ஆண் குழந்தை பெற ஏதாவது வழி சொல்லுங்கள்

எனக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளாள் . அடுத்த குழந்தை ஆணாக இருந்தால் ரொம்ப சந்தோஷமாக இருக்கும். ovulation-க்கு பின்பு 1-2 நாள்கள் சேர்ந்தால் ஆண் குழந்தை பிறக்கும் என்று net-இல் படித்தேன்.யாருக்காவது இந்த Method work-out ஆகி இருக்கிறதா?வழி சொல்லுங்கள் தோழிகளே.....

முதலில் உங்களுக்கு ஆண் குழந்தை கிடைக்க வாழ்த்துக்கள்!!!!!!!!!!
நீங்க சொல்ற முறை பத்தி கேள்வி பட்டது இல்லை....ரொம்ப புதுசா இருக்கு, நம்ம அனுபவ சாலிகள் வந்து சொல்லுவாங்க!!!!!!!

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

இது பற்றி ஏற்கனவே பேசியாச்சு!

மன்றத்துல தேடி பாருங்க. இந்த கேள்விக்கு பாபு அண்ணா விளக்கமா பதில் சொன்னாங்க!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

இப்படி ஒன்று நடப்பதற்கு வாய்ப்பிருப்பதாக அறிவியல் இதுவரை கூறவில்லை. அப்படி சாத்தியம் இருப்பதாகவும் எனக்குத் தோன்றவில்லை. ஆணா பெண்ணா என நிர்ணயிப்பது ஆணிடமிருந்து வரும் ஜீன். இதில் பெண்ணின் ovulation முறை அதை நிர்ணயிக்கும் என்பது நம்பும்படியாக இல்லை.

உண்மையில் அப்படி ஒன்று உண்டென்றால் அது என்றோ மனித ஆண் பெண் விகிதாச்சாரத்தைப் பாதித்திருக்கும், தொடர்ந்து மனித இனமே அழிந்திருக்கும்.

இந்த மாதிரி டுபாக்கூர் கதையை எல்லாம் நம்பாமல், பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் இரண்டாவது குழந்தைக்கு நல்ல முறையில் முயற்சித்து ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுங்கள். ஆணோ பெண்ணோ எதுவாகிலும் சந்தோஷமடையும் மனநிலையை வளர்த்துக் கொள்ளுங்கள். பல நேரங்களில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ள வீடுகளில் உள்ள சந்தோஷம் ஒரு ஆண் ஒரு பெண் உள்ள வீடுகளில் பார்க்க முடிவதில்லை.

எது எவ்வாறாகிலும் உங்கள் ஆசைப்படி அடுத்து ஒரு ஆண் குழந்தைப் பெற்றெடுக்க வாழ்த்துக்கள்!!

ஒருவெளை பெண் பிறந்துவிட்டால் அதை ஆணாக வளர்க்க ஒருபோதும் முயற்சிக்காதீர்கள். சில பெற்றோர்கள் செய்யும் பெரிய தவறு இது.

அன்புடன்,
இஷானி

இறைவனிடம் பிராத்தனை செய்யுங்கள் .
அவன் நாட்டமின்றி எதுவும் நடப்பதில்லை

எண்ணங்கள் நிறைவேற வாழ்த்துக்கள்..!!

அன்புடன்

றஹீமா பைஷால்

என் அக்காவிற்கு முதலில் பெண் குழந்தை பிறந்தது.அதனால் 2வது ஆண் வேண்டும் என்று நினைத்தார்கள்.தினமும் இரவில் பாதாம்,பிஸ்தா அரைத்து பாலில் போட்டு சுண்ட காய்ச்சி கணவருக்கு கொடுத்தார்.இது அவருக்கு அவர் தோழி சொன்னது.அதே போல் 2வது அவருக்கு ஆண் குழ்ந்தை பிறந்தது.முயற்சித்து பாருங்கள் ஆண் குழந்தை பிற்க்க வாழ்த்துக்கள்.

நானும் இஷானி சொல்வதையே வழிமொழிகிறேன்.குழந்தை ஆணா பெண்ணா என்று தீர்மானிப்பது ஆணுடைய குரொம்சொம் தான்.எந்த குழந்தையாக இருந்தாலும் ஆரோக்கியமான குழந்தையாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தியுங்கள்

எந்த குழந்தை பிறந்தா என்னா? எல்லாம் குழந்தை தான். எவ்வளவோ பேருக்கு குழந்தை பாக்கியம் இல்லாதிருக்கும் போது, நமக்கு குழந்தை கிடைத்ததை நினைத்து சந்தோசம் படணும்.

shagila

indha link parunga( http://baby-talk.co.uk/chinese_calendar.htm)

ஹாய்

மற்ற தோழிகள் சொன்னதுபோல் குழந்தை ஆணா பெண்ணா என்று தீர்மானிப்பது குரோமொசொம்ஸ் (X and Y )

ஆணிடம் இருந்து வரும் X மற்றும் பெண்ணிடம் இருந்து வரும் X சேர்ந்தால் பெண் குழந்தை.

ஆணிடம் இருந்து வரும் Y மற்றும் பெண்ணிடம் இருந்து வரும் X சேர்ந்தால், ஆண் குழந்தை.
இதில் அறிவியல் சொல்லும் உண்மை என்னவென்றால், ஆணிடம் இருந்து வரும் X மற்றும் Y குரோமோசோமில்,Y- யின் ஆயுள் குறைவு. (ஒன்று அல்லதுரெண்டு நாட்கள் மட்டுமே என்று ஞாபகம்! )
ஆனால்,X குரோமொசொம்க்கு, ஆயுள் அதிகம்! ஆகையால், கருமுட்டை உருவாகும் சமயத்தில், சேர்ந்தால்,Y குரோமோசோம் கருமுட்டையோடு இணைந்து கரு உருவாக வாய்ப்பு அதிகம் உண்டு.(அதாவது ஆண் குழந்தை) அறிவியல் என்றாலும், இன்னும் விரிவாக இங்கே விளக்கலாமா என்று தெரியவில்லை. ஆனாலும், உங்கள் கேள்வி, எனது படிப்பு சம்பந்தமானது என்பதால், பதில் சொல்ல ஆர்வம் வந்தது. எப்படி கரு உருவாகிறது, எப்படி இரட்டை குழந்தைகள் உருவாகிறார்கள், ஒரே மாதிரி தோற்றமுடைய ரெட்டையர்கள், வேறு வேறு தோற்றம் உடையவர்கள் என்று.... படிக்க படிக்க வியக்க வைக்கும் அறிவியல் உண்மைகள்!

Hi all,

என்னை வாழ்த்திய suganthi,Ishani,Raheema,1984_1975,Reem மற்றும் பதில் அளித்த Amina,Shalli,Mahesh Kumar அனைவருக்கும் மிக்க நன்றி.

Ishani நீங்கள் சொல்வது சரியே.ஆணின் Y குரொம்சொம் தான் முக்கிய பங்கு வகிக்கிறது.X-slow n can live upto 2 days whereas Y chromosome swims fast and short living.எனவே Egg எப்ப Fertilise ஆகிறது என்பது முக்கியம்.அதனால் தான் ovulation date-கும் இதற்கும் சம்பந்தம் உள்ளதாக நம்புகிறேன்.இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரிய வில்லை.இந்த method-ல யாருக்காவது success ஆனதா என்று அரிய ஆவல்.அவ்வளவு தான் மற்றபடி ஒன்றும் இல்லை
Sija Thota -I am very happy with ur answer.This is wht I am really expecting.Pls share further information if u have any.

Be Good,Do Good

மேலும் சில பதிவுகள்