இரும்பல்

என் 4 வயது பெண்ணுக்கு இரும்பல் , அதுவும் இரவு நேரத்தில் ஜாஸ்தியாக உல்லது. ஆனால் சலி அவ்லவு இல்லை. உடம்பு சுட்டினால் இரும்பல் வரும்மோ ? இதுக்கு எளிய வீட்டு வைத்தியம் ப்ளிஸ்

பாலை காய்ச்சி குடிக்கும் பக்குவத்தில் அதில் தேன் கலந்து கொடுங்கள்.

இல்லை மிளகு பாலும் காரமில்லாமல் காய்ச்சி கொடுக்காலாம்.

ஆறியவெண்ணீர் அடிக்கடி குடிக்க கொடுங்கள்.

இஞ்சி சாறு எடுத்து அதில் தேன்கலந்து கொடுக்கவும்
ஜலீலா

Jaleelakamal

இருமல்ன்னு பார்த்தவுடன உங்க ஞாபகம் தான் வந்தது. உடனே வந்து பதில் சொல்லிட்டீங்க.

அன்புடன்,
இஷானி

உங்க குறிப்போட லிங்க்தான் தேடிட்டு இருந்தேன். நீங்களே வந்துட்டீங்க.

தேனில் மஞ்சள் கலந்து நாக்குல தடவினா இரவு நேர இருமல் கட்டுபடுமுனுகூட நீங்க ஒரு குறிப்புல சொல்லியிருக்கீங்க. அதுவும் பயனுள்ள குறிப்புதான்.

Don't Worry Be Happy.

இருமலுக்கு பாலில் மஞ்சள் கலந்தும் குடிக்கலாம்.

பெரியவர்கள் என்றால் 2 மிளகை எப்போதும் வாயில் அடக்கி வைத்தால் இருமலே வராது. நீங்க சின்ன பொண்ணுன்னு சொல்றதால் இது சரி வராது. சுண்ணாம்புடன் தேன் கலந்து தொண்டையில் பூசினால் இருமலினால் உள்ள தொண்டை கரகரப்பு மாறிவிடும்.

அன்புடன்
பவித்ரா

Thanks for your reply.

மேலும் சில பதிவுகள்