தேங்காய் இல்லாமல் குருமா ????

என் கணவருக்கு கொலஸ்ட்ரால் காரணமாக நான் எதிலேயும் தேங்காய் சேர்ப்பதில்லை.சிக்கன்,மட்டன் குருமா செய்யும்போது சுவையில் வித்தியாசம் தெரிவதில்லை.நன்றாகவே உள்ளது.ஆனால் வெஜ்.குருமா தேங்காய் இல்லாமல் செய்தால் சுவை நன்றாகவே இல்லை.தேங்காய் இல்லாமல் சுவைபட குருமா எப்படி செய்வது என்று சொல்லுங்கள் ஃப்ரெண்ட்ஸ்.

அன்புடன் அனு

என்னப்பா,யாருமே பதில் போடலயே?போடமாட்டீங்களா?

சோகத்துடன் அனு

இப்படி இருக்கும் போது முதலில் நீங்கள் ஆலிவ் ஆயிலை பயன்படுத்துங்கள்.எனக்கு தெரிந்த ஆன்டி கூட அவர் கனவருக்கு உடலில் கொழுப்பு அதிகமாக இருந்து ஆப்ரேஷன் கூட செய்தாங்க அதனால அவங்க வீட்ல அவருக்காக எல்லாருமே ஆலிவ்ஆயில்ல செய்த சாப்பாடு தான் சாப்பிடுவாங்க.தேங்காய நிறைய சேக்காதீங்க கொஞ்சமா சேர்த்துக்கங்கபா.............

மெதுவா வருவாங்கப்பா, கொஞ்சம் பொருமையா இருங்க, வந்திட்டே இருக்காங்க

அன்புடன்
பவித்ரா

எந்த சமையலில் தேங்கா சேர்ப்பீங்களோ அதற்குபதில் அதில் பொட்டுக்கடலையை
செர்த்து செய்துபாருங்க.

வெங்காயத்தை அரைத்து எண்ணையில் வதக்குங்கள்,அது வதங்கியதும்,தக்காளியையும் அரைத்து வதந்கியத்தில் சேர்த்து அதையும் வதக்கி பின் குருமாவிற்கு தேவையானவற்றை சேர்த்து குருமா செய்யுங்கள். குருமா திக்கா வரும் டேஸ்டும் நல்லா இருக்கும்.

அனுஷா, வெங்காயம் தக்காளி இரண்டையும் வதக்கி அரைத்து சேர்த்தால் குருமா சுவையாகவும், கெட்டியாகவும் இருக்கும். ணான் இப்படித்தான் செய்வேன். கொள்ளு உணவில் வாரம் ஒரு முறை சேர்க்கவும். கொலஸ்ட்ரால் விரைவில் கட்டுக்குள் வரும்.

Try and try again until you reach the target.

Anitha

தேவையான பொருட்கள்:

1.வெங்காயாம் - 3
2.தக்காளி - 3
3.இஞ்சி 1 துனுக்கு
4.பூண்டு -8 பல்
5.காய்ந்த மிளகாய் - 3
6.கடலை பருப்பு - சிறிது
7.தனியா - சிறிது
8.அரிசி -சிறிது
9.சீரகம் - சிறிது
10.தனியா தூள் - 2 ஸ்பூன்
11.மிளகாய் தூள் - தேவைக்கு
12.உப்பு - தேவைக்கு
13.குடை மிளகாய் -1
14.விருப்பமான காய் கலவை( நான் செய்தது உருளை,மஷ்ரும்,பட்டாணி}
15.கறிவேப்பிலை
16.கொத்தமல்லி
17.பட்டை,லவங்கம்,பிரிஞ்சி இலை,கிராம்பு
18.எண்ணை

செய்முரை;

1.முதலில் கடாயில் சிறிது எண்ணை விட்டு
வெங்கயாம்,காய்ந்த மிளகாய்,தனியா,அரிசி,தக்காளி,இஞ்சி,பூண்டு,கடலை பருப்பு
அரிசி,சீரகம்,தனியா தூள்,மிளகாய் தூள்,சிறீது உப்பு போட்டு நன்றாக
வதக்கவும்
2.அரைத்தவற்றை ஆறவைத்து மிக்ஸீயில் போட்டு மைய அரைக்கவும்
3.பின் இன்னொரு கடாயில் சிறிது எண்ணை மற்றும் நெய் விட்டு
பட்டை,கிராம்பு.லவங்கம்,பிரிஞ்சி இலை கொஞ்சம் சோம்பு போட்டு
தாளிக்கவும்
4.பின் குடைமிளகாய் போட்டு வதக்கவும்.
5.நங்கு வதங்கியவுடன் அரைத்த விழுதை போட்டு தேவையான அளவு
தண்ணிர் விட்டு கொதிக்க விடவும்
6.இதற்கிடையில் ஒரு பாத்திரத்தில் மஷ்ரும் மற்றும் உருளையை வேக
வைத்து தனியாக வைத்துகொள்ளவும்.
7.கலவை நன்றாக கொதித்தவுடன் வேக வெய்த்த காய் கலவையை சேர்த்து
கொஞ்சம் நேரம் கொதிக்க விட்டு கொத்தமல்லி தூவி இரக்கவும்
உப்பு மற்றும் காரம் அவரவர் தேவைக்கு கூட்டவோ குறைத்தும்
சேர்த்து கொள்ளவும்
நான் இன்று இந்த குருமாவைதான் செய்தேன் மிகவும் நன்றாக வந்தது
என் மகளுக்கு ரொம்ப பிடித்திருந்தது நிங்களும் try பண்ணி பாருங்கள்

ஹாய் அனு உங்களுக்காகவே நான் இன்று வெஜ் குருமா தேங்காய் இல்லாம
வெச்சி பார்த்தேன் ரொம்ப அருமையாக வந்தது வசானையும் அருமை
நான் அந்த குரிப்பு தருகிரேன் விருப்பம் இருந்தால் செய்து பார்க்கவும்

Even my husband is suffering from cholestrol problem, dont know what to do???? iam very much worried, please answer my question fast know??????????

R.Archana Mugesh

பதில் அளித்த அனைவருக்கும் மிக்க நன்றி.
ஹாய் சுஜி,நீங்கள் சொல்லுவது போல் நானும் கூடுமானவரை ஆலிவ் ஆயில் தான் உபயோகிக்கிறேன்.தேங்காய் தவிர்க்கவே பார்க்கிறேன்

ஹாய் கோமு,சுந்தரி ,அனிதா
நீங்கள் சொல்லிய செய்முறையை இனிமேல் செய்து பார்க்கிறேன்.கொள்ளுதான் இங்கு கிடைக்குமா என்று தெரியவில்லை,தேடவேண்டும்.

ஹாய் குட்டிரேயம்மா,
என்னங்க,சூப்பரா ரெசிப்பியே கொடுத்திருக்கீங்க.அதுவும் எனக்காகவா...நன்றீங்க.உங்க உடல்நிலையையும் பாத்துக்கோங்க.நிச்சயம் இதை செய்து பாத்துட்டு சொல்றேன்.எப்பங்க டெலிவரி?

ஹாய் அர்ச்சனா,
உங்க கணவருக்கும் இதே பிராப்ளமா?தேங்காயை கண்ணுல இல்ல..இல்ல வாயில காட்டாதீங்க.நான் தாளிக்கறதுக்கு,தோசைக்கு எல்லாம் ஆலிவ் ஆயில் தான் யூஸ் பண்றேன்.நிறைய நட்ஸ் சாப்பிட சொல்லுங்க(பாதாம்,பிஸ்தா,ஆப்ரிகாட்)அவகாடோவில் நல்ல கொலஸ்ட்ரால் இருக்கு.மார்னிங் ப்ரேக்ஃபாஸ்ட்க்கு cereal கொடுங்க.ம்ம்ம்..அப்புறம் ஆங்..அப்புறம் யோசிச்சு சொல்றேனே :-)

எல்லாருக்கும் ரொம்ப தேங்ஸ்பா,இன்னும் தெரிஞ்சா என்க்கு சொல்லுங்க ப்ளீஸ்

மகிழ்ச்சியுடன் அனு

மேலும் சில பதிவுகள்