தலைமுடிக்கான ஆயில் மசாஜ் செய்வது எப்படி?

தேதி: August 28, 2010

4
Average: 3.4 (17 votes)

ஆலிவ் எண்ணெய், நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய், நவரத்தின எண்ணெய் இவை எல்லாவற்றையும் கலந்தும் ஆயில் மசாஜ் செய்யலாம். தனித்தனி எண்ணெயை வைத்தும் செய்யலாம். பொடுகு போவதற்கு பூண்டு எண்ணெயை வைத்து மசாஜ் செய்யவும். ஆயில் மசாஜ் செய்தால் டென்ஷன் குறையும். மேலும் இரத்த அழுத்தம், இரத்த சோவை போன்ற பிரச்சனை உள்ளவர்கள் புத்துணர்ச்சி பெறுவார்கள்.

 

நல்லெண்ணெய்

 

முதலில் தலையை நன்கு சீவிக் கொள்ளவும். பிறகு தலையின் மேல் பகுதியில் இருந்து வகுடு இருக்கும் பகுதி முழுவதும் எண்ணெயை பஞ்சால் தடவவும்.
ஒவ்வொரு சிறு சிறு பகுதியாக பிரித்து எடுத்து பஞ்சால் எண்ணெயை தொட்டு தலையின் எல்லா பகுதியிலும் படும்படி தடவவும்.
எண்ணெய் முழுவதும் தடவிய பிறகு இரண்டு கையையும் தலையின் அடிவழியாக விட்டு தலை முழுவதும் anticlockwise-ல் சுற்றவும். அப்போது கையின் விரல்களால் மட்டும் தேய்க்கவும்.
இரண்டு கையின் கட்டைவிரலை தலையின் மேல் பகுதியில் வைத்து எதிர் எதிர் திசையில் வைத்து நகர்த்திக் கொண்டே வரவும்( ஒரு விரல் மேலேயும் மற்றொரு கட்டை விரலை கீழேயும் வைத்து நகர்த்தி மேலிருந்து கீழ் வரை நகர்த்திக் கொண்டே வரவும்).
இதே போல் தலையின் எல்லா பகுதியிலும் செய்யவும். செய்த பிறகு மீண்டும் இரண்டு கையை தலையின் அடிவழியாக விட்டு anticlockwise-ல் சுற்றவும்.
முதலில் தலையின் மேல் புறத்தில், ஒரு கையால் சிறிதளவு முடியை எடுத்து ஒரு விரலில் இருமுறை சுற்றிக் கொண்டு(படத்தில் உள்ளபடி) தலையில் வைத்து சுற்றி அழுத்தி தேய்க்கவும்(clockwise direction). நன்கு உள்ளங்கையை வைத்து தேய்க்கவும். இதே போல் தலை முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக முடியை எடுத்துத் தேய்க்கவும். பிறகு மீண்டும் இரண்டு கையையும் தலையின் அடிவழியாக விட்டு anticlockwise-ல் சுற்றவும்.
பிறகு தலையில் மேல் பகுதியில் இருந்து இரண்டு கைகளால் கொஞ்சம் கொஞ்சமாக முடியை எடுத்து விரலில் சுற்றி கொண்டு அப்படியே மெதுவாக இழுத்து ஃப்ரஷர்(pressure) கொடுக்கவும். இதே போல் தலை முழுவதும் எல்லா முடியையும் எடுத்து செய்யவும். பிறகு மீண்டும் இரண்டு கையையும் தலையின் அடிவழியாக விட்டு anticlockwise-ல் சுற்றவும்.
இரண்டு கையையும் ஒன்றாக சேர்த்து(படத்தில் உள்ளவாறு) தலை முழுவதும் விரல் மட்டும் படும்படி அடிக்கவும்.
தலையின் முன்பக்கத்தில் பத்து விரல்களையும் வைத்து விரல்களால் தடவிக் கொண்டே வரவும்.
இதைப் போல் தடவி காது அருகே வந்ததும் அழுத்தவும்(படத்தில் இருப்பது போல்). மீண்டும் இரண்டு கையையும் தலையின் அடிவழியாக விட்டு anticlockwise-ல் சுற்றவும்.
தலையின் மேல் பகுதியில் ஒரு கையையும் மற்றொரு கையை தலையின் அடிப்பகுதியில் வைத்து அழுத்தி விடவும். அப்படியே எல்லா இடங்களிலும் அழுத்தவும். பிறகு மீண்டும் இரண்டு கையையும் தலையின் அடிவழியாக விட்டு anticlockwise-ல் சுற்றவும்.
தலையின் முடியை இரண்டு பாகங்களாக பிரித்துக் கொள்ளவும். பிறகு ஒரு பாகத்தின் உள்ள முடியை மடித்து சுற்றி anticlockwise- ல் தேய்க்கவும். பிறகு மற்றொரு பாகத்தை அதே போல் anticlockwise-ல் தேய்க்கவும். பிறகு எல்லா முடியையும் ஒன்றாக சேர்த்து சுற்றி anticlockwise-ல் தேய்க்கவும். இறுதியில் இரண்டு கையையும் தலையின் அடிவழியாக விட்டு anticlockwise-ல் சுற்றிய பிறகு தலையை சீவி கொண்டைப் போட்டுக் கொள்ளவும். (ஒவ்வொரு முறையும் தலைமுடியை சீப்பு கொண்டு நன்கு சீவிக் கொள்ளவும்.)
குறைந்தது அரைமணி நேரமாவது தலையில் எண்ணெய் ஊறி இருக்க வேண்டும். அதன் பிறகு ஷாம்பூ அல்லது சீயக்காய் தேய்த்து தலையை அலசி விடவும்.
நாகையில் அழகுநிலையம் மற்றும் பயிற்சி மையம் வைத்து அதனை சிறப்பாக நடத்தி வரும் திருமதி. நிர்மலா அவர்கள், அறுசுவை நேயர்களுக்காக தலைமுடிக்கான ஆயில் மசாஜை செய்து காட்டியுள்ளார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ரொம்பவும் பயனுள்ள குறிப்பு. இது போன்று தான் என் அம்மா எனக்கு செய்வாங்க. பயனுள்ள குறிப்பு கொடுத்தற்க்கு நன்றி

கவிதா

'கைவினை' என்பதிலிருந்து விலகி பயனுள்ள குறிப்புகளாகத் தர ஆரம்பித்திருக்கும் அறுசுவை டீமுக்கும் மசாஜ் செய்து காட்டியுள்ள நிர்மலா அவர்களுக்கும் எனது பாராட்டுக்கள்.

‍- இமா க்றிஸ்

நான் நாகை அங்கே வருவேன்!

என் ’சிகையை’ தானே தருவேன்!

அதிலே வகையாய் நீவீர் எனக்கு!

பல வகையாய் போடுங்கோ கணக்கு!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

இங்கயும் கவி பாட வந்தாச்சா!!

‍- இமா க்றிஸ்


நீங்க முன்னாடி போனா

நானும் ’’பின்னடி’’ வருவேன்!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

ஆயில் மசாஜ்-ல இவ்ளோ இருக்கா.......அடடா... எனக்கு யாராவது இப்டி பண்ணிவிட்டா நல்லா சுகமா துாங்குவேனே........ நமக்கு நாமளே எப்படி பண்ணிக்கறது....

நிர்மலா மேடம் ரொம்ப அழகா சொல்லிக்கொடுத்திருக்கீங்க.... யாராவது பண்ணிதான் விடனுமா.. நமக்கு நாமளே பண்ணிக்க முடியாதா... என் கணவர் கிட்ட இந்த மாதிரி பண்ணிவிடுங்கனு சொன்னா கம்பெடுத்து அடிக்க வந்திடுவாரு..... இதுக்காகவே நாங்க நாகை வரணும் போலவே.....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

hai
ur oil message instruction is super.
give me a tips for hair falling. i take diet for 6 mts to reduce my weight. but my hair falling is more.

meenakarthik

படத்தையெல்லாம் பார்த்தா ஆயில் மசாஜ் பண்ணிக்க ஆசையாத்தான் இருக்கு. ஆனா யார் பண்ணி விடுவா?!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கண்ணாடி முன்னால நீங்களே உங்களுக்கு பண்ணுங்கபா.
ரிலாக்ஸ் கிடைக்கலனாலும் தலைக்கு ரத்தஓட்டம் சீராகும். முடியும் வலுவாகும்.

அனைவருக்கும் பயனுள்ள குறிப்பு. நன்றி அருசுவை டீம்.

Don't Worry Be Happy.

ஹி ஹி ஜெயலெக்ஷ்மி இங்கே பார்லரில் ஆலோவேரா க்ரீம் வைத்து நல்லா மசாஜ் பண்ணி விடுவாங்கப்பா. மாதம் ஒரு முறை செய்வேன். ஆனா ஆயில் வச்சு செய்ய மாட்டாங்க. அது நான் சொந்தமாகத்தான் செய்வேன்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஆயில் மசாஜ் பயனுள்ள குறிப்பு. நிர்மலா மேடம் நல்ல விளக்கத்துடன் புரியும்படி உள்ளது வாழ்த்துக்கள்.

நிர்மலா ரொம்ப நல்லா ஸ்டெப்ஸோட+படத்தோட சொல்லி தந்தற்க்கு நன்றி.
அடுத்து எல்லாருக்கும் பயனுள்ள வீட்டிலேயே பேஷியல்,ப்ளிச்சிங் போன்றவற்றை ஸ்டெப்ஸோட எளிய குறிப்போட குடுத்தால் எல்லாருக்கும் பயனாக இருக்கும்.
நன்றி.

வணக்கம் நலமா எங்கள் வீட்டில் பல்லி நிறைய உள்ளது அதை
போக்க வழி கூறுங்கள்

Hi, your massaging tips and strocks are very nice but you release the business secret, you are great thank you

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta