யாரேனும் விடை தாருங்கள்

எனக்கு திருமணம் ஆகி 1 வருடம் ஆகிரது.
தூரம் தள்ளி போகவில்லை. ஆனால் என்ன சாப்பிட்டாலும் குமட்டலாக வருகிறது. வெளியே சென்ரால் தலை சுற்றுகிறது. யாரது ஆலோசனை சொல்லுங்கள்

நாகவளர் கவலைப்படாதீங்க. யாராச்சும் அனுபவசாலிகள் வருவாங்க. உங்களுக்கு பதில் சொல்லுவாங்க.

நீங்க நேராநேரத்துக்கு சாப்பிடறீங்களா? ஒழுங்காக சாப்பிடாமல் பிபி குறைந்தாலும் இந்த பிரச்சினை வரும். இன்னொண்ணு குழந்தைக்காக மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் போது சிலருக்கு இந்த மாதிரி வரும்(மனம் மிகவும் ஆசைப்படுவதால்)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

உங்கள் ஆலோசனைக்கு நன்றி

நாகவளர்.. முதலில் மருத்துவரை அணுகுங்கள்.. ஒருசில பேர் துாரம் தள்ளி போகவில்லை ஆனால் கர்ப்பமாக உள்ளேன் என்று கூறுவார்கள்..அது மாதிரி எதாவதா என்று உறுதிசெய்யுங்கள். அல்லது வேறு ஏதேனும் உடல் உபாதையாகக்கூட இருக்கலாம்..கவலைப்படாமல் மருத்துவரை பாருங்கள்...

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

வளர்மதி,
முதலில் லோ பிபியா என்று பாருங்க...
காலை உணவை மிஸ் பண்ணாதீங்க.. கர்ப்பமாக இருந்தால் உறுதி செய்யுங்க ..
எதுவாக இருந்தாலும் முதலில் மருத்துவரை பாருங்க
இது போல் இருக்கும் போது இஞ்சி டீ,இஞ்சி சாறு சாப்பிடுங்க கொஞ்சம் better ஆக இருக்கும்

என்றும் அன்புடன்,
கவிதா

மேலும் சில பதிவுகள்