கொழந்தைக்கு தாய்

ஹாய் தோழிகளே தாய்க்கு மகளா இருப்பது சிறந்ததா இல்லை ஒரு கொழுந்தைக்கு தாயாக இருப்பது சிறந்ததா
உங்கள் பதிவுகளை இங்கே சொல்லுங்கள்

நான் இப்போது ஒரு தாய்க்கு மகள் என்ற ஸ்தானத்தி மட்டுமே கொண்டிருக்கிறேன், இதுவே சிறந்ததாக படுகிறது. ஆனால் என் தாயை போல பொறுமையா அன்போடு எது சொன்னாலும் கோவிச்சுக்காமா சிரிச்சுண்டே இருக்க என் மகளிடன் என்னால் எப்படி இருக்க போறேனோ நினைக்கும் போது கொஞ்சம் சிரமமா தான் இருக்கும்ன்னு தோணுது ஆனா, ரெண்டும் மிகவும் முக்கியம்.

அன்புடன்
பவித்ரா

இரண்டுமே சிறந்தவைதான். இதில் சிரமம் எங்கிருந்து வருகிறது.

ஒரு நல்ல மகள், பிற்காலத்தில் நல்ல தாயாக இருப்பார். இது ஒரு அழகான வாழ்க்கைச் சுழற்சி.

சிரமம் என்று எதுவுமே இல்ல.. நம்மள நம்ம அம்மா சமாளிக்கலையா... அவுங்களே சமாளிச்சுட்டாங்க.. நாம சமாளிக்க மாட்டோமா நம்ம பசங்கள.. ஆனா இந்தக்கால பசங்க ரொம்ப சுட்டிபா... என் அம்மா கூட சொல்லுவாங்க, நாங்களாம் உங்கள அடிச்சு திட்டியா வளத்தோம் அப்படின்னு ,அப்பறம் சொல்லுவாங்க, இந்த காலத்து பசங்க கொஞ்சம் Hyper active ஆ இருக்காங்க.. அவுங்கள பாத்துக்கறது கஷ்டம் தான்னும் சொல்லுவாங்க.. என்ன கேட்டா எதுவுமே சிரமம் இல்ல ராதிகா.. என்ன கொஞ்ச நாளைக்கு பசங்க படுத்துவாங்க.. அப்பறம் ஸ்கூல் போயாச்சுனா நம்ம கிட்ட பேச கூட டைம் இருக்காது..

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

தாய்க்கு மகளாக இருக்கும்போதே குழந்தைக்கு தாயாக இருப்பதே எப்போதும் சிறந்தது.

சொதப்புறேனா!!! ஒன்றுமில்லை. இரண்டுமே வெவ்வேறு நிலைகள். இரண்டிலுமே அதற்கென தனித்தனி சந்தோஷம்தான்.

அன்புடன்,
இஷானி

தாயோ! மகளோ!

எப்பவுமே நான் அவாளுக்கு FRIENDஆதான் இருப்பேன்!

எங்கம்மாவுக்கும் நான் FRIEND!

என் கோந்தேளுக்கும் நான் FRIEND!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

என்னை பொறுத்தவரை இரண்டுமே சிறந்தது தான் என்பேன். இரண்டிலுமே ஏகப்பட்ட பொறுப்புகளும், புரிதல்களும் இருக்கு, அதை புரிந்து நடந்துக் கொண்டால் சிறந்த பெண்ணாக திகழலாம்.

"ஒரு குழந்தைக்குத்தாயானாலும்!! 'தாய்க்கு எப்போதும் மகள்" மகள் தானே?!

எங்க அக்காவுக்கு குழந்தை பிறந்தப்போ, அம்மா' உதவுக்கு அங்க போய் நின்னாங்க ஆனால் 'பேரக்குழந்தையை மட்டுமில்லை+அக்காவையும் ரொம்பவே கவனிசுக்கிட்டாங்க; என் மகளைத்தூங்க விடுடா குழந்தைன்னு அவங்க பேரனைக்கொஞ்சும் போது!!

தாய்க்கு மகளாயிருப்பதின் மகிமை தெரிந்தது. 'அந்தத்தாயின் அன்புக்குள் உருகிய போது ஒரு குழந்தைக்குத்தாயான பெருமிதம் நிறைந்தது!.

'ஆகவே ரெண்டுமே சிறப்பு!.

பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயம் கொள்ளல் ஆகாது பாப்பா'

நம்ம ஒரு தாயான பிறகு தான் தாய் மேலே உள்ள பாசம் பல மடங்காக உயரும்.அந்த கஷ்டங்களை அனுபவிக்கும் போது தான் நம்ம அம்மாவும் இப்படி தானே கஷ்டபட்டு இருப்பாங்கன்னு தோணும்.இரண்டுமே நல்ல பதவி

மேலும் சில பதிவுகள்