குழந்தைகளுக்கான ரைம்ஸ் in mp3 formate

குழந்தைகளுக்கான தமிழ் மற்றும் ஆங்கிலம் ரைம்ஸ் mp3 formate எந்த தளத்தில் free டவுன்லோட் செய்யலாம்... தேடி பார்த்துட்டேன் ஆனால் க்ளாரிட்டி இல்லாம இருக்கு... :( உங்களுக்கு யாருக்காச்சும் தெரிஞ்சா சொல்லுங்க...ப்ளீஸ்

என்க்கும் mp3 rhymes ட்வுன்லோட் செய்யனும் மற்ற தோழிகள் வந்து பதில சொல்லுங்கள் 4 வய்து குழ்ந்தைக்கு என்ன் என்ன் க்ற்றுக்கொடுக்கலாம் சொல்லுங்கள்

ஹாய் ஸ்டெல்லா.... தமிழ் மற்றும் ஆங்கிலம் ரைம்ஸ் நேரடியா இன்டெர்நெட்-ல இருக்கு.. ஆனா டவுன்லோட் பண்ணினா நீங்க சொல்ற மாதிரி க்ளாரிட்டி இருக்காது... இதுக்கு நீங்க 2 அல்லது 3 நர்சரி ரைம்ஸ் ஸிடி வாங்கி அப்லோட் ப்ண்ணிக்கலாம்.. மீதி நேரங்களில் கம்ப்யுட்டரில் ப்ளே பண்ணிவிட்டால் போதும்.. அதுவே continuous ஆக வரும்...

வேறு தோழிகள் யாருக்காவது தெரிந்தால் கண்டிப்பாக வந்து கூறுவார்கள்... you tube நன்றாக உள்ளது.. நான் அதிகம் அதைத்தான் உபயோகிக்கறேன்.. மற்றபடி ஸ்கூலில் சொல்லித்தருவது அவா்களே ஸிடி கொடுத்துவிடுகிறார்கள்.. you tube ல் நல்ல கதைகள், பாடல்கள் என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் நன்றாக உள்ளது...

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

4 வயது குழந்தைக்கு நீங்கள் தாராளமாக வார்த்தைகள் (word) கற்றுக்கொடுக்க ஆரம்பித்துவிடலாம். நம் இந்தியாவில் என்றால் 4 வயது குழந்தையின் படிப்பு தரம் வேறு மாதிரி போய்க்கொண்டிருக்கிறது.. மிகவும் advance. நாம் நம்மால் முடிந்தவரை வீட்டில் ABCD (lower case and upper case), சின்ன சின்ன வார்த்தைகள்,
உதாரணத்திற்கு A for Apple (இதை அவனே சொல்லி எழுதவும் பயிற்சி கொடுங்கள்)
தமிழில் அ,ஆ.... க.ங,ச.ஞ...எல்லாம் வீட்டில் நீங்களே எழுத படிக்க கற்றுக்கொடுங்கள்.. நீங்கள் சொல்லிக்கொடுக்கும் எழுத்துக்களை வைத்து வரும் வார்த்தைகளை எழுத படிக்க கற்றுக்கொடுக்கலாம்
உதாரணத்திற்கு (தமிழில் எழுத்துக்கள் சுலபமாக வரும் எழுத்துக்களில் இருந்து ஆரம்பிக்கவும்... ட,ப,ம,....) ட,ப,ம சொல்லிக்கொடுத்தால் படம் பட்டம் போன்ற வார்த்தைகளை எழுத கற்றுக்கொடுக்கலாம்..
எண்கள் 1 முதல் 100 வரை தாராளமாக எழுத பழக்கிவிடலாம்...
கூடவே கூட்டல் முறையையும் கற்றுக்கொடுக்கலாம்..
என் பையனுக்கு 4 1/2 வயது.. அவனுக்கு இவையெல்லாம் தான் கற்றுக்கொடுக்கிறேன்...

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

www.bussongs.com, www.hi2web.com, http://www.sweetrhymes.com/nursery-rhymes-videos/alphabet-song-nursery-rhyme-video/, and you can download nursery rhymes from youtube also. it is good and clear.

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

மேலும் சில பதிவுகள்