சாக்லேட் புதிர்

ஒரு சாக்லேட் ஒரு ரூபாய், இது கூட‌ 3 சாக்லேட் எம்ப்டி க‌வ‌ரை குடுத்தால், அதுக்கும் ஒரு சாக்லேட் த‌ர்றாங்க‌. உங்ககிட்ட‌ 15 ரூபாய் இருக்கு. எத்த‌னை சாக்லேட் வாங்க‌ முடியும்?

ரூபாய்க்கு ஒரு சாக்லேட் வீதம் ரூ.15 க்கு 15 சாக்லேட்களும், 3 சாக்லேட் எம்ப்டி க‌வ‌ருக்கு ஒரு சாக்லேட் வீதம் (5+1+1), மொத்தம் 15+5+1+1= 22 சாக்லேட்கள் வாங்க முடியும்.

ராமுவும் சோமுவும் நண்பர்கள். ஒருநாள் ராமு சோமுவைத் தனது தோட்டத்துக்கு அழைத்துச் சென்றான்.அங்கே ஒரு மாமரம். அதன் பழம் மிகவும் தித்திப்பானது என்பது பிரசித்தம்....சோமு மாம்பழம் சாப்பிட ஆசைப்பட்டான். "சரி , வா...பறிக்கலாம்" என்று ராமு சோமுவை மரத்துக்குப் பக்கம் அழைத்துச் சென்றான். பழம் ராமுவுக்கு எட்டாத உயரத்தில் தொங்கியது..இங்கே ராமு, சோமுவின் உயரத்தைப் பற்றிக் கூறியாகவேண்டும். ராமு 6 அடி உயரம். சோமு 5 அடி உயரம்.. அதனால் ராமு சோமுவை தனது தோளில் ஏறி நின்று பழத்தைப் பறித்துக்கொள்ளச் சொன்னான். அதுபோலவே, சோமு, ராமுவின் தோளில் ஏறி பழத்தைப் பறிக்க முயற்சி செய்தான்.ஆனால் பழம் எட்டவில்லை.இரண்டு அங்குலம் உயரம் அதிகமாக இருந்தது.அதனால் ராமு, சோமுவை நிற்கச் சொல்லி, அவன் சோமுவின் தோளில் ஏறி மாம்பழத்தைப் பறித்து சோமுவுக்கு சாப்பிடக் கொடுத்தான். இது சாத்தியமா?. {கிளையை வளைத்துப் பிடித்தான்......கம்பை வைத்துப் பறித்தான்....என்றெல்லாம் கற்பனை செய்யவேண்டாம். சோமுவுடைய தோளில் ஏறி நின்றுதான் பழத்தைப் பறித்தான்.சோமுவுக்கு எட்டாத பழம் , ராமுவுக்கு எப்படி எட்டியது.}

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

சாக்லேட் புதிருக்கு ச‌ரியான‌ ப‌தில். ஜெய‌ ராஜி. வாழ்த்துக்க‌ள்

Life

சோமு ஸ்டூலில் ஏறி நின்று,அவ‌ன் தோளின் மேல் ஏறி நின்று ராமு ப‌ழ‌த்தை ப‌றித்திருப்பான்.

Life

தவறு கல்யாணி, அவர்கள் எந்த பொருளையும் பாவியாமல் மாம்பழத்தை பறிக்க வேண்டும்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

ராமுவின் கைகள் சோமுவின் கைகளை விட 2 அங்குலம் அதிகமாக இருந்திருக்கும்.

சரியான பதில் வாழ்த்துக்கள் சகோதரி.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

எங்கே கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்???????????

வாணியும் ராணியும் இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்தவர்கள்..அவர்களது பத்தாவது பிறந்த நாள் விழாவில் பெரிய கேக் ஒன்றை அவர்களது அப்பா வாங்கி வந்திருந்தார். மெழுகுவர்த்திகளை ஏற்றிவைத்து, வீட்டில் இருந்த ஒரே ஒரு கத்தியை வைத்து கேக் வெட்டும் சமயத்தில், நான்தான் கேக் வெட்டுவேன் என்று ராணி, வாணி இருவருமே அடம்பிடித்தார்கள்.வாணியை கேக் வெட்டவிட்டால், அவள் தனக்கு பெரிய துண்டாக வெட்டிக்கொள்வாள் என்று ராணியும் அதேபோலவே வாணியும் நினைத்ததினால், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் வாதம் செய்தார்கள். அப்போது அவர்களது அப்பா ஒரு யோசனை சொல்ல இருவருமே அதற்கு ஒத்துக்கொண்ள, பிறந்தநாள் கொண்டாட்டம் சுமுகமாக நடந்து முடிந்தது. வாணி, ராணியின் அப்பா சொன்ன யோசனை என்ன?

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

கத்தியின் கைப்பிடியை ஒருவரும் கத்தி முனையை மற்றொருவரும் பிடித்து எதிர் எதிர் புறமாக இருந்து கேக்கை சம பங்காக வெட்டிக் கொள்ளச் சொல்லாம்...
(ஹி ஹி ஹி.. மொக்கை ஐடியாவா இருக்கோ :D..இது எனக்கு தோன்றும் யோசனை வாணி,ராணியின் அப்பா அறிவுப் பூர்வமாக வேறு ஐடியா என்ன கூறினாரோ எனக்குத் தெரியவில்லை ;))

வாணி, ராணி இருவருக்கும் பொதுவாக அவங்க அப்பாவே கேக்கை வெட்டியிருக்கலாம்,

இல்லன்னா இன்னொரு கேக் வாங்கி இருவரையும் வெட்ட வச்சிருக்கல்லாம்.

இல்லன்னா வாணி மெழுகுவத்தி ஊதச் சொல்லி, ராணிய கட் பண்ண சொல்லியிருக்கலாம்.

இதுல எதுவுமே இல்லயா பேசாம அந்த கேக எனக்கே கொடுத்துறுங்க, இந்த மொக்கையெல்லம் தேவையில்லன்னா வேறு யாராவது வந்து ஆன்சர் பண்ணுங்க, இல்லன்னா நீங்களே விடைய சொல்லிடுங்க (சும்மா)

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

மேலும் சில பதிவுகள்