சமீபத்தில் படித்தது - பைப்போலார் டிஸார்டர்

சமீபத்தில் படித்தது :

அறுசுவை தோழிகளே சமீபத்தில் ஒரு புத்தகத்தில் நான் படித்தது.
பைப்போலார் டிஸார்டர் என ஒரு மனநோய். அது வெளிநாட்டில் வாழும் மனைவிமார்களுக்கு வருவதாக கண்டுபிடிப்பு.

தனியாக வீட்டில் கணவன் வேலைக்கு சென்றவுடன் இருப்பதால் ஒரு வித மன நோய் ஏற்படுமாம். கிட்டத்தட்ட பிரிவோம் சந்திப்பொம் ஸ்னேகா போல. இது நாளடைவில் தற்கொலை முயற்சிக்கு கொண்டு சென்று விடுகிறது... கணவன் மற்ற பெண்களுடன் சகஜமாக பழகுவது, பார்ட்டிகளின் கலாச்சாரம், மது, வேலை பளு மேலும் பலக் காரணங்களினால் அவள் தனிமைப்படுத்தப்படுகிறாள். அமெரிக்காவில் இரண்டு குழந்தைகளை கொண்டும் ஒரு பெண் தற்கொலை செய்திருக்கிறாள்.

இதன் தொடக்கம் தூக்கமின்மை, தன்னம்பிக்கையின்மை, மன அழுத்தம் என சென்றுக் கொண்டே இருக்கும்.

நம் தோழிகளுக்கு அறுசுவை உள்ளது. அதனால் கவலை இல்லை.. மேலும் அறுசுவை தவிர வேறு எதில் நீங்கள் தனிமையில் உங்களின் கவனத்தை செலுத்துகிறீர்கள். இது பலருக்கும் பயன்படும் ஒன்று.. மற்ற நமக்கு தெரிந்த தோழிகளுக்கும் அறுசுவையை சிபாரிசு செய்யலாம். இப்படிப்பட்ட நிலையில் இருந்த எனது ஒரு தோழிக்கு நான் அறுசுவையில் மெம்பெர் ஆக சொல்லி அவள் இப்பொழுது பதிவுகளை பார்த்துக் கொண்டு இருக்கிறாள்.

இது யாரையும் பயமுறுத்தும் விஷயம் இல்லை. இதை பற்றி ஒரு அவேர்னஸ் அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். காரணம் நம் அனைத்து பெரும்பாலான தோழிகள் வெளிநாட்டில் உள்ளனர்.. பொழுதை கழிப்பதில் உங்களின் அனுபவத்தை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

இது உண்மை தான். ஊரில் இருக்கும் வரை சொந்தபந்தம், நண்பிகள் என்று இருப்பவர்கள் வெளிநாடு வந்ததும் தனிமை தான். உடம்பு சரியில்லை என்றால் ஊரில் அம்மாவே எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார். ஆனால், இங்கு யாருமேயில்லை. திருமணமான புதிது எனில் கணவரிடம் சொல்லவும் சங்கடமாக இருக்கும். எனக்கும் இங்கு வந்த புதிதில் அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போனதுண்டு. அப்ப எனக்கு அறுசுவை பற்றி தெரியாது.

டிவியும் பார்க்க பிடிப்பதில்லை. ஜன்னலில் வேடிக்கை பார்ப்பது தான் ஒரே ஒரு பொழுது போக்கு. கொஞ்ச நாட்களின் பின் கம்யூட்டர் கிளாஸ் போனேன். கொஞ்ச நண்பிகள். மீண்டும் வேறு புதிய இடத்திற்கு மாற்றல். மீண்டும் தனிமை.

என் மகன் பிறந்த பின் தான் அறுசுவை பற்றி தெரியும்.இப்ப என் ப்ளாக்கில் நிறைய எழுதுவேன். பிறகு கொஞ்சம் க்ராப்ட், கதை எழுதுவது, சமையல் குறிப்புகள் என்று பிஸியாக இருக்க ஆரம்பித்தேன். நிறைய தோழிகள், தோழர்கள் என்று சந்தோஷமாக இருக்கிறேன். முகம் தெரியாவிட்டாலும் இனிமையான நட்புகள். ப்ளாக்கில் தொடங்கிய நட்பு அதையும் தாண்டி வளர்ந்திருக்கு. எல்லாமே ஆரோக்கியமான நட்புகளே. இப்ப எனக்கு நேரமே பத்தவில்லை.

க்ராப்ட் செய்வதில் நிறைய ஆர்வம், தையல் வேலைகள் என்று பிஸியாக இருந்தால் தனிமை தெரியாது. லைப்ரரி போவதும் நல்லது.
வாணி

ரம்யா நல்ல விஷயத்தை சொல்லியிருக்கீங்க.

தனிமையை சமாளிக்க நான் கையாள்பவை

மனசுதான் எல்லாத்துக்கும் காரணம். முதலில் உண்மையை யதார்த்ததை ஏற்றுக் கொள்ளும் மனதை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதுதான் நமது வாழ்க்கை என்று முடிவாகி விட்டது. அதில் நாம் எப்படி சந்தோஷமா இருக்கணும்னு யோசிக்கணுமே தவிர அய்யோ நான் மட்டும் தனியா இருக்கேனே ஊரில் இருந்தால் எல்லார் கூடவும் இருக்கலாமேன்னு மனசைப் போட்டு குழப்புவதால் எந்த தீர்வும் கிடைக்கப் போவதில்லை. ஊரில் உறவுகளோடு இருப்பவர்களைக் கேட்டால் அப்பப்பா ஒரே பிக்கல் பிடுங்கல் எங்காவது வெளியூரில் இருந்தால் தொல்லை இல்லாமல் இருக்கலாம் என்பார்கள். எப்போதுமே இக்கரைக்கு அக்கரை பச்சை.

முன்காலம் போல் இல்லை. இப்போது தொலை தூரத்தில் இருந்தாலும் முகம் பார்த்து பேசும் வசதி இருக்கிறது. நேரில் பார்ப்பது போல் வராதுதான். ஆனால் ஏங்குவதால் என்ன பயன்? சிக்கல்கள்தான் கூடும்.

பிரிவோம் சந்திப்போம் ஸ்னேகா கேரக்டருக்கு பைப்போலார் டிஸார்டர் பிரச்சினை வரக்காரணம் திருமணத்திற்கு முந்தைய அவளது எதிர்பார்ப்புகள். இப்பொதெல்லாம் திருமணங்கள் குறைந்தது ஆறு மாதங்களுக்கு முன்பாகவே நிச்சயிக்கப் பட்டு விடுகின்றன. எப்படிப்பட்ட வாழ்க்கை அமையப் போகிறது என்ற ஐடியாவும் ஓரளவுக்கு கிடைத்து விடுகிறது. அப்போதிருந்தே நம் மனதை தயார் படுத்திக் கொண்டாலே போதும். தனிமையை எளிதாக வென்று விடலாம்.

அடுத்து நாம் நம்மை எதிலாவது ஈடுபடுத்திக் கொண்டு நம்மை பிசியாக வைத்துக் கொள்ள வேண்டும். ஏதேனும் ஹாபி இருந்தால் அதை தொடரலாம். புதிதாக ஏதாவது கற்றுக் கொள்ளலாம். நமக்குள் இருக்கும் திறமைகளை வெளிப்படுத்தும் விதமான செயல்களில் ஈடுபடலாம். எதுவாக இருந்தாலும் முழு ஈடுபாட்டுடன் மகிழ்ச்சியாக செய்ய வேண்டும்.

இன்னிக்கு நான் இந்தோனேஷியாவில் இருக்கிறேன். நீங்க எப்படித்தான் தனியா இருக்கீங்களோன்னு யாராவது கேட்டால்தான் ஓ நான் தனியாக இருக்கிறேன் என்ற உணர்வே எனக்கு வருகிறது. இல்லேன்னா எனக்குப் பிடித்த வேலைகள் செய்து கொண்டு அறுசுவை,பிளாக், கைவேலைகள், கோலம்னு நான் பிசியாவே இருக்கிறேன். முன்னாடியாவது மதிய வேளைகளில் தூங்குவேன். இப்போது அதுவும் கூட கிடையாது.

எனக்கு இங்கே அருகில் நண்பர்கள் கூட கிடையாது. ஃபோனில்தான் பேசிக் கொள்கிறோம். சிலநாட்கள் சந்திப்போம். ஆனால் என்ன எனக்கு உலகம் பூராவும் தோழிகள் இருக்கிறார்கள் அறுசுவை மூலமாக.

மகிழ்ச்சியை வேற எங்கயும் தேட வேண்டாம். அது நமக்குள்தான் இருக்கு. இல்லாததை நினைத்து ஏங்கி இருக்கும் மகிழ்ச்சியையும் தொலைக்காமல் நீங்கள் இருக்கும் இடத்தில் அந்த சூழ்நிலையில் மகிழ்ச்சியை உருவாக்கிக் கொள்ள முயல வேண்டும். மனமிருந்தால் மார்க்கமுண்டு.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ரம்ஸ்
நல்ல இழை எனக்குன்னு ஆரம்பிச்ச மாதிரியே இருக்கு, கவி சொன்ன மாதிரி எல்லாத்துக்கும் மனம் தான் காரணம். வெளிநாட்டில் இல்லன்னாலும் வெளியூரில் தனியா இருப்பதாலேயே நான் ரொம்ப டிஸ்டர்ப்டா தான் இருப்பேன், வீட்டுக்கு போறதுனாவே ஒரு வித பயம் வந்திடும், இப்ப அறுசுவையால் பரவாயில்லை, யாராவது ஒரு தோழி ஆன்லைனில் இருப்பதால் கொஞ்சம் ஆறுதல்.இன்னும் நிறைய இருக்கு பேசறதுக்கு. ஏன் இப்படி இருக்கணும், வேலையே வேண்டாம் என்று கூட சில முறை தோன்றும், ஆனா சூழ்நிலை அனுமதிக்காது என்றும், ஏன் நம்மால் இருக்க முடியாதான்னு எனக்கு நானே சொல்லி தன்னம்பிக்கை வரவழைத்துக் கொள்வேன். எனக்கு என்ன பயம் என்றால் இந்த் தனிமை என்னை என் CAREERல் முன்னேறமுடியாமல் தடுக்கிறது. அதாவது என் நிலையில் இருந்து PROMOTION கிடைத்தால் TRANSFER இருக்கும், அதனால் PROMOTION வேண்டாம் என்ற எண்ணம் இப்போதெல்லாம் தலை தூக்குகிறது.

அன்புடன்
பவித்ரா

என்ன பவி ரொம்ப சோகமா பேசரிங்க, promotion க்ரது எவ்லோ நல்ல விடயம் அதபோய் avoid பன்னுவிங்கலா? நீங்க ஏன் தனிமய இருக்கிரதா நினைக்கிரிங்க, நமக்கு இருக்குர friends, சொந்தங்கல் எல்லாம் நமக்காக என்டு நினைங்க.......மனச தனிமைல விடதிங்க.

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்!!! அன்புடன், farsana.

பவி ரொம்ப குழப்பிக்காதடா. இதையெல்லாம் ஈசியா கடந்துடலாம். இப்பவே கொஞ்சம் கொஞ்சமா எங்க போனாலும் என்னால் சமாளிக்க முடியுங்கற எண்ணத்தை கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்துக்கோம்மா.

திருமணத்திற்கு முன் நான் தனியாக எங்கயுமே போக மாட்டேன். ட்யூஷன் போனாக் கூட அப்பாவோ அண்ணனோதான் கூட்டிட்டு போகணும் கூட்டிட்டு வரணும். அவ்வளவு பயம். அப்படி இருந்த நான் இன்னிக்கு நாடு விட்டு நாடு சுலபமா தனியா போய்ட்டு வந்துட்டு இருக்கேன். என் கணவருக்கு வெளியூர் போகவேண்டி வந்தால் ஒரு வாரம் பத்து நாட்கள் தனியாகத்தான் இருக்கிறேன்.

எப்படி மாறினேன்னு யோசிச்சா... இருந்துதான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் மற்றும் சூழல்தான் எனக்கு தைரியத்தை கொடுத்தது. பெண்களுக்கு அந்த திறமை உண்டு. இந்த சூழ்நிலையை எப்படி சமாளிப்போம்னு யோசிச்சு பயந்த நாமே அந்த சூழ்நிலையை நிஜத்தில் எதிர்கொள்ளும் போது ரொம்பவே தைரியமா சுலபமா எதிர்கொள்வோம். மூளையும் சமயோஜிதமா வெலை செய்யும் :)

அதனால் பயப்படாம தைரியமா இருங்க. எல்லாம் நல்ல படியாவே நடக்கும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

உங்க ரெண்டு பேருக்கும் என் நன்றி.

கவி நீங்க சொன்ன மாதிரி, வேலைக்கு போறதுக்கு முன்னாடி ராத்திரியில் பாத்ரூம் போனாக்கூட அம்மா கூட வரணுங்கறது தான் என் நிலை, ஆனா இப்ப தனியா ஒரு மாசம் இருந்திருக்கேன். இருக்க முடியுது, ஆனா ஒரு வித பய்மும் தனிமையும் வாட்டி எடுக்கிறது, சில நாட்கள் சாப்பிட கூட பிடிக்காது. ஒருத்தருக்கு என்னத்த சமைக்கிறது சொல்லுங்க. நிறைய புக்ஸ் படிப்பேன், போன், நெட்தான் எனக்கு ஆறுதல். கொஞ்சம் கொஞ்சமா மனச தைரியபடுத்திட்டே தான் வந்திட்டு இருக்கேன். சில சமயம் தனியா சமாளிக்கும் என் தோழி ஒருத்தியை அடிக்கடி நினைவு படுத்திப்பேன், ஓரளவுக்கு தைரியமா இருக்கும்.

இதை விட எனக்கே என்கிட்ட சுத்தமா பிடிக்காத விஷயம் என்னவென்றால் பக்கத்து தெருவில் யாராவது இறந்துட்டாங்கன்னா கூட அப்படி ஒரு பயம் வந்திடும், இதுக்கு தான் நானும் என் மனதை எவ்வளவு கட்டுபடுத்தறேன் ஆனா, முடியல. ஆம்புலன்ஸ் சத்தமும் மிகவும் பயம். இதுவும் கடந்து போகும்ன்னு அடிக்கடி எனக்கு நானே சொல்லிப்பேன். வேறென்ன செய்ய, வீட்டிலயும் சொல்ல முடியாது, சொன்னா வேலையே வேண்டாம்ன்னு தான் அப்பா சொல்வாரு, இருக்க முடியுங்கற நம்பிக்கை இருக்கு, பார்ப்போம்.

அன்புடன்
பவித்ரா

வாணி

நன்றி.. நீங்கள் கூறுவது உண்மைதான். எனக்கு கூட காய்ச்சல் வந்தால் அம்மா என் மீது கை வைத்தால் அத்தனை ஒரு தைரியம் கிடைக்கும்.. என்ன செய்வது.. நீங்கள் கூறியவற்றை செய்து பிஸியாக வேண்டியது தான் .;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

கவி

நீங்கள் கூறியது 100% உண்மை. மனமிருந்தல மார்க்கமுண்டு.. தனிமை தனிமை என நினைத்து வாழ வேண்டிய வாழ்வை தொலைக்கலாமா?

கண்டிப்பா கல்யானத்துக்கு முன்னாடியே ஒரு ஐடியா வரதால நாம இப்படித் தான் இருக்க போறோம்னு மனச தேத்திக்க முடியுது. நன்றி கவி

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

பவி

நீங்கள் கூறுவது சரிதான். ஹோம்சிக் காரணமாக பேங்களூரில் இரண்டு மாதமே இருந்து நல்ல வேலையை விட்டு வீடு திரும்பியவள் நான்.தன்னம்பிக்கை என்றாலும், கொஞ்ச நாள் தானே அம்மா வீடு என்ற எண்ணம தான் என்னை மறுபடியும் வீட்டிற்கு இழுத்தது.

உங்களுக்கு இருக்கும் அதே பயம் தான் எனக்கும் பவி.. அனால் கவி கூறுவது போல டிமேன்ட் என ஒன்று இருந்தால் எல்லாம் சரியாகும்.. கவலை வேண்டாம். பாருங்கள் இன்று நானும் நாடு விட்டு நாடு செல்ல வேண்டிய சூழல். கணவர் என்பதால் பிரச்சனை இல்லை.. ஒரு வித பயம் தான் என்ன செய்வது ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மேலும் சில பதிவுகள்