செல்ல பெயர்

எனக்கு செல்ல பெயர் சில சொல்லுங்களேன்.டெலிவரிக்கு முன்னாடியே கூப்பிட ஆசையாக உள்ளது.கூப்பிட்டு பழகுகிறேன்

நானி,பாபு,தம்புடு,சீதேவி,அம்முலு,பப்பு குட்டி, ரஜ்ஜூமா,

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

பட்டுக்குட்டி, செல்லக்குட்டி, புஜ்ஜுகுட்டி, அம்முக்குட்டி,

அன்புடன்
நித்யா

கண்ணா,குட்டிமா,தங்கக் குட்டி

உங்கள் இழை படித்து எனக்கு கடந்த கால நினைவுகள் எல்லாம் வந்து விட்டது..அழகான ஆசை

குட்டி, அம்மு, அப்பு, மி , புஜி, தங்கம், பட்டு, மொட்டுக் குட்டி..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

என் தங்கம், என் பட்டு, என் முத்து, என் வைரம், பட்டுக்குட்டி, முத்துக்குட்டி, குட்டிம்மா(எங்கம்மா என்னை அப்படித்தான் கூப்பிடுவாங்க..), செல்லக்காளை(என் பையனை கூப்பிடுவாங்க), ராஜாப்பயல், செல்ல ராஜா,... நிறைய இருக்குப்பா.. உங்க சொந்த கற்பனையையும் சேர்த்து சொல்லி கொஞ்சுங்க.. குழந்தை கருவில் இருக்கும்போதே நாம் பேசுவதை கண்டிப்பாக உணரும். அபிமன்யு கதை கேட்டிருப்பீா்கள். விஞ்ஞானப்புர்வமாகவும் நிருபிக்கப்பட்டுள்ளது. அதனால் நல்ல விஷயங்கள் கேளுங்கள். நல்ல இசை கேளுங்கள். தனிமையில் இருக்கும் போது தாராளமாக கொஞ்சுங்கள். வாழ்த்துக்கள்.

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

அனைவருக்கும் நன்றி.இன்னும் போஸ்ட் பண்ணுங்க.

செல்ல குட்டி, பட்டு குட்டி, ஜு ஜு குட்டி, லட்டுபையா, அல்வாகுட்டி, தங்ககட்டி , தங்ககிளி, ராஜாத்தி, ராசு குட்டி,பப்பு குட்டி, பப்லூ, அம்லு, சிட்டுமா , செல்லமயிலு, தங்கமயிலு, பட்டுபையா, கண்மணி, பவுனுகுட்டி, உங்குமிட்டாயி, ஸ்வீடி, சிங்க குட்டி,ஜாய் குட்டி, ஜாலி kutty, apple kutty இன்னும் உங்க மனசுக்கு என்ன என்ன தோணுதோ அதை எல்லாம் சொல்லி கொஞ்சுக. என் கணவர் எங்க பையன கொஞ்சுறது எனக்கே புரியாது. வாயில வர்றது எல்லாம் சொல்லி கொஞ்சுவார்.
என் தம்பி என் பையன docomo குட்டி ன்னு தான் கொஞ்சுவான்

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

உங்களுக்கு முதலில் என் பாராட்டுக்கள். சுகபிரசவமாய் அமைய என் வாழ்த்துக்கள்
அம்மாடி அழகு பொம்மாயி, அழகு பதுமை, அச்சுக்குளி, புஜ்சுகுளி, குட்டி, செல்லம், சிட்டு, பூட்சி, தங்காத்தி, செல்லாத்தி, பட்டாத்தி, சிட்டாத்தி, செல்ல சிட்டு, சின்னு குட்டி, அம்மு குட்டி, பொம்மு குட்டி, பொம்மி, ராஜாத்தி, சிலுகொலி இப்படி பலது உள்ளது....கொஞ்சும் போது தான் சரலாமாக வரும்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

சுமதி,
தாய்மை அழகான விடயம் இல்லையா! ;) ஒவ்வொரு நொடியையும் ரசித்து அனுபவியுங்கள். என் வாழ்த்துக்கள்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்