கம்பு இட்லி, தோசை

தேதி: September 3, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (10 votes)

நம் உடலின் எடையை குறைக்க கம்பை சேர்த்து கொள்ள வேண்டும் ஏன் எனில் க்ளைசிமிக் இன்டெக்ஸ் விகிதப்படி கம்பில் லோ க்ளைசிமிக் அளவு உள்ளது எடை குறைக்க நினைப்பவர்களுக்கு கம்பு வரப்பிரசாதம்.

 

கம்பு - ஒரு கப்
பச்சரிசி - ஒரு கப்
உளுந்து - ஒரு கைப்பிடி
வெந்தயம் - சிறிது
உப்பு - தேவைக்கு ஏற்ப


 

உப்பு தவிர்த்து மற்ற அனைத்து பொருட்களையும் 5 மணி நேரம் ஊற வைக்கவும்.
பின்பு வெட் கிரைண்டேரில் ஊற வைத்தவற்றை போட்டு அரைத்து எடுத்து உப்பு சேர்த்து கரைத்து வைக்கவும்.
புளிக்க வைத்த மாவை மறுநாள் இட்லி தட்டில் ஊற்றி பானையில் வைத்து வேக வைக்கவும்.
நன்கு வேக வைத்து இறக்கவும். சுவையான, எளிதாக செய்யக்கூடிய கம்பு இட்லி ரெடி.
இதே மாவைக் கொண்டு தோசையும் வார்க்கலாம். தோசைக் கல்லில் எண்ணெய் தடவி காய வைத்து முதல் நாள் அரைத்து வைத்த மாவை எடுத்து தோசையாக வார்க்கவும்.
இருபுறம் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
சுவையான கம்பு தோசை தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அழகா செய்துற்கீங்க. சத்தானதும் கூட. வாழ்த்துக்கள் கவிதா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அதிகம் கம்புவில் கம்பஞ்சோறு தான் செய்து பழக்கம், இப்பொழுது கம்பில் இதுபோல செய்து சத்தானதாக,சுவையுடன் சாப்பிடலாம்.அதும் கம்பு உடம்புக்கு குளிர்ச்சி என கேள்விப்பட்டிருக்கிறேன், நன்றி

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

நல்லா இருக்கு...சமையல் களஞ்சியமா இருப்பீங்க போல இருக்கே...படத்தை பார்த்தவுடன் நினைத்தேன் நீங்களாத்தான் இருப்பிங்கன்னு..:-

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

கவிதா
நல்ல குறிப்பு, எப்பவும் போல ஒரு கேள்வி, மிக்ஸியில் அரைக்கலாமா?

அன்புடன்
பவித்ரா

கவிதா,
கம்பில் இட்லியும், தோசையும் செய்து அசத்தியிருக்கீங்க. ஆரோக்கியமான உணவு. வாழ்த்துக்கள்.

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கு மிக்க நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

ஆமினா,
ஆமாம் dual purpose தான்
செய்து பாருங்கள்
உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

ஹேமா மேடம் ,
உடலிற்கு மிகவும் நல்லது
செய்து பாருங்கள்
உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

இளவரசி மேடம் ,
உங்க அளவிற்கு எல்லாம் இல்லை அம்மா இதே போலே தான் செய்வாங்க அதை தான் பகிர்ந்து கொண்டேன்
நீங்களும் செய்து பாருங்கள்
உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

பவி,
கண்டிப்பாக அரைக்கலாம் நல்லாவே வரும் கொஞ்சம் நேரம் அதிகம் ஊறவையுங்க எளிதாக அரைபடும்
உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

அன்பரசி,
ரொம்ப நன்றி
நீங்க இந்த நேரத்தில் சாப்பிடுங்க ரொம்ப நல்லது

என்றும் அன்புடன்,
கவிதா

தொப்பை குறைய வாய்ப்பு உள்ளதா?

shagila

hi,

ccan we make dosa in raagi flour ? i bought raagi flour from india?

(raagi powder ).

waiting for reply.

thanks,
priya .

ஷகிலா மேடம்,
தொப்பை குறைவதற்கு கம்பு உதவுமா என்று தெரிய வில்லை இது pseudo grain அதனால் diet செய்பவர்களுக்கு முழு சத்தும் கிடைத்து complete filling கிட்டும் தொப்பை குறைய உடற்பயிற்சி தான் செய்யணும் அதுதான் நல்ல பலன் தரும்
உங்கள் வருகைக்கு நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

பிரியா மேடம்,
இப்போ தான் கண்டேன் தாமதமாக பதில் தந்தற்கு மன்னிக்கவும்
ராகி மாவு வைத்து நிறைய செய்யலாமே
இங்கே போய் பாருங்க
http://arusuvai.com/tamil/recipes/219
உங்கள் வருகைக்கு நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

very useful tips

உங்கள் வருகைக்கு நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

Kavitha, Did you use whole grain Kambu? Can I use kambu flour? Will it give the same soft idlis?

ஏன் மேடம், பச்சரிசி?இட்லி அரிசியில் செய்தால் வராதா?