தோல்வி

எனக்கு வயது 24....
<!--break-->

அறுசுவைக்கு உங்களை வரவேற்கிறேன். இங்க வந்துட்டீங்கள்ள எல்லாம் சரியாயிடும், அடிக்கடி வாருங்கள்.

நல்ல பெயர், எனக்கு பிடித்த நடிகரும் கூட. வருத்தப்படாதீங்க. வாழ்க்கையில் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்காது இல்லையா! வேறு விஷயங்களில் மனதை செலுத்துங்கள்.

அதுவும் பெற்றோருக்காக தான் பிரிந்திருக்கிறீர்கள், கவலைபடாதீங்க. நல்ல செயலை தான் செய்திருக்கிறீர்கள். ஏதாவது படியுங்கள், படித்து முடித்தவர் என்றால் வேலையை கவனத்தை செலுத்துங்கள். எல்லாம் அவன் செயல் தோழரே.

அன்புடன்
பவித்ரா

-

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா


மேடி பேரை வெச்சுண்டு இப்படி சொல்றது கொஞ்சம் கூட நன்னால்லை!

ஒங்க காதல் நிச்சயம் ஜெயிக்கும்!

கவலை படாதீங்கோ!

ஆன்னா அம்மா அப்பாவை பகைச்சுண்டு மட்டும் போகாதீங்கோ!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

சகோதரரே, காதல் என்பது தென்றல் மாதிரி வந்து அனைவரையும் தீண்டி சென்றிருக்கும். அது அவ்வளவே என்று நினைத்து விட்டு விடுங்கள். அதன் பின்னே தொடர்ந்து செல்ல விரும்பாதீர்கள். உங்கள் இருவர் வீட்டு பெற்றோரும் சம்மதித்தால் சந்தோஷமாக மணம் புரிந்து இன்பமாக வாழுங்கள்.

பெற்றோரை மீறி எந்த செயலிலும் ஈடுபடவேண்டாம். காலம் வரும் காத்திருங்கள். மறதி என்பது கடவுள் நமக்கு கொடுத்த அரும்பெரும் கொடை. காலத்திற்கு எல்லாவற்றையும் மறக்க செய்யும் சக்தி உண்டு. உங்களுக்கு பிடித்தமான வேறு விஷயங்களில் மனதை செலுத்துங்கள். முடிந்தால் சிறிது காலம் வேறு ஊரில் சென்று இருக்க பாருங்கள். இடமாற்றம் மனமாற்றத்தை தரும்.

உங்கள் காதலியின் அப்பா மனம் மாறுவார். காத்திருங்கள். உங்கள் காதலை நினைத்து தான் நீங்கள் சரியாக சாப்பிடாமல் ஒல்லியாக இருந்திருப்பீர்கள். காதலை ஒருபுறம் வைத்துவிட்டு நல்ல சத்தான உணவாக சாப்பிட்டு உடம்பை தேற்றுங்கள். காதலை பற்றி எங்களுக்கு என்ன தெரியும் என்று நினைக்க வேண்டாம். உங்களுக்கு தெரிந்ததை விட அதிகமாக தெரியும் என்று தன்னடக்கத்தோடு சொல்லிக் கொள்கிறேன்.

வாழ்க்கை செல்லும் போக்கில் செல்லுங்கள். உங்களுக்கு தகுந்தாற்போல வாழ்க்கையை வளைக்க நினைக்காதீர்கள். உடைந்து போவது நீங்களாகதான் இருப்பீர்கள். வாழ்க்கையை புரிந்து கொண்டு நந்தவனமாக மாற்றுவதும், பாலைவனமாக மாற்றுவதும் உங்கள் கையில் தான் உள்ளது. சிந்தித்து புத்திசாலிதனமாக செல்பட்டு சந்தோஷமாக வாழ முயற்சி செய்யுங்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

தோழர் மாதவன் அவர்களுக்கு,
இது காதல் தோல்வியை நினைத்து துவண்டு போகும் வயது அல்ல. வாழ்கையில் இன்னும் என்னென்ன சாதிக்க வேண்டும் என்று துடிப்புடன் இருக்க வேண்டிய காலம். காதல் வரும் போகும் ஆனால் வாழ்க்கை? நம் வாழ்க்கையை நாம் தான் வாழ்ந்து ஆகா வேண்டும். அதை சந்தோசமாக வாழ கற்று கொள்ளுங்கள். நீங்கள் காதலித்து என்ன செய்ய போகிறீர்கள், திருமணம் செய்து கொண்டு சந்தோசமாக வாழ்வதற்கு தானே காதல் எல்லாம், அது உங்களை கஷ்டபடுதுமானால், உங்களை தோல்வியில் துவண்டு உட்கார செய்யுமானால் அது உங்களுக்கு தேவையா? வாழ்கையில் இன்னும் கடக்க வேண்டிய தூரங்கள், ஜெயிக்க வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ இருக்கிறது, இந்த வயதிலேய தோல்வியில் சரிந்து உட்கார்ந்தால் எப்படி? தோல்வி உங்களை பக்குவ படுத்த வேண்டும். உங்களை முடக்கி விட கூடாது. சும்மா இருந்தால் தான் இதை எல்லாம் நினைத்து கவலை வரும். உங்கள் படிப்பை, தொழிலை, குடும்பத்தை பற்றி யோசித்து ஆக்கபூர்வமாக எதாவது செய்யுங்கள். காலம் தான் எல்லா காயத்திற்கும் மருந்து, கவலைப்பட்டு காலத்தை veenadikaathirgal. இளமை போனால் திரும்பி வராது, உங்கள் இளமை காலங்களை காதல் கவலைகளில் வீணாக்கி விடாதீர்கள்.
எப்பவுமே சந்தோசமா இருங்க, மத்தவங்களையும் சந்தோசமா வச்சிக்குங்க. மனசை ரிலாக்ஸ் எ வச்சிக்குங்க.

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

மேலும் சில பதிவுகள்