முதல் வாரம் - கர்ப்பம் !!என்னென்ன நிகழும்? சொல்லுங்களேன்!

அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்,
எனக்குத்திருமணமாகி 3 மாசமாகுது. மாதவிலக்கு 10 நாள் தள்ளிப்போச்சு. வீட்டில் டெஸ்ட் செய்து பார்த்தப்ப +பொஸிடிவ் என்று வந்திச்சு(டெஸ்ட் செய்ய முதல் 2 வாரமும் அடி வயிற்று நோ, ரொம்ப அசெளகரியமான உடல் நிலை, மந்தம், இப்படி இருந்திச்சு) இன்னும் டொக்டரிடம் உறுதி செய்துகொள்ளவில்லை. செப்டம்பர் முதல் வாரம்தான் அப்பொயிண்ட்மெண்ட் கிடைச்சுது. அடி வயிறுமட்டும் அப்ப அப்ப நோகுது? இது கர்ப்பத்துக்கான அறிகுறிதானா?


கங்குராஜுலேஷன்!ஒன்னும் பயப்பட வேண்டாம்!இது மசக்கைதான்!

ஆனாலும் வயத்துல வலி இருக்குனு சொல்றேள்!பக்கத்துல இருக்கற டாக்டர் கிட்ட காமிங்கோ!

//முதலில் கீழ்ப்படிவதற்கு கற்றுக்கொள்; பிறகு கட்டளையிடும்பதவி உனக்கு தானாகவே வந்து சேரும்.// இது நேக்கு ரொம்ப பிடிக்கும்!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

எனக்கு எப்பவுமே “அந்த” நாட்கள் சொல்லி வைச்சால்போல டாண்னு 25-28 நாட்களுக்குள் வந்திடும். அதனால் தான் தள்ளிப்போனப்போ உடனேயே “காத்திருந்த விசயம்” தானான்னுமனம் துள்ளிச்சு!. 2 நாள் முன்னாடி வீட்டில் ‘டெஸ்ட்” பண்ணிப்பார்த்தப்போவும் ‘பொஸிடிவ்” ரிசல்ட் வந்திச்சு. இருந்தாலும் வைத்தியரிடம் உறுதி செய்த பின்புதான் நிம்மதியா இருக்கும். அதைவிடவும் அடி வயிறு அப்போ அப்போ வலிக்குது. அதனால தான் கொஞ்சம் பயந்துட்டேன்.

நீங்க வாழ்த்தினது ‘நிஜம்மாவே” மகிழ்ச்சியா இருக்கும்மா. அப்படியே பலிக்கணும்னு கடவுள்கிட்ட வேண்டிக்கிறேன்.

மத்தவங்களோட கருத்துக்கேட்கவும் ஆவலுடன்.

பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயம் கொள்ளல் ஆகாது பாப்பா'

அடடே! மாமியை அம்மான்னு சொல்றேளா!

’’பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயம் கொள்ளல் ஆகாது பாப்பா'

இதுவும் நேக்கு புடிக்கும் தெரியுமோ!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

அஞ்சனா உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் பயப்படாம இருங்க அனுபவசாலிகள் நிறையபேர் வருவாங்க, உங்க பதிவ பார்த்ததும் பதில் போடம போக மனம்மில்லை மீண்டும் வாழ்த்துக்கள்.

அன்புடன்
நித்யா

அஞ்சனா
முதலில் உங்களுக்கு வாழ்த்துக்கள்.. உங்கள் எதிர்பார்ப்பு கண்டிப்பாக பூர்த்திஅடையும். கவலைப்படாதீா்கள். 40 நாட்கள் ஆகிவிட்டது என்றால் உடனடியாக டாக்டரிடம் சென்று உறுதி செய்து கொள்ளுங்கள். வீட்டில் பாஸிட்டிவ் ரிசல்ட் தான் வந்துள்ளது என்று கூறியுள்ளீா்கள். இன்றே டாக்டரை அணுகி மறுஉறுதி செய்து கொள்ளுங்கள். கர்ப்ப காலத்தில் இம்மாதிரி பல பிரச்சனைகள் வரத்தான் செய்யும். ஆனால் அவை மனதளவிலும் உடலளவிலும் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. பயப்படாமல் இருங்கள். டாக்டரிடம் சென்று வலியை கூறி மருந்து சாப்பிடுங்கள். அனைத்தும் சுபமாக அமையும்.

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

வாழ்த்துக்கள்,

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது அதனினும் அரிது பெண்டிராய் பிறத்தல், அதனினும் சிறந்தது "தாய்மை" ,

இந்த சொல்லை கேட்கும் போதே தாய்மை அடந்துவிட்டதைப்போல உணருகிறோம் இல்லையா?

கடினமான வேலைகள் செய்யாதீர்கள், மருத்துவர் ஆலோசனைப்படி நடந்து கொள்ளுங்கள், சத்தான உணவு மற்றும் பழங்கள் உண்ணுங்கள், மேலும் நல்ல விஷயங்களை படியுங்கள், நல்ல பாடல்களை காதுகொடுத்துக்கேளுங்கள், இறைவனை பிரார்த்தியுங்கள்.

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

எனக்கு திருமணம் ஆகி 1 வருடம் ஆகிரது.
தூரம் தள்ளி போகவில்லை. ஆனால் என்ன சாப்பிட்டாலும் குமட்டலாக வருகிறது. வெளியே சென்ரால் தலை சுற்றுகிறது. யாரது ஆலோசனை சொல்லுங்கள்

அஞ்சனா எனக்கும் இப்படித்தான் இருந்தது. டாக்டர் உறுதி செய்த பிறகும் அடிவயிறு ரொம்ப வலிக்கும். முதலில் ரொம்ப பயமாக இருந்தது. சிலபேருக்கு இப்படித்தான் இருக்கும். அதனால் பயம் வேண்டாம். டாக்டர் கிட்டே போயிட்டு வந்து எழுதவும்.

முதல் முதலா வந்து வாழ்த்தும் கருத்தும் சொன்னபோது, 'மனசு நிறைஞ்சு 'அம்மான்னுதான் கூப்பிட்த்தோணித்து! நீங்க பிரியப்பட்டா 'மாமின்னே கூப்பிடறேன்.

ஒவ்வொருத்தருடைய கருத்தும் மனசுக்கு தெம்பையும்,மகிழ்ச்சியையும் தருது. எப்பவுமே 'தன்னம்பிக்கை நூல்கள், சுவாமி பக்தி பாடல்கள் கேட்பதே வழக்கமா வைச்சிருக்கேன்.

உங்க எல்லோர் வாழ்த்தும் பலித்து வெகு சீக்கிரம் வைத்தியரிடம் உறுதி செய்துகொண்டு வந்து என் மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்கிறேன்.

திருமணமான ஒவ்வொரு பொண்ணுமே பூரணம் அடையிறது 'தாய்மை" என்னும் மேன்மையில் தானே!

அந்தப்பூரணத்துக்காகவே காத்திட்டிருக்கேன்; 'நாற்பது நாள் கணக்கு எப்படி பார்க்கிறதுன்னு தெரியலை!.

பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயம் கொள்ளல் ஆகாது பாப்பா'

"மாமி" மனசு நிறைஞ்சு உங்க வாழ்த்துச்சொன்னப்பவே; உங்களை நேக்கு ரொம்ப பிடிச்சுடுத்து தெரியுமோன்னோ:)

பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயம் கொள்ளல் ஆகாது பாப்பா'

மேலும் சில பதிவுகள்