தேதி: April 9, 2006
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
பால் - 2 கப்
கடலை மாவு - 2 மேசைக்கரண்டி
சர்க்கரை - அரை கப்
நெய் - 2 மேசைக்கரண்டி
முந்திரிப்பருப்பு நறுக்கினது - ஒரு மேசைக்கரண்டி
திராட்சை - ஒரு மேசைக்கரண்டி
ஏலப்பொடி - அரைத் தேக்கரண்டி
அடுப்பை நிழல் போல எரியவிட்டு, நெய்யில் கடலை மாவை நல்ல மணம் வர வறுக்கவும்.
ஆறியதும், அரை கப் தண்ணீரில் கலந்து தயாராக வைக்கவும்.
பாலைக் கொதிக்க விட்டு, இதை கொட்டிக் கட்டி தட்டாமல் கிளறவும்.
கடலை மாவு நன்றாக வெந்ததும், சர்க்கரை போட்டு, கரைந்ததும் இறக்கி, ஏலப்பொடி போட்டு, நெய்யில் முந்திரி, திராட்சை வறுத்துப் போடவும்.
இது செய்வதற்கு மிக சுலபமானது.