பிரஷர் குக்கரில் செய்யும் வெல்லம் சேர்ந்த பால்

தேதி: April 9, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பால் - ஒரு லிட்டர்
மெல்லிய ரக அரிசி - 3 மேசைக்கரண்டி
வெல்லம் (பொடி பண்னியது) - ஒரு கப்
மஞ்சள் வாழைப்பழம் - 2


 

அரிசியைத் தண்ணீரில் ஊற வைக்கவும். பெரிய பிரஷர் பானிலோ, பிரஷர் குக்கரிலோ பாலைக் கொதிக்க விடவும்.
கொதித்ததும் அரிசியைக் கழுவி வடியவைத்து அதில் போடவும்.
எல்லாம் சேர்ந்து கொதிக்கும்போது குக்கரை மூடி வெயிட்டைப் போடவும்.
விசில் வரக் காத்திராமல் அடுப்பை உடனே சின்னது பண்ணவும்.(இது மிக முக்கியம்).
முடிந்தால் குக்கருக்கு அடியில், பர்னருக்கு மேலே ஒரு பழைய தோசைக்கல் வைப்பது நல்லது. இது பால் பொங்குவதைத் தடுக்கும்.
25-30 நிமிஷம் கழித்து அடுப்பை அணைக்கவும். குறைந்தது 20 நிமிடங்கள் கழித்துக் குக்கரைத் திறக்கவும்.
ஓசை அடங்கித் திறப்பதற்குள், அடுப்பில் 1 கப் பொடி பண்ணின வெல்லத்தை அரைக் கப் தண்ணீரில் நன்கு கரைய விடவும்.
நன்றாக 5 நிமிடங்கள் பாகு கொதிக்கட்டும். பிறகு குக்கரைத் திறந்ததும், பாகை அதில் வடிகட்டி விடவும்.
2 மஞ்சள் வாழைப்பழங்களைக் கையால் பிசைந்து, சூடாக இருக்கும் போதே அதில் போட்டு கலந்து விடவும். ஏலப்பொடி தேவையில்லை.


மேலும் சில குறிப்புகள்