குழந்தை உட்காரவில்லை

Hi Friends
என்னுடைய 9 மாத குழந்தை இன்னும் உட்காரவில்லை with support உடன் she is sitting . நானும் தலையணை வைத்து மேலும் இறு சுவர் மூலயுளும் உட்கார வைக்கிறேன். நார்மலாக எத்தனை மாதத்தில் குழந்தைகள் உட்காரும். மிகவும் fast ஆஹா நீந்துவது போல தவளுகிறாள். அனால் உட்காரவில்லை.

ப்ளீஸ் உங்களுடைய experience கூறுங்கள் everytime உங்கள் அனைவருடைய அறிவுரையும் என்னகு மன தைரியத்தை கொடுகிறது.

Balapriya

கவலை வேண்டாம். முதலில் கொஞ்சம் ப்ராக்டீஸ் கொடுத்துட்டே இருங்க.

சில குழந்தை மீன் போல் மார்பின் மூலம் தவழும். கொஞ்சம் நாள் போனா தவந்தபடி உக்கார்ந்துருவாங்க. நான் பாத்த குழந்தைகளில் சில குழந்தைகள் உக்காராமல் தவந்தவர்களும் இருக்கிறார்கள். இந்த மாறி குழந்தைகள் சீக்கிரமா எல்லா வேலைகளும் செய்வார்கள்.

இன்னும் அனுபவமுள்ள தோழிகள் பதில் அளிப்பார்கள்:)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

உங்கள் குழந்தை army crawl பன்றாள்ள. பல குழந்தைகள் உட்கார்ந்த பின் தவழும், சில குழந்தைகள் தவழ்ந்த பின் உட்காரும். உங்கள் மகளும் தவழ ஆரம்பித்த பின் உட்காருவாள். நீங்கள் தொடர்ந்து உட்கார வைத்து ட்ரை பண்ணுங்கள். கொஞ்ச நாளில் அவளே சப்போர்ட் இல்லாமல் உட்கார்ந்து விடுவாள். நீங்கள் தரையில் இரண்டு காலையும் விரித்து உட்கார்ந்து, உங்கள் கால்களுக்கு இடையில் குழந்தையை உட்கார வையுங்கள். சப்போர்ட் இல்லாமல் உட்கார வைத்து நீங்களும் பக்கத்தில் உட்காருங்கள். சாயும் பொது மட்டும் பிடியுங்கள்.

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

கவலைப்படாதீங்க என்னுடைய குழந்தையும் முதலில் உட்காரவில்லை. தவழ ஆரம்பிச்சுட்டா. தவழ்ந்துட்டு அப்படியே படுத்துடுவா. எனக்கு ரொம்ப பயமா இருக்கும். நான் அவளை பின்னாடியும் இரண்டு சைட்லயும் தலையணையை சப்போட்டுக்கு கொடுத்து உட்கார வைத்து பழகி விட்டேன். கொஞ்சம் கொஞ்சமா அவளே உடகார பழகிட்டா. நீங்கள் கவலைப்பட வேண்டா. அதுவும் போக ரொம்ப பயமா இருதால் உங்கள் சைல்ட் ஸ்பெஷலிஸ்ட் கிட்ட ஒரு முறை ஆலோசித்து விடுவது நல்லது என்பது என் கருத்து.

Dear All,

Thank you very much and i will follow all of your suggestions.

Balapriya

மேலும் சில பதிவுகள்