கம்பு உப்புமா

தேதி: August 25, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (8 votes)

கம்பில் புரதச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீஷியம், பொட்டாஷியம் நிறைந்து உள்ளது. கம்பை உணவில் சேர்ப்பதால் ரத்த கொதிப்பு, நீரழிவு, புற்று நோய் ஆகியவற்றை பெருமளவில் குறைக்கலாம்.

 

கம்பு - ஒரு கப்
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறுத் துண்டு
உளுந்து, கடலை பருப்பு - தாளிக்க
நெய், கடுகு, சீரகம், கறிவேப்பிலை - தாளிக்க
உப்பு - தேவைக்கு ஏறப
கொத்தமல்லி - சிறிது


 

வெங்காயம், பச்சைமிளகாய் மற்றும் இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கம்பை வடிகட்டியில் போட்டு சிறிது நீர் விட்டு அலசி எடுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் கம்பை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மலர வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
பேனில் நெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து உளுந்து, கடலை பருப்பு, வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.
வதங்கியவுடன் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.
நீர் பாதியாக குறைந்ததும் வேக வைத்த கம்பு சேர்த்து கிளறவும்.
கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவையான சத்தான கம்பு உப்புமா ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இதை கம்பு மாவில் செய்யமுடியுமா???

நல்ல குறிப்பு, கம்பங்கூல் செய்யற கம்புதானே, அதையே யூஸ் பண்ணலாமா? ட்ரை பண்ணிட்டு சொல்றேன்.

அன்புடன்
பவித்ரா

கவிதா சத்தான குறிப்பு.. இங்க கம்பு கிடைக்குமானு தெரியல.. கிடைத்தால் கண்டிப்பாக ட்ரை பண்ணிவிடுகிறேன்... குறிப்புக்கு நன்றி...

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

கவிதா நல்ல ஹெல்த்தான குறிப்பு. கம்புவ முதன் முதலா உங்க குறிப்பலதான் பார்க்குறேன். ஒரு நாள் இந்த ரெசிப்பிய செஞ்சு பார்த்து பின்னூட்டம் அளிப்பேன். இதுப்போல் தொடர்ந்து பல சத்தான, புதிய குறிப்புகளை கொடுங்கள். இன்னும் 6 ரெசிப்பிதான் 2வது ஸ்டார் வாங்குறதுக்கு.

கவிதா,
கம்பு உப்புமா வித்தியாசமான குறிப்பு. எப்படி இப்படிலாம் யோசிக்கிறீங்க? மேலும் நிறைய குறிப்புகள் கொடுங்க. வாழ்த்துக்கள்.
uk5mca அப்படினா என்ன அர்த்தம்? UK னா உங்க வீட்டுகார் பெயர் தானே...

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கு நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

ரம்யா மேடம்,
மாவில் உப்புமா செய்து பார்த்ததில்லை
கூழ்,beverage ,drink வேண்டுமானால் செய்யலாம் ...
உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

பவித்ரா,
அதே அதே
அதிலேயே செய்யுங்க நன்கு புடைத்து விட்டு,கல்,மண் எடுத்துவிட்டு செய்யுங்க ஏன் என்றால் நிறைய adulteration கம்பில் செய்யுறாங்க

என்றும் அன்புடன்,
கவிதா

ராதா மேடம்,
இந்தியாவில் இல்லேன்னா bajra என்று கேட்டு பாருங்க கிடைக்கும்.
நிறைய பிராண்ட்ஸ் இருக்கிறது
செய்து பாருங்க

என்றும் அன்புடன்,
கவிதா

வினோஜா மேடம்,
அப்படியா?வனிதா மேடம் சொன்ன கம்பகூழ் செய்து பார்க்கலாம் என்று வாங்கினேன் மீதி இருந்ததை ட்ரை செய்தேன்..
அவ்ளோ பெரிய ஆசையெல்லாம் இல்லை எதோ என்னால் முடிந்ததை பகிர்ந்து கொள்கிறேன் அவ்வளவே..
செய்து பாருங்க
உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

அன்பரசி,
uk என்பது கவிதா உதயகுமார் ஐ குறிக்கும் எனது அப்பா பெயர்
கணவர் பெயர் சரவணன்
5 நான் பிறந்த மாதம்
mca எனது படிப்பு தகுதி
clear ?
செய்து பாருங்க
உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

கவிதா,
ரொம்ப நாளா கேட்கணும்னு நினைச்சுட்டு இருந்தேன். அதான் கேட்டுட்டேன். தப்பா எடுத்துக்காதீங்க.

அன்பரசி,
என்னபா இப்படி சொல்லிடீங்க நான் தப்பாவே நினைக்கலை பா
நீங்க கேட்டா சொல்லாம இருப்பேனா?

என்றும் அன்புடன்,
கவிதா

கவிதா,
நீங்க "clear? "அப்படின்னு டைப் பண்ணினதால,நீங்க தப்பா எடுத்துக்கிட்டீங்கனு நினைத்து , நான் கொஞ்சம் upset ஆயிட்டேன். I am ok now.

கூடிய விரைவில் செய்துட்டு சொல்கிறேன். கம்பு சத்தானது இல்லையா! கண்டிப்பா செய்யனும்.

குறிப்புக்கு மிக்க நன்றி.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமினா,
நன்றி பா
ரொம்ப சத்து நிறைந்தது
கண்டிப்பாக செய்து பாருங்க
உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

Hi Kavitha, Did you buy the millets from whole foods? Does it come without the skin in whole foods? I have been thinking to make healthy foods with millets and raagi from a long time but had never tried cos no one ever cooked this in our families. This is a very healthy recipe and good that you have shared many recipes. I will try this when I get a chance and let you know. - Kavitha

மிகவும் சுபெரக‌ இருந்தது
<a href="http://electriccoffeepercolator.weebly.com/"> Electric Coffee Percolator</a>

http://electriccoffeepercolator.weebly.com/