக்கும் பிடிச்சுது. இனி அடிக்கடி செய்வேன். மிக்க நன்றி :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
kindly mention the amount of
kindly mention the amount of water to be poured for the rice