அசைவ சமையல் வாசனையா இருக்கணும்னா?

என்னோட அம்மா மீன் சமைக்கும் போது கம கமன்னு வாசனையா இருக்கும். ஆனா என் சமையல்ல வாசனை வர மாட்டேங்குது !. எங்க அம்மா சொல்றாங்க அவங்க பச்ச பாம்ப கைல பிடிச்சுருக்காங்கன்னு . :). நான் இனிமேல் பச்ச பாம்ப பிடிச்சா தான் வாசனை வருமா? :) . வாசனையா சமைக்க எதாவது வித்தை உண்டாங்க? உங்க அனுபவத்த சொல்லுங்களேன்.

பி. கு. : சைவம் சமைச்சா நல்ல வாசனையா சமைப்பேங்க. அசைவம் தான் taste இருந்தாலும் சமைக்கும் போது வாசனை இல்ல. :) . என் கணவர் நான் அசைவம் சமைச்சா என்ன கிண்டல் பண்றாருங்க . ஹெல்ப் பண்ணுங்க

சமையலுக்கு அந்த வெங்காயம்,இஞ்சி பூண்டு வதக்குவதிலிருந்து அசைவம் வேகும் அளவு வரை எல்லாம் பக்குவமா இருக்கனும்././போடும் கறிமசாலாக்களும் சரியான அளவாக இருக்கனும்.இன்னொரு விஷயம் வெளிநாட்டில் ஏனோ நம்மூர் போல் சுவையெல்லாம் கிடைப்பதில்லை

உங்க பேர் நான் சொன்னதுதானா இல்ல வேற ஏதாச்சா??? தப்பா இருந்தா மன்னிக்கவும். நல்லாருக்கீங்களா? ஆமா அதென்னங்க இப்பதான் முதல்முதலா கேள்விப்படறேன் பச்ச பாம்பை பிடிச்சா வாசனை வரும்னு... புதுசா இருக்கே???

வாசனையா சமைக்கல்லாம் வித்தை இல்லைங்க. என் சமையல்ல வாசனை நல்லாவெ இருக்கும் ஆனா டேஸ்ட்தான் கம்மியா இருக்கும். அம்மா டேஸ்ட் வர்ரதே இல்லை... நீங்க இஞ்சி பூண்டு சேப்பிங்கதானே அது சேத்தாலே நல்லா வாசனை வருமே... மீன் குழம்புன்னா வெந்தயம் சேக்கும்போதே நல்லா வாசனை வரும் அதும் இல்லாம பூண்டை நல்லெண்ணைய்ல பொரிக்கும் போதும் நல்லா வாசனை வரும் அதும் வரலன்னா இருங்க நம்ம தோழிகள் வந்து சொல்லுவாங்க வெய்ட் பன்னுங்க ஓகே வா...

மீண்டும் பேசலாம்...

பி.கு : வாசனையா சமைக்க பெரிய ஐடியா குடுக்கறமாறி வந்து ஒன்னுத்துக்கும் ஆகாத மேட்டரா சொல்லிட்டு போரான்னு தானே நினைக்கறீங்க எனக்கு தெரியும்... சகிச்சுக்கங்க...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

ஹாய் தேஜா தளிகா சொன்ன மாதிரி வதக்கும் நேரம், சேர்க்கும் பொருட்களின் அளவு எல்லாம் முக்கியம். இன்னொன்னு கன்யாகுமரி மீனில் செய்த குழம்பின் வாசனை வெளிநாட்டு மீனில் கிடைக்காது :(. அதனால் அந்த டேஸ்ட் எதிர் பார்க்காதீங்க.

நானும் குமரிமாவட்டம் தான். என் அம்மா மற்றும் மாமியார் வைக்கும் மீன் குழம்பு அப்படி மணக்கும். ஆனால் அவங்க இங்க வந்த போது அவர்கள் சமைத்த மீன் குழம்பின் சுவை குறைவாகவே இருந்தது :(

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

thalika நீங்க எப்பவுமே great -ங்க. என் கேள்விகளுக்கு எப்பவும் பதில் சொல்றீங்க. ஸ்பெஷல் தேங்க்ஸ். லதாவினீ என்னோட பேரு தேஜா அன்பு. நமக்குள்ள மன்னிப்பு formalities வேண்டாம் :). எங்க அம்மா அவங்களோட ஆச்சி சொல்றதெல்லாம் நம்பி அதே மாதிரி நிறைய கதையெல்லாம் சொல்லுவா. :) . முன்னாடி அப்படி ஒரு நம்பிக்கை இருந்துருக்குங்க. கவிசிவா நீங்க கன்னியாகுமரி-ல எந்த ஊருங்க?. கவிசிவா, thalika நீங்க சொல்றத நான் ஆமோதிக்கிறேங்க. நம்ம ஊரு taste இங்க எப்படி வரும். சரியா சொன்னீங்க . என் கணவர்கிட்ட உங்க பதில்-ல காண்பித்தேன். அப்படின்னா ok- வாம். :)

எனக்கும் இதே பிராப்ளம் தான்.என் அம்மா முருங்கைக்காய் போட்டு சாம்பார் வைத்தால் வீடெ மணக்கும்.அதேபோல் நான் இந்தியாவில் இருந்தவரை சாம்பார் வைத்தால் நல்ல மணத்துடனே இருக்கும்.இங்கே வைத்தால் மணமே இல்லாமல் சப்பென்று உள்ளது.இங்கே பெருமளவு வெள்ளை ஆனியனே உபயோகிது வந்தேன்.இப்போதுதான் ஒரு தோழி சொல்லி ரெட் ஆனியன் உபயோகிக்க ஆரம்பித்துள்ளேன்.சாலட்க்குதான் இதுவரை ரெட் ஆனியன் உபயோகித்து வந்தேன்.நீங்களும் ட்ரை பண்ணிபாருங்களேன்.

அன்புடன் அனு

நான் எப்பவுமே ரெட் onion தான் பயன்படுத்துவேன். இதுவரை white onion வாங்கியதே இல்லை :) . சாம்பார் மணக்க வெந்தயம்,சீரகம் வறுத்து பொடித்து சேர்த்து பாருங்களேன்.

மேலும் சில பதிவுகள்