வீட்டுத்தோட்டம்-3, தா(வரங்கள்).

தாவரங்கள் இயற்கையால் நமக்கு கிடைத்த வரங்கள். கேள்விகள் மட்டுமல்ல, தாவரங்கள் பற்றிய புதிய தகவல்களையும் இதில் பகிர்ந்து கொள்ளலாம். இது உங்களின் இழை.

வீட்டுத் தோட்டம் 2ல் 160 பதிவுகள் தாண்டியதால் புதிய இழை ஆரம்பித்துள்ளேன். இனி தாவரங்கள் பற்றிய கேள்விகளையும், கருத்துக்களையும் இங்கே எழுதுங்கள். நன்றி.

அன்புடன்
THAVAM

நாத்தான் முதல்ல.... அண்ணா என் பையன் ஸ்கூல்ல இருந்து ஒரு செடி கொண்டுவந்தான். அது என்ன செடின்னே தெரியல.. அது அதிகமா வளரவேயில்லை. சின்னதா அப்படியே இருக்கு. அது வீணாப்போகவும் இல்ல, வளரவும் இல்ல. இப்ப என்ன பண்றது. என்ன பண்ணினா அந்த செடி வளரும்.

அப்பறம் நான் ஓமவல்லி செடி வச்சிருக்கேன். அதுக்கு என்ன மாதிரி வீட்டு உரம் போடலாம். அதையும் சொல்லுங்க...

ஆனாலும் என் ஃப்ரைடு ரைஸ்-அ இவ்ளோ கேவலப்படுத்தக்கூடாது... அண்ணி.... பாருங்க அண்ணி அண்ணாவ....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி


நான் 2ND ஸ்டார்!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

சிங்ப்பூர்ல வீட்டு தோட்டங்களுக்கு போடற வகைகள்ல ஆர்கானிக் உரங்கள் கிடைக்கும். நுண் ஊட்ட சத்துகள்[micro nutriens] கிடைக்கும். இரண்டையும் வாங்கி ஓமவல்லி[கற்பூர வல்லி?] செடிக்கு ஆர்கானிக் உரம் 50 கிராம் முதல் 100கிராம் வரையும், நுண் சத்துக்கள் 20கிராம் அளவும் போட்டு தண்ணீர் விடுங்கள். சங்கர் கொண்டு வந்த செடிக்கு ஆர்கானிக் உரம் சிறிதளவு மட்டும் போடுங்க, நுண் சத்துக்களும் சிறிதளவு போட்டு நீர் விடுங்க. அதன் வளர்ச்சியை பார்த்தபின் மறுபடி போடலாம். ப்ரைடு ரைஸ் மேட்டரா?! படிச்சீங்களா! சும்மா உல்லுல்லாயிக்குதானே! பாசமலரை நான் கேவலப்படுத்துவேனா?. மனசு கஷ்டப் பட்டிருந்தால் மன்னிக்க மாட்டீர்களா மனமிரங்கி...

அன்புடன்
THAVAM

அறுசுவையின் சூப்பர் ஸ்டார் நீங்கதானே மாமி.

அன்புடன்
THAVAM

இந்த இழையையும் கொஞ்சம் பார்த்து ஏதாவது சொல்லுங்க.
http://www.arusuvai.com/tamil/node/16240

‍- இமா க்றிஸ்

இமா, முள் முருங்கை பற்றிதானே சொல்கிறீர்கள். முள்முருங்கையும் கல்யாண முருங்கையும் ஒன்றுதானே?. மற்ற விபரங்களை நீங்களே சொல்லிவிட்டீர்கள். நாம் மறந்த தாவரங்களில் இதுவும் ஒன்றாகி விட்டது. இந்த இழையை பார்க்க மறந்த எனக்கு யாரும் உணவு பார்சல் எதையும் அனுப்பாதிங்க. நன்றி.

அன்புடன்
THAVAM

அறுசுவையின் புதிய சகோதரிக்கு நல்வரவு, புதியதாக வீடு கட்டும் நீங்கள் வேம்பு கட்டாயம் வையுங்கள். அடுத்து, செம்பருத்தி, மருதானி, துளசிமாடம், மூலிகை தோட்டம், காய்கறி தோட்டம். எனக்கு தெரிந்தவரை சொல்லிருக்கேன் சகோதரி. நன்றி.

அன்புடன்
THAVAM

அறுசுவை அன்புள்ளங்களுக்கு இனிய ரமலான் வாழ்த்துக்கள்.

அன்புடன்
THAVAM

அண்ணா, இழை எப்படி இருக்குன்னு கேட்ட வரைக்கும் ஓகே அது சூப்பர் ஆனா அத மேம்படுதன்னும் அதுக்கு ஆலோசனை சொல்லுன்னு சொன்னீங்க பார்த்தீங்களா அது கொஞ்சம் dangerana விஷயம் ,
ஆலோசனை சொல்லற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்ல, ஆனா இப்படி பண்ணினால் நல்லா இருக்கும்ன்னு எனக்கு தோணின விஷயத்தை சொல்றேன்,
ஒரு செடி/கன்று/விதை வாங்கும் போது அதில் கவனிக்க வேண்டிய விஷயங்களை, அதனின் காலங்களை புது இழையின் தொடக்கத்திலேயே குறிப்பிடால்(introduction மாதிரி , ஒவ்வொரு இழைன் ஆரம்பத்திலும் ) சொல்லிடீங்கன்ன புதுசா பர்குவங்களுக்கும் என்னை மாதிரி சோம்பேறிகளுக்கும் கொஞ்சம் ஈசியா இருக்கும்.
அப்புறம் முடிந்தால் தாவரங்களின் botanical name சேர்த்து கொடுத்தால் எனக்கு ரெம்ப ரெம்ப உபயோகமா இருக்கும் .

மேலும் சில பதிவுகள்