'அப்பா' வான நாகை. சிவா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

அறுசுவை உறுப்பினர்களுக்கு திரை விமர்சனம் பகுதி மூலம் நன்கு அறிமுகமானவரும், எனது உடன் பிறவா சகோதரரும் ஆகிய நாகை. சிவா அவர்களின் துணைவியாருக்கு நேற்று இரவு ஆண் குழந்தை பிறந்துள்ளது. "தந்தை" ஸ்தானத்திற்கு பதவி உயர்வு பெற்றுள்ள சிவா அவர்களுக்கு, இந்த மன்றத்தின் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். குடும்பத்தின் புதிய வரவு எல்லா நலன்களையும் கொண்டு வரட்டும்.

பி.கு: சில ஒற்றுமைகள் :-)

செண்பகாவிற்கு டெலிவரி நடந்த அதே ஹாஸ்பிடல், அதே டாக்டர், அதே தேதி (மாதம் வேறு:), கிட்டத்திட்ட அதே இரவு நேரம். அதே போல் இவர்களும் ஆபரேஷன் செய்துவிடலாம் என்று முடிவு செய்த நேரத்தில், நல்ல விதமாக நார்மல் டெலிவரி ஆகியுள்ளது. :-)

திரு. நாகை சிவா,
உங்களுக்கும், உங்கள் மனைவிக்கும் எனது வாழ்த்துக்கள். குட்டி சிவா எப்படி இருக்கான்? என்ன பேரு வைக்கப் போறீங்க? கண்டிப்பா எங்க எல்லாருக்கும் ஸ்வீட் கொடுக்கணும். குழந்தை நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ இறைவனை வேண்டி, வாழ்த்துகிறேன்.

நாகை சிவா அவர்களுக்கும் மற்றும் அவர் துணைவியாருக்கும் ,உங்கள் குழந்தைக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் எல்லா நலங்களையும், வளங்களையும் பெற்று வாழ வேண்டும் என பிரார்த்திக்கின்றேன்

என்றும் அன்புடன்,
கவிதா

தந்தை ஆகிவிட்ட உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். தாயும் குழந்தையும் நலமென அறிந்ததில் மகிழ்ச்சி. புது வரவு எல்லா நலனும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்,
இஷானி

நாகை சிவா அண்ணாவுக்கும் அவர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்,

புதிய வரவு இனிய வரவாக வாழ்த்துக்கள்,

தாயும் சேயும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.

அன்புடன்
நித்யா

நாகை சிவா அண்ணாவுக்கும் அவர் துணைவிக்கும் என் வாழ்த்துக்கள். குழந்தை வாழ்வில் எல்லா வளங்களையும் பெற்று சிறப்பாக இருக்க பிராத்திக்கின்றேன்

அன்புடன்
மகேஸ்வரி

valthukal siva.

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள், ஓணம் திருநாள்ல உங்க வீட்லயும் ஒரு புது வரவா. தாயும் சேயும் நல்லா இருக்காங்களா? என்ன பேரு வைக்க போறீங்க. உங்கள் மனைவிக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவிச்சுடுங்க.

வாழ்த்துகள் சிவா அண்ணா

திரு. சிவா அவர்களுக்கும் அவரது துணைவியாருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
குட்டிப் பாப்பாவுக்கு ஒரு முத்தம்.

திரு மற்றும் திருமதி சிவா அவர்களுக்கு..

என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.குழந்தையுடனான இனிமையான தருணங்களை தவற விடாதீர்கள்.அதன் ஒவ்வொரு அசைவும் நமக்கு மகிழ்ச்சியை தரக்கூடியது..

கவிதா சிவகுமார்

anbe sivam

மேலும் சில பதிவுகள்