அறுசுவையை கொண்டாடுவோம்

இது பண்டிகை காலம் என்பதால் நாம் நிறைய பலகாரம் செய்வோம். அப்படி யார் யார் என்ன என்ன செய்தீர்கள், யாருடைய குறிப்பை பார்த்து செய்தீர்கள் என்பதை பதிவு செய்வோம். வாங்க பண்டிகையை ஒன்றாக சேர்ந்து கொண்டாடலாம்.

லாவண்யா

நேற்று தான் நாங்கள் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடினோம். அறுசுவை குறிப்பை பார்த்து கீழே உள்ள அனைத்தையும் செய்தேன்.
ரிப்பன் பக்கோடா (node 2653), ஜலீலா அவர்களின் மணங்கொம்பு முறுக்கு, சுபா ஜெயப்ரகாஷ் அவர்களின் தட்டை, சீடை (node 374), விஜி அவர்களின் (vijitvm) மைக்ரோவேவ் வேர்கடலை பக்கோடா, தேங்காய் பர்பி (node 2050), அவல் பாயசம் (node 506).

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

லாவண்யா, எனக்கு பண்டிகை எல்லாம் கிடையாது. ஆனாலும் கவிசிவாவின் இஞ்சி தயிர் குறிப்பு (http://www.arusuvai.com/tamil/comment/reply/16021) என்னைக் கவர, முயற்சி செய்தேன்.

சுர்ரென்று இருந்தது சுவை. திரும்பவும் ஒரு முறை செய்தாயிற்று.

என்ன வித்தியாசம் என்றால்... அவங்க //வாயால// சாப்பிடுவாங்களாம், நான் ஸ்பூனால தான் சாப்பிட்டேன். //சைட் டிஷ்தான்// என்றாங்க. நான் மெய்னாவே சாப்பிட்டேன். இனிமேல் //குமரி மற்றும் கேரளா விருந்துகளில்// மட்டுமல்லாது நியூஸிலாந்து விருந்துகளிலும் இது இடம் பெறச் சந்தர்ப்பம் இருக்கிறது. ;)

நன்றி லாவண்யா & கவிசிவா. ;)

‍- இமா க்றிஸ்

இமாம்மா இஞ்சி தயிர் செய்து ஸ்பூனால சாப்பிட்டாச்சா :). இனிமே நியூசிலாந்து விருந்திலும் இஞ்சி தயிருக்கு இடம் இருக்கா! ரெசிப்பி கொடுத்த கவியை விருந்துக்கு கூப்பிடுவீங்களா?!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

பண்டிகை இருந்தால் மட்டும் தான் அறுசுவையை பார்த்து சமைக்கிறோமா? இல்லையே.....எந்த ஒரு பார்ட்டி...இல்லை வீட்டில் விருந்து எதுவாக இருந்தாலும் இதை பார்த்து தானே மெனுவே தீர்மானிக்கிறோம்....
நீங்க சொல்லும் போதே குடிக்கணும்னு தோணுது.......இனி நியூஸிலாந்து விருந்தில் மட்டும் இல்லை அமெரிக்க விருந்திலும் இடம் பெரும்.
கவிசிவா என்னங்க வந்து உங்கள் மெனுவை குடுக்காமல் போய்டீங்க.....

அவரவருக்கு பிடித்த மெனுவை குறிபிடுங்க........

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

எல்லோரும் கொண்டாடுவோம்! ஒன்றாக கொண்டாடுவோம்!

அறுசுவை அருமை பேசி! ஆயிரம் பேர் வந்து இங்கே! (2) (எல்லோரும்)

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மேலும் சில பதிவுகள்