தொப்பையை குறைக்க

இக்கால பெண்கள் மிகவும் வருத்தப்படுவது தொப்பை தான் இதை குறைப்பது எப்படி என்று பார்ப்போம்.
1. வெள்ளரி விதை - 100 கிராம்
2. சந்தனப் பவுடர் - 10 கிராம்
3. வெட்டி வேர் - 25 கிராம்
செய்முறை
முதலில் வெட்டிவேரை சிறு துண்டுகளாக வெட்டி வெயிலில் மொறு மொறு வென்று உலர்த்தவும். பிறகு மூன்றையும் அரைத்துக்கொள்ளவும்.
இந்த அரைத்த பவுடரை இரவில் படுக்கும் போது வயிற்றில் தடவி வந்தால் தொள தொள சதைகள் இறுகும். பிறகு பார்க்க அழகாகவும் இருக்கம்.


ஒன்னும் வேண்டாம்! நீங்க ஆரம்பிக்கற திரெட்டுக்கு ஓடி ஓடி வந்து பதுவு போட்டாளே தன்னால தொப்பை குறஞ்சுடுமே!

ஹிஹிஹி--------------------------

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மாமி, காலையிலேயே சிரிக்க வைத்து விட்டீங்க. மிக்க நன்றி.
தொப்பை குறைய நடைப்பயிற்சி செய்ய வேண்டும். பொரியல், சாதம் குறைக்க வேண்டும் என்பதே என் கருத்து.
வாணி


ஓ இது ஒங்களுக்கு காத்தாலையா!

காத்தால வாக்கிங் போயிண்டே சிரிக்கறேளா!

சிரிச்சா நோயே வராது தெரியுமோ!

நோய் வந்தாதான் தொப்பை விழும்!

அதான் ................................ஹிஹிஹி.............................

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

ஹாய் நல்ல குறிப்பா இருக்கு

appo ungalukku thoppai irukka

எனக்கு இல்ல இருக்குறவங்களுக்கு சொல்றேன்.அப்பதானபா அழகா இருப்பாங்க நிறைய பேரை அழகுல இருந்து கெடுக்குறதே அதுதான்

சிரிக்க வைக்கிறீங்க மோகனா. ;))

‍- இமா க்றிஸ்

இந்த காலத்துல தொப்பை தான் பெரிய பிரச்னை !!!!!
நல்ல ஒரு ஐடியா தந்ததுக்கு ரொம்ப நன்றி... எங்க அக்கா கு இந்த tips helpful ha irukum. பிரசவத்துக்கு பின்னாடி வந்த தொப்பையும் குறையுமா ??

இந்த டிப்ஸ் நீங்க உஸ் பண்ணி பாத்து இருக்கீங்களா ?

வயிற்றில் எப்படி தடவனும் னு சொல்லவே இல்லையே !!!!! தண்ணில கலகனுமா?

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

எனக்கு இல்ல என் தோழி இதை உபயோகித்தால்.ஒரே மாதத்தில் தொப்பை குறைந்து விட்டது.

ரொம்ப நல்லது சுஜி...... என் அக்கா விடம் கூறுகிறேன்.......

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

மேலும் சில பதிவுகள்