தேங்காய்-அரிசி வெல்லப் பாயசம்

தேதி: April 9, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

அரிசி - 2 மேசைக்கரண்டி
தேங்காய்த் துருவல் - 2 மேசைக்கரண்டி
வெல்லம் - முக்கால் கப்
பால் - ஒரு கப்
முந்திரிப்பருப்பு நறுக்கினது - ஒரு மேசைக்கரண்டி
திராட்சை - ஒரு மேசைக்கரண்டி
ஏலப்பொடி - அரைத் தேக்கரண்டி


 

அரிசியை அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
அதை வடியவைத்து தேங்காய்ப்பூவுடன் போட்டு தேவையான தண்ணீர் விட்டு, நைஸாக அரைக்கவும்.
முக்கால் கப் வெல்லத்தை ஒன்றரை கப் தண்ணீரில், அடுப்பில் வைத்து கரைய விட்டு, வடிகட்டி, மறுபடியும் கொதிக்கவிடவும்.
அரைத்த கலவையை இதில் கொட்டி, கட்டி தட்டாமல் நன்றாகக் கிளறவும். இது மிக முக்கியம்.
சிறிது கொதித்து, நன்கு வெந்ததும்.இறக்கி வைத்து, தேவையான பாலை விடவும்.
ஏலப்பொடி சேர்த்து நன்கு கிளறவும். நெய்யில் நறுக்கின முந்திரிப்பருப்பு, திராட்சை ஆகியவற்றை வறுத்துச் சேர்க்கவும்.


இது தமிழ்நாட்டில் எல்லா வீடுகளிலும் பண்டிகைகளின் போது பொதுவாகச் செய்யப்படுவது.

மேலும் சில குறிப்புகள்