கிரிஸ்பி தோசை

தேதி: September 1, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.2 (13 votes)

 

பச்சரிசி - ஒரு கப்
புழுங்கலரிசி - ஒரு கப்
உளுந்து - கால் கப்
கடலைப்பருப்பு - சிறிதளவு
வெந்தயம் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

பச்சரிசி, புழுங்கலரிசி, உளுந்து, கடலைப்பருப்பு, வெந்தயம் அனைத்தையும் ஒன்றாக ஒரு பாத்திரத்திலிட்டு குறைந்தது 5 லிருந்து 6 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
பின்னர் கிரைண்டரில் போட்டு தோசைமாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். கடைசியில் தேவையான அளவு உப்பு போட்டு ஒரு நிமிடம் கிரைண்டரை ஓடவிட்டு மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும்.
இந்த மாவை உடனடியாக தோசை வார்க்கலாம்.. மிகவும் சுவையான தோசை கிடைக்கும். இந்த தோசை மாவை மசால் தோசைக்கு உபயோகித்தால் மிகவும் நன்றாக இருக்கும்.
ஒரு கரண்டி மாவை எடுத்து மிக மெல்லிய தோசையாக வார்த்து, சூடான சாம்பார் மற்றும் சட்னியுடன் பரிமாறவும்.

ராதா அவர்களின் தோழி ஏதோ ஒரு ஹோட்டலில் சென்று எப்படி மசால் தோசை க்ரிஸ்ப்பாக உள்ளது. நாங்கள் செய்தால் மசால் வைத்ததும் மெதுவாகிவிடுகிறது என்று கேட்டதிற்கு, அந்த ஹோட்டலில் உள்ள சமையல்காரர் சொன்ன முறை. நிஜமாகவே ஹோட்டல் தோசை டேஸ்ட் கிடைக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

மொறு மொறு தோசை பார்க்கும்போதே சாப்பிடதோன்றுகிறது செய்துசாப்பிட்டால் ம்ம்ம்ம்ம்ம் யம்மி. என்ன ராதா சொல்கிறீகள்

life is short make it sweet.

'சுடச்சுட அதுவும் மொறு மொறு தோசை எனக்கு ரொம்ப்ப்ப்ப்பவும் பிடிக்கும்!!..
இந்த ரெசிப்பியை கண்டிப்பா செய்து பார்க்கணும்!.

மசாலா தோசை செய்முறை தந்ததுக்கு மிக்க நன்றி**(இப்ப எனக்கு எதுவுமே சாப்பிடப்பிடிக்கலை**குமட்டலால்) ஆனால் இந்தத்தோசையப்பார்த்ததும் 'சாப்பிடணும்னு இருக்கு!

பச்சரிசின்னு சொல்லி இருக்கீங்க/ சிவப்புப்பச்சையரிசியா? வெள்ளைப்பச்சையரிசியா(சிவப்பு- பொங்கல் செய்வோமோ அதுவா?) ப்ளீஸ் சொல்லுங்க.

ராதா ஹரி அவங்களுக்கு மிகுந்த நன்றி.

பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயம் கொள்ளல் ஆகாது பாப்பா'

நல்ல மொறு மொறு தோசை சாப்பிட உங்க வீட்டுக்கு இழுக்குது....

நல்ல ரெசிப்பி தந்தமைக்கு வாழ்த்துக்கள்.

Don't Worry Be Happy.

ராதா,
தோசை, நல்லா இருக்கே. குளிர் காலங்களில் மாவு புளிக்கவே புளிக்காது. இந்த தோசை, winter ல கை கொடுக்கும். இதை விருப்பப் பட்டியலில் சேர்த்துக்குறேன். குறிப்புக்கு வாழ்த்துக்கள்.

ராதா மேடம் ,
எனக்கு புழுங்கல் அரிசி தான் கிடைக்காது
இதை பச்சரிசியே போட்டு செய்தால் கிரிஸ்பியாக வருமா?
தோசை பார்க்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

ஹாய் கீதா

நிஜமாவே ரொம்ப கிரிஸ்ப்பியா நல்லா இருக்கும்பா.... எங்க வீட்ல எல்லாருக்கும் பிடிச்சிருக்கு... நீங்களும் செய்து பாத்துட்டு சொல்லுங்க... உங்க பாராட்டுக்கு நன்றிப்பா...

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

அஞ்சனா தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றிப்பா... கண்டிப்பா செய்து பாருங்க... நீங்க கர்ப்பமாக இருக்கீங்களா?.. வாழ்த்துக்கள்... எத்தனை மாதம்?...

நாம் சாதாரணமாக உபயோகிக்கும் பொன்னி அரிசி பச்சரிசி(white rice) தான்... பொதுவாக சமையலுக்கு பொன்னி அரிசி புழுங்கலரிசி (Par-boiled) உபயோகிப்போம். தோசைக்கு இட்லி அரசி, பச்சரிசி இரண்டும் சேர்த்து அரைப்பார்கள். சிவப்பு அரிசி என்பது மட்டையரிசி (brown rice) என்று கூறுவார்கள். நீங்கள் அதைத்தான் கேட்கிறீா்களா... கனடாவில் எது மாதிரி கிடைக்கும் என்று தெரியவில்லை... கிடைக்கவில்லை என்றால் வெறும் புழுங்கலரிசி மட்டும் உபயோகித்துக்கொள்ளலாம்.

நன்றி....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ஜெயலஷ்மி

உங்க பாராட்டுக்கு நன்றி... வீட்டுக்கு இழுத்தா வந்துடுங்க.. தோசை வாத்துக்கொடுக்கறது என்ன பெரிய வேலையா?... தாராளமா வாங்க...

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

அன்பரசி உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி... ஆமாம்பா.. இதை புளிக்க வைக்க வேண்டிய அவசியமில்லை.. மேலும் இந்த மாவு உப்பு சேர்க்காமல் அரைத்துவைத்துக்கொண்டால் வேண்டும் என்கிற சமையம் உப்பு சேர்த்து வார்த்துக்கொள்ளலாம். உப்பு சேர்த்தால் தான் உடனே புளிக்கும். மேலும் இதே மாவை வைத்து குழிப்பணியாரம் செய்யலாம். உப்பு போடாமல் வைத்தால் பாதியை இனிப்பு சேர்த்தும், பாதியை உப்பு சேர்த்தும் குழிப்பணியாரம் செய்யலாம். நன்றி....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி..............

பச்சரிசி மட்டும் சேர்த்தும் செய்யலாம். நீங்கள் இட்லி எப்படி செய்வீர்கள். இட்லி ரவா கிடைக்குமா அங்கே? இட்லி ரவா கிடைத்தால் புழுங்கலரிசிக்கு பதில் இட்லி ரவா உபயோகிக்கலாம்.

பச்சரிசி மட்டும் சேர்த்து தோசை தயாரிக்கலாம். க்ரிஸ்ப்பாக வருமா என்று தெரியவில்லை. நான் செய்து பார்த்துவிட்டு வேண்டுமானால் சொல்கிறேன்.

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணாவிற்கு நன்றிகள் பல....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

i have one doubt.
what is the difference b/w par-boiled and boiled rice
which one is pulugal arisi

HAVE A NICE DAY

Par-boiled rice தான் புழுங்கல் அரிசி. US-ல Converted rice-னும் கிடைக்கும்

அன்புடன்,
இஷானி

parboiled rice, boiled rice இரண்டுமே புழுங்கல் அரிசிதான்.இரண்டின் ப்ராசசிங்கும் ஒன்றுதான்னு படித்தேன்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹாய் ஜெயந்தி
இரண்டுமே புழுங்கலரிசி தான். இங்க par-boiled னு போட்டு தான் புழுங்கலரிசி கிடைக்கும். பொதுவாகவே வேகவைத்த நெல்லிருந்து வரும் அரிசி புழுங்கலரிசி. அதை par-boiled or boiled rice என்று எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ம்ம், கர்ப்பமா இருக்கேன்; இப்பத்தான் 45 நாள் ஆகுது. அதான் குமட்டல்.
ரொம்ப பிடிச்ச ‘பிரெட்” கூட இப்ப சாப்பிட முடியலை.

ஆனால், உங்க கிரிஸ்பி தோசை பார்த்ததுமே உடனேசெய்து பார்க்கணும்னு ஆவலா இருந்திச்சு அதான் சந்தேகத்தை கேட்டேன்.

மிகத்தெளிவா பதில் சொல்லி இருக்கீங்க!

ரொம்ப நன்றி.

செய்து பார்த்துச்சுவைத்துவிட்டு சொல்றேன். நிச்சயம் நல்லா வரும்.

பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயம் கொள்ளல் ஆகாது பாப்பா'

Iam jAYANTHI

Happy to see all ur replies
thanks so much for ishani,radha,kavisiva
thank u so muchhhhhhhhhhhhhhhh

HAVE A NICE DAY

எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் அஞ்சனா. அது சிறிது காலம் அப்படித்தான் இருக்கும். பிறகு சரியாகிவிடும். சிலருக்கு புளிப்பு அல்லது காரம் பிடிக்கும். தங்களுக்கு எந்த மாதிரி ருசி பிடித்திருக்கிறது என்று பார்த்து அதை சாப்பிடலாம். கண்டிப்பா செய்து பாத்துட்டு சொல்லுங்க.. உடல் நலனில் அக்கறை எடுத்துக்கொள்ளவும். பழங்கள் நிறைய சாப்பிடுங்க...

ஜெயந்தி, உங்கள் வருகைக்கு நன்றி.. செய்து பார்த்துவிட்டு கண்டிப்பா பின்னுாட்டம் கொடுங்க....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

தோசை ரைம்ஸ் பாட சொல்லுது...புளிக்க வைக்காமல் மசால் தோசையா..!!வாவ்.. புது தகவல்...

நல்ல குறிப்பு...நிறைய குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள்

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

நல்ல குறிப்பு
எனக்கு தோசையே வராதுக்கா.
ராதாக்கா, ஒருவருக்கு என்றால் எல்லா அரிசியிலும் அரை கப் போட்டு, மிக்ஸியில் அரைக்கலாமா, என்கிட்ட கிரைன்டர் இல்லைக்கா.

அன்புடன்
பவித்ரா

இளவரசி மேடம்... உங்க ரைம்ஸ்க்கு நன்றி.... சாரி சாரி உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி... செய்து பார்த்துட்டு சொல்லுங்க...

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

பாராட்டுக்கு நன்றி பவி...

தோசை வராது என்று எதுவுமில்லை பவி... நீ தான் ரவா தோசை குறிப்பே அனுப்பிருக்கியே. இன்னைக்கு உன்னோட பீட்ருட் சப்பாத்தி தான் செய்யப்போறேன். அது கூட பண்ற சைட்டிஷ் குறிப்பு அனுப்பலாம்னு இருக்கேன்.

நீ தாராளமா மிக்ஸில போட்டு அரைக்கலாம். இட்லிக்கு தான் உளுந்து பொங்காது மிக்ஸியில் அரைத்தால் என்று கூறுவார்கள். ஆனால் இட்லிக்கே மிக்ஸியில் ஒரு காலத்தில் அரைத்திருக்கிறேன். தாராளமாக தோசைக்கு மிக்ஸியில் அரைத்துக்கொள்ளலாம். கண்டிப்பாக நன்றாக வரும். நீ காலைல ஆபிஸ் கிளம்பும் முன் ஊற வைத்துவிட்டுச் சென்றால் இரவு வந்து அரைத்து தோசை வார்த்துக்கொள்ளலாம். நன்றாக வரும்.

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ராதா உங்க மொறுமொறு தோசை ரொம்ப சூப்பரா இருக்கு பார்க்க ஆசையா இருக்கு, புளிக்காமலே செய்யலாம சுவையாக இருக்குமா உளுந்து வாசனை அடிக்காதா.

அன்புடன்
நித்யா

இப்போது தான் செய்தேன். சொன்னது போல் உடனே சுட அருமையாக இருந்தது. நல்லா மொருமொருப்பா வந்தது.

குறிப்புக்கு நன்றி ராதா..

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மசாலா தோசை புது முறையான செய்முறை.
இந்த ரெசிப்பியை கண்டிப்பா செய்து பார்க்கணும்.
நல்லதொரு ரேசப்பி தந்தமைக்கு பாராட்டுகின்றேன் றாதா.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

நித்யா
உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி. கண்டிப்பா உளுந்து வாடை வராது. ஏனென்றால் நாம் 6 மணி நேரத்திற்கும் மேல ஊற விடும்போது அந்த வாடை வராது. செய்து பார்த்துட்டு சொல்லுங்க... எப்படி இருந்தது என்று..

ஆமினா
செய்து பார்த்துட்டு பின்னுாட்டம் கொடுத்ததற்கு மிக்க நன்றிப்பா... உங்க பாராட்டுக்கும் நன்றி

யோகராணி
பாராட்டுக்கு நன்றி. கண்டிப்பா செய்து பார்த்துட்டு சொல்லுங்க.. என்னப்பா என்னை றாதா-வா ஆக்கிட்டீங்க....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ராதாராணி உங்க கிரிஸ்பி தோசை ரொம்ப சூப்பர் கண்டிப்பா செய்து பார்க்கனும் பார்க்கும் போதே சாபிடனும் தோணுது நான் குறித்து வைத்து கொண்டேன் செய்து பார்க்கிறேன்

ராதா சூப்பர்பா,நான் செய்துபார்த்துட்டு சொலகிறேன், புதுமையா இருக்கு தேவையான பொருட்கள்லாம்.

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

பர்வீன்
உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி.. கண்டிப்பா செய்து பார்த்துட்டு பின்னுாட்டம் கொடுங்க....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ஹேமா
சொன்னால் மட்டும் போதாது, ஒழுங்கா அண்ணாக்கு செய்து கொடுங்க... அண்ணா என்ன சொல்றாரோ அத எனக்கு சொல்லுங்க.... ஓகே வா...

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

நான் இந்த தோசை செய்தேன் மிகவும் நன்றாக உள்ளது. very.........thanks....... my husband&sons like it.

வாழு இல்லை வாழவிடு

Your recipe looks awesome and we'll definitely try it.

Thanks.

Hai radha

u r recipe very very taste, thank u very much for u r Dosai

Manimekalai

என்றும் அன்புடன்,

மணிமேகலைராம்குமார்
வாழ்க்கை வாழ்வதற்கே

நான் 1/2 டம்ளர் அரிசி, 1/4 டம்ளர் உளுந்து, காலையில் ஊற வைத்து இரவு செய்தேன். சரியா வரலைக்கா, அப்புறம் அம்மாக்கிட்ட கேட்டு காலையில் இன்னும் கொஞ்சம் உளுந்து மட்டும் தனியா அரைத்து சேர்த்தேன், கொஞ்சம் பரவாயில்லையா இருந்தது.

இட்லி அரிசியும், பச்சரசியும் போட்டேன், அப்புறம் கொஞ்சம் சீரகம் சேர்த்தேன், கடலை பருப்பும், வெந்தயமும் ஊற வைக்க மறந்து போய், ஒரு மணி நேரம்தான் ஊறியது.

அன்புடன்
பவித்ரா

வாழ்த்துக்கள்மா, நல்ல சுவையான ரெசிபி தந்திருக்கீங்க!. உடனே அண்ணிட்ட சொல்லி சாப்பிட வேண்டும்

அன்புடன்
THAVAM

பவி உளுந்து ஏன் அதிகமா சேத்த... நான் அந்ந அளவு கொடுக்கலையே.. அரை டம்ளர் அரிசிக்கு ஒரு பிடித்த பிடி உளுந்து போட்டால் போதும்டா..

நீ சேர்த்த வரை ஒன்றும் தவறில்லை. உளுந்து அதிகம் சேர்த்தால் கொழகொழப்பு அதிகமாகி தோசை இழுக்கவே வராது. நம்ம பொதுவா இட்லிக்கு 4க்கு 1 டம்ளர் உளுந்து தான போடுவோம். அத போல தான் தோசைக்கும். அதே அளவு போட்டால் போதும்.

மற்றபடி கடலைப்பருப்பு ஊறப்போட மறந்தா வெந்நீர்ல ஒரு 1 மணிநேரம் ஊறப்போட்டா சீக்கிரம் ஊறிடும். வெந்தயமும் கூட... அதனால உளுந்த கொறச்சு ஊறப்போட்டு பாரு...

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

சுமி செழியன்,பத்மா,மணிமேகலை ராம்குமார் மிக்க நன்றிப்பா.. செய்து பார்த்து பின்னுாட்டம் கொடுத்ததற்கு. நான் இத்தனை நாள் கவனிக்கவில்லை. தாமதமான பதிவுக்கு மன்னிக்கவும்.

தவமணி அண்ணா அண்ணிக்கிட்ட சொல்லி கண்டிப்பா செய்யச்சொல்லுங்க.. குட்டீஸ்க்கு கண்டிப்பா பிடிக்கும்.

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

அன்பு ராதா ஹரி,

இன்னிக்குதான் வேற ஒரு இழையில், ஆமினா இந்தக் குறிப்பு பற்றி சொல்லியிருந்தது பார்த்தேன்.

படங்களும், பின்னூட்டங்களில் தெளிவான விளக்கங்களும், அருமை.

விருப்பப் பட்டியலில் சேர்த்து விட்டேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

ஹாய் ராதா,நானிந்ததோசை எப்படி போடனும்னு தனியா ஒரு இழையில் கேட்டிருந்தேன்.அதற்கு ஆமினா உங்க ரெசிபியைபார்க்க சொன்னாங்க.ஆனால் அதில் வெந்தயம் ஒரு மேஜைக்கரன்டி போடசொன்னீர்கள் அது கசக்காதா சொல்லுங்கள்.pls

ஹலோ ராதா ஹரி,

எப்படி இருக்கிங்க. நானும் ஆமினா கொடுத்த குறிப்பை பிடித்துக்கொண்டு இங்கே வந்துவிட்டேன்! :) நன்றி ஆமினா & இனியா (உங்க கேள்வி & பதிலுக்கு).

அரைத்து, உடனடியா வார்க்க முடியற தோசையா?. அருமையான ஐடியாவா இருக்கே!. விருப்பப் பட்டியலில் சேர்த்தாயிற்று. கண்டிப்பா ட்ரை பண்ணி பார்த்துவிட்டு சொல்கிறேன். மிக்க நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

ராதா இந்த தோசை ரொம்பவும் நன்றாக இருந்தது. தேங்கஸ்.

வாழு இல்லை வாழவிடு

சீதாம்மா மிக்க நன்றி. கண்டிப்பா ஒரு நாள் செய்து பார்த்துவிட்டு எனக்கு பின்னுாட்டம் கொடுங்க.

சுமி செய்து பார்த்து பின்னுாட்டம் கொடுத்ததற்கு மிக்க நன்றிப்பா.

இனியா வெந்தயம் சேர்த்து தோசை வார்த்தால் தானே அதன் மணம் நமக்கு கிடைக்கும். நான் கொடுத்துள்ள அளவு சேர்த்தால் கசக்காதுப்பா. கண்டிப்பா செய்து பாருங்க. உங்களுக்கும் பிடிக்கும்.

சுஸ்ரீ கண்டிப்பா செய்து பார்த்துட்டு சொல்லுங்கப்பா.. உங்க வருகைக்கும் பின்னுாட்டத்திற்கும் மிக்க நன்றி

ஆமி உங்களால தான் எல்லாரும் இங்க வந்திருக்காங்க போல. தேங்ஸ்டா..

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

நல்ல க்ரிஸ்பியாக வந்தது. நீங்கள் சொன்னது போல் மசால் தோசை போல் செய்தேன் :) அருமையான குறிப்பு. இனி இது அடிக்கடி எங்கள் வீட்டு மெனுவில் உண்டு.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

சூப்பர் தோசை சூப்பர் தோசை ,பார்க்கும் போதே நா ஊறுகிறது ,செய்த பார்க்கிறேன் தோழியே .

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

actually i done this but it came like maida dosai ( rubber maathiri ilukuthu) i dont know wat wrong i did pls tell me hw much kadalai paruppu shd be added for a cup mesurement