மசக்கையை எப்படி எதிர்கொண்டீர்கள்

இரண்டாம் மாதம். சதா குமட்டல், வாந்தி. 24 மணி நேரமூம் அசதி. வெளி நாட்டில் தன்னந்தனி குடித்தனம். அலுவலக வேலை, வீட்டில் முதல் பையனை பார்க்க வேண்டும். நான் மட்டும் அல்ல எத்தனையோ பேர் இத்தருணத்தை சாமாளித்து இருப்பீர்கள். ஆலோசனை கூறுங்களேன்.
Tips Please

வித்யா,
உங்கள் தலைப்பில் "மசக்கையை எப்படி எதிர்கொண்டீர்கள்"னு மாத்தினா, இது பற்றி அப்புறம் தேடி படிப்பவர்களுக்கு உதவியாக இருக்கும். தப்பா எடுத்துக்காதீங்க பா.

நான் என் அனுபவத்தை சொல்றேன். பொதுவா மசக்கை, வாந்தி, மயக்கம் எல்லாம் 6 முதல் 12 வாரம் வரை தான் இருக்கும்.இது தான் ப்ளாசன்ட்டா உருவாகும் காலம்.அதனால் ஏற்படும் ஹார்மோன்களின் மாற்றமே மசக்கைக்கு காரணம் என படித்து இருக்கிறேன்.

முதல் 3மாதங்கள் கண்டிப்பாக ஓய்வு தேவை.நான் வேலைக்கு செல்வது இல்லை.அதனால் தேவையான ஓய்வு கிடைத்தது.அதிகமான வாந்தியினால் உடலில் நீர் வற்றி போகும். மருத்துவரின் ஆலோசனையின் படி மாத்திரை எடுத்துக் கொள்ளலாம்.நான் வெறும் வைட்டமின் B6 மற்றும் சிறிய அளவு தூக்க மாத்திரை எடுத்துக் கொண்டேன்(மருத்துவரின் ஆலோசனையின் படி).
வெளி நாட்டில் தனியே இருப்பதால், கணவர் மட்டுமே பேருதவியாக இருந்தார். அவரே சமைத்தும் விடுவார். பையனையும் ரெடி பண்ணி Day Care ல் விட்டு விடுவார். நான் சென்று கூட்டி வருவேன்.4 மாதங்களுக்கு மேல் மசக்கை, குமட்டல் எல்லாம் சரியாகி விட்டது. அதன் பின் நானே, சமயலையும், பையனையும் பார்த்துக் கொண்டேன்.

வேலைக்கு போகும் பெண்ணாக இருக்கும் பட்சத்தில்,கணவர் கண்டிப்பாக உதவ வேண்டும். குழந்தையை Day Care ல் விடலாம். ஆனால் கண்டிப்பாக ஓய்வும், நல்ல தூக்கமும், உணவும் தேவை.

தங்களின் கருத்துக்கு நன்றி. நான் கொஞ்சம்(இல்லை நிறைய) நாக்கு நீண்ட தேவதை. கணவர் சமையல் பிடிக்கவில்லை. என்னால் சமைக்க முடியவில்லை. சதா நெஞ்செரிச்சல் எவ்வளவு ஆன்டாசிட் சாப்பிடுவது. இதை எப்படி எதிர் கொண்டீர்கள்.

வித்யா,
தலைப்பை மாற்றியதற்கு நன்றி. நானும் உங்களைப் போல தான்//நாக்கு நீண்ட தேவதை//.நல்ல ருசியாக இருந்தால் தான் சாப்பிடுவேன். ஆனால், வேறு வழியில்லை. சமைக்கிறாரேனு சும்மா இருக்கனும், குறை சொன்னால் எப்படி? ஆனால் அவரும் பாவம். அவர் சமைச்சு சமைச்சு,போர் அடிச்சு,ஒரு நாள் சரவணபவன் போய் சாப்பிட்டு வந்தார். எனக்கு மசக்கை சரியான பிறகு, சாம்பார் வைத்து கொடுத்தேன். ஆனால் நான் சாப்பிட மாட்டேன்.
நெஞ்சு எரிச்சல் எனக்கு இல்லை. அதனால், அதை பற்றி எனக்கு தெரியவில்லை.

கணவரின் சமையலை சாப்பிடப் பழகிக் கொள்வதுதான் ஒரே வழி. எல்லாம் ஒரு ஓரிரு மாதங்கள் தானே. எனக்கு தற்போது (இரண்டாவது குழந்தைக்கு) பெரிய பிரச்சனை இல்லை. நானே சமைத்துவிடுவேன். முதல் குழந்தை சமயம் ரொம்ப சிரமப்பட்டேன். சமயலறைப் பக்கமே வர முடியாது. ஒரே வாந்திதான். அப்போதெல்லாம் அவர் சமையல்தான்.

உங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு சமையலை அவர் நன்றாகச் சமைக்க வாய்ப்பிருக்கிறது. அதைக் கண்டுபிடித்து ரெண்டு மாதத்திற்கு adjust செய்துகொள்ளுங்கள். நான் அப்போது கொஞ்ச காலம் இட்லியிலேயே வாழ்ந்தேன்.

அன்புடன்,
இஷானி

வித்யா,

ஹர்ஷா அவங்க சொன்ன மாதிரி தலைப்பை மாத்தினது எனக்கும் வசதியா இருக்கு!:))

உங்க நிலமையில் தான் நானும் இருக்கேன். ஆனால் அம்மாவீடு 30நிமிட பேரூந்துசெல்லும் தூரம் தான்.

அங்க போய் சாப்பிட்டு வருவேன்; இருந்தாலும் சாப்பாட்டுக்கு மனசு இல்லை.

காலையில் எதுவுமே சாப்பிடமுடியலை.

வாந்தியா வெளிய இன்னும் வரலைன்னாலும். ஒரே குமட்டல், (வாய்க்கசப்பு) வாயூறல் இப்படி இருக்கு!.

‘தாய்மை”யின் மகத்துவம் இன்னும் அதிகமா உணர முடியுது.

‘எல்லா காய்கறியும் போட்டு’அமுது” செய்து என் கணவர் தருவார். இதில அவர் கில்லாடி அதனால் அவர் வரும் நேரங்களில்(சனி,ஞாயிறில் தான் வருவார் வேலைப்பிரச்சனையால்) எனக்கு ‘அமுது செய்து தந்து அசத்துவார்.
ரசமும், தயிரும் சேர்த்து சாப்பிட நல்லாயிருக்கும்.

உங்களைமாதிரியே நானும் வேலைக்கு போகிற பெண் என்பதால் ஓய்வு இல்லை.
பேரூந்தில் போகும் போது ‘குமட்டல்,வாந்தியா இருந்தால் ‘தலைமுடியில் அடிப்பாகத்தை மோர்ந்து பார்க்க சொல்லக்கேட்டிருக்கிறேன். அப்படியே செய்கிறேன்.:)

பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயம் கொள்ளல் ஆகாது பாப்பா'

ஆன்டாசிட் சாப்பிடாதீர்கள்..சாப்பாடு முடிந்ததும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு பாருங்கள்.1 கப் குளிர்ந்த பால் (ஒத்துக் கொண்டா) குடித்து பாருங்கள்..அதுவுமில்லையென்றால் ஜீரகத்தை வறுத்து தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து குடித்து பாருங்க..இதுவெல்லாம் அசிடிடிக்கு நல்ல நிவாரணம் தரும்.
கொஞ்சமாக சாப்பிடுங்க..இன்னொரு 2 மாதங்களுக்கு நல்ல குக் கிடைக்குமா என்று பாருங்க...கொஞ்சம் காசு போனாலும் உங்களுக்கும் சத்தாக வீட்டிலேயே சாப்பிடலாம்.
கூடுமானவரை பழவகை,காய்கறிகள் சாப்பிடுங்க...இடியப்பம் புட்டு ,கத்தரிக்காய்,முட்டை ,கடலை,பருப்பு வகைகள் வாயுவுண்டாக்கலாம்...எது ஒத்துக் கொள்ளவில்லை என்று கவனித்து அதை தவிர்த்து விடுங்கள்..

நெல்லிக்காயை சிறிது சிறிதாக வெட்டி அதில் கொஞ்சம் உப்பு, காரபொடி போட்டு குலுக்கி ஒரு boxil போட்டு வைத்து கொள்ளுங்கள். vomiting sensation இருக்கும் போதும்,வாய் குமட்டல் இருக்கும் போதும் சாப்பிடுங்க. குறையும். இந்த சமயத்தில் சாப்பிடவும் பிடிக்காது, இருந்தாலும் எது பிடிகிறதோ அதை செய்து சாபிடுங்கள். கொஞ்ச நாளைக்கு cook கிடைத்தால் வைத்து கொள்ளுங்கள். fruits vegetables நிறைய சாபிடுங்கள். தண்ணீர் நிறைய குடியுங்கள்.

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

வித்யா,
மசக்கையின் போது நான் பின்பற்றிய,எனக்கு தெரிந்த சில குறிப்புகள்,
1. ஏற்கனவே குழந்தை பெற்றிருந்தாலும், முதல் கர்ப்பம் போலவே இரண்டாவதும் இருக்காது.சிலருக்கு இரண்டாம் கர்ப்பத்தின் போது மசக்கை அவ்வளவாக இருக்காது.
2. குமட்டுதே என்று சாப்பிடாமல் இருந்தால் பசி அதிகமாகி, வாந்தி வந்துவிடும்.
3. அவ்வப்பொழுது கொஞ்சம், கொஞ்சம் சாப்பிடுவது நல்லது.
4. பால் பிடிக்கவில்லையெனில் மோர் குடிக்கலாம். மோரை தாளித்து குடித்தால் சளி பிடிக்காது.
5. பருப்பு வாசம் பிடிக்கலைனா, கார குழம்போ, புளிக்குழம்போ வைத்துசாப்பிடலாம். புளியை கம்மியாக சேர்த்துக் கொள்வது நல்லது.
6. வெறும் கார குழம்பு வைக்கும் போது அதனுடன் உருளைக்கிழங்கு, கத்தரிக்காய், முருங்கைக் காய், அவரைக்காய், முள்ளங்கி, மொச்சை சேர்த்துக்கலாம்.
7. சாதம் பிடிக்கவில்லை என்றால், இட்லி, ப்ரெட், இடியாப்பம் சாப்பிடலாம்.இட்லிக்கு பருப்பு பொடியோ, பூண்டு பொடியோ நல்லெண்ணெய் சேர்த்து தொட்டுக் கொள்ளலாம்.
8. சாததுடன், ஒரு கை அளவு ராகிமாவு சேர்த்து கிளரி களி செய்து, கார குழம்பு தொட்டு சாப்பிடலாம்.
9. சாப்பிடும் போது வயறு நிறைய சாப்பிடக் கூடாது. உடனே வாந்தி வரும்.
10. அடுத்தவரின் வற்புறுத்தலால், பிடிக்காத,குமட்டலை அதிகமாக்குகிற உணவை சாப்பிடாதீர்கள்.
11. அதிகம் காரமான,மசாலா உள்ள உணவை தவிர்க்கவும்.
12. தேங்காய்,கீரை போன்றவை செரிக்க அதிக நேரம் எடுக்கும். இவற்றையும் மசக்கையின் போது தவிர்ப்பது நல்லது.
13. பசிக்கும் போது பழங்கள், ஜூஸ்,மோர், நட்ஸ் எடுத்து கொள்ளலாம்.
14. கண்டிப்பாக மருத்துவர் கொடுத்த,பரிந்துரைத்த மாத்திரைகளை சாப்பிட வேண்டும். ஆரஞ்சு ஜூஸுடன் எடுத்துக் கொண்டால் நல்லது. பகல் நேரத்தில் மாத்திரை போட்டால் சில நேரம் வாந்தி வரும். அதனால் இரவு தூங்குவதற்கு முன் மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம்.
15. வேலைக்கு போகிற பெண்கள் என்றால்,(work from home) வீட்டிலிருந்தே வேலை செய்யலாம். வேலைக்கு சென்று, வரும் களைப்பு இருக்காது.

அனுபவம் உள்ள தோழிகள் வந்து, கருத்துகள் கூறுவார்கள், காத்திருங்கள்.

எனக்கு வாந்தி குமாட்டலால் நெஞ்செரிச்சல் வருகிறது. அதை தான் தாங்க முடியவில்லை. மூன்று மாதங்கள் முடிந்தவுடன், மருந்து எடுத்துக் கொள்ளலாம் என்று உள்ளேன். எனக்கும் இது இரண்டாவது குழந்தை, ஆனால் மசக்கையில் ஒரு வித்யாசமும் இல்லை. எனக்கு முதல் பிரசவத்தில் நியாபகம் உள்ளது எல்லாம் வாந்தி, வாந்தி, நெஞ்செரிச்சல். தளிகா அலோசனைபடி ஒரு கூக் பார்க்கலாம் என்று உள்ளேன்.

காய்கறி அமுது, கேக்கும்போதை சுவைக்கனும் போல் உள்ளது. எப்படி செய்வது. முடி விசயத்தில் எனக்கு அவ்வளவு கொடுப்பினை இல்லை. படுத்தல் பாயைக் கூட தொடாத அளவுக்கு கூந்தல்.

மேலும் சில பதிவுகள்