இறந்தவர்கள் ஆவியாய் நேரில் வந்தால்!!

அனந்தபுரத்து வீடு படத்தில் இறந்துபோன நாயகனின் அம்மா,அப்பா ஆவியாய் வருவதாய் காட்டியிருப்பாங்க. பேரக் குழந்தையுடன் அவர்கள் விளையாடுவதும், மகன் மருமகளை அடித்துவிட்டான் என்று அப்பா தடியால் மகனை அடிப்பதும், அதை அம்மா தடுத்து, இரவில் அடிபட்ட மகனுக்கு பத்து போடுவதும் என்று நெகிழ வைத்திருப்பார்கள். நம் வாழ்க்கையில் இப்படி நடக்க ஒரு சான்ஸ் கிடைச்சா யார் ஆவியா வரணும்னு நினைப்பீங்க. என்ன கேப்பீங்க, என்ன சொல்லுவீங்க...

எங்க அப்பா வரனும்னு அடிக்கடி நெனப்பேன். சில நேரங்களில் அழ கூட செய்வேன். அப்படி வந்தா அன்னைக்கு முழுவதும் அப்பாவை அருகில் உக்கார வைத்து இடைபட்ட காலத்தில் என் வாழ்க்கையில் நான் கண்ட கஷ்ட்டங்களும், மீண்ட அனுபவத்தையும் சொல்லுவேன். என் மகனுடன் அவர் விளையாடுவதை ரசிப்பேன்.இன்னும் எவ்வளவோ இருக்கு.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஜெயலெக்ஷ்மி இப்படீல்லாம் கேள்வி கேட்க ரூம் போட்டு யோசிப்பீங்களோ :). இல்ல யாராச்சும் ஆவியா வந்து சொன்னாங்களா :)

என்னோட லிஸ்ட் பெருசாச்சே... :)

முதலில் எனக்கு என் அம்மாவின் அப்பாவை பார்க்க வேண்டும். நான் பார்த்ததே இல்லை. சின்ன வயதில் அனுபவிக்காத தாத்தா செல்லத்தை எல்லாம் அனுபவிக்கணும் :)

அடுத்து என் அப்பாவின் அம்மாவை பார்க்க வேண்டும். அவங்களையும் நான் பார்த்தது இல்லை. அவங்க மடி சாய்ந்து கதை கேட்கணும். அவங்க முகவாய்க் கட்டையை புடிச்சு கொஞ்சணும்.

அடுத்து சில வருடங்களுக்கு முன் மறைந்த என் ஆச்சியை (அம்மாவின் அம்மா) பார்க்க வேண்டும். இப்போ மேல் உலகத்தில் தாத்தா கூட எப்படி இருக்காங்கன்னு கதை கேட்கணும். முன்பிருந்த அதே அன்பும் பாசத்தோட முந்திரி பருப்பு வாங்கி ரெண்டுபேரும் சாப்பிடறாங்களான்னு கேட்கணும் :)

அடுத்து சில வருடங்களுக்கு முன் எங்களை விட்டுப் பிரிந்த என் மாமனாரை பார்க்க வேண்டும். எங்களோடு இங்கே அழைத்து வச்சு பார்த்துக்கணும். என்னவரை உரிமையா கண்டிக்கறதை பார்க்கணும் :). 'மக்கா...' ன்னு என்னை ஆசையா கூப்பிடறதை கேட்கணும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஏன் இப்படியெல்லாம், பயமுறுத்தறீங்க.
எனக்கு என் பாட்டிய பார்க்கணும், என்னை சாகும் போகும் போது அவங்க பார்க்காமலே போயிட்டாங்க, எல்லரும் பக்கத்துல இருக்க, என்னை மட்டும் பார்க்காம் ஏன் போன பாட்டின்னு கேட்டு பாட்டி கூட சண்டை போடணும்.

அப்புறம், எங்க மாமாவை பாத்து சாரி கேட்கணும், அவ்வளவுதான்.

அன்புடன்
பவித்ரா

எனக்கு என் அம்மாவின் அப்பாவைப் பார்க்கனும்,எனக்கு ரோல் மாடல் அவர்தான்.படங்களில் வருவது போல் 38 கிராமங்களில் எந்தப் பிரச்சனைனாலும் எந்தாத்தாவிடம் தான் வருவார்கள்,அவரின் சொல்லை யாரும் மீரமாட்டார்கள்.சிறியவர்கள் முதல் அனைவருக்கும் மரியாதை கொடுப்பார்.அவரிடம் என் பிள்ளையின் கூட இருந்து கவனித்து நல்லதை கற்றித்தந்து கெட்டதைஅறிவுருத்தச் சொல்வேன்...

நான் என் பாட்டி வரனும்னு ஆசை படுவேன் ...ஏன் தெரியுமா !!! அவ்லோ அருமையா பார்த்துபாங்க ....நிரைய கதை , வகை வகையான சாபாடு ...இயற்கை மருத்துவம்....இன்னும் நிறைய இருக்கு ...அழுகை வருடு ...நினைக்கும் போது.....

நட்பு என்பது நடிப்பு அல்ல,
நம் நாடி துடிப்பு!!!!!

ஹாய் நான் எங்க அப்பா வர வேன்டும் என்று ஆசைப்படுவேன். என் அப்பாவிடம் ஒன்றெ ஒன்று கேட்பேன். ஏன் எங்களை விட்டு சீக்கிரம் போய் விட்டீங்கபா?

ஏமாறாதே|ஏமாற்றாதே

இந்தப் பதிவு ஏன் போட்டேனு ரொம்ப வருத்தமாயிருக்கு.

எல்லாரோட பதிவும் படிச்சு ஜெயா ரொம்ப அழுதுட்டா.

ஆமி உங்க பதிவு பாத்தவுடனேயே எனக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சு, பதிவு போட்ட அனைவருக்கும் நன்றி, நம்மைவிட்டு பிரிந்தவர்களின் நினைவுகள் என்றுமே நம்முடன் வாழ்ந்து கொண்டுதானிருக்கும்....

நானும் சில பேர்கிட்ட கேள்விகேட்கனும்னு நினைப்பேன்..

யார்கிட்டயெல்லாம்?

1. 8 வயசுல தன் மேல் தவறில்லைனு எவ்வளவோ டீச்சர்கிட்ட மன்றாடியும் கேக்காம பனிஷ்பண்ணினதுனால அடுத்தநாள் வகுப்பறையில் பூச்செடிக்கு வைத்திருந்த மருந்தை கொண்டுபோய் குடித்து இறந்த குட்டி பூவிடம் இப்ப நீ தப்பு பண்ணிட்டியே உன் அம்மா, அப்பாவை நினைக்காம இப்படி விட்டுட்டு போனது தப்பில்லையானு கேப்பேன்.

2 17 வயசுல தன்னோடு இன்னொரு பெண்ணை இணைத்து பேசினாங்கனு நண்பர்களிடம் வாக்குவாதம் பண்ணி மனசொடிஞ்சு தண்டவாளத்தில் மரித்துப்போன என் உடன்பிறவா சகோதரனிடம் இப்படி தூயவன்னு நிருபிச்சு இப்ப என்ன பயன் உன்னை நம்பியிருந்த உன் குடும்பத்தை இப்படி பாதியிலேயே விட்டுட்டு போனது தப்பில்லையானு கேப்பேன்...

3. திருப்பதி போய் வரும்வழியில் தூக்கம் வந்தா தூங்கிக்கோங்க, காலைல புறப்பட்டு போகலாம்னு சொன்ன பயணிகளிடம் காலைல பொண்ணுக்கு ஸ்கூல் திறக்குது பேக் வாங்கித்தரணும், எதிர்பார்ப்பானு சொல்லி பயணத்தை அன்றே முடித்துக்கொண்ட டிரைவரிடம் 3 1/2 வயது குழந்தைக்கு பேக் விட நீங்கதான் முக்கியம்னு உங்களுக்கு தெரியலையான்னு கேப்பேன்....

Don't Worry Be Happy.

ஜெயா ஆவிகள் பற்றி ஆராய்ச்சி பண்ணுபவர் பேரு ராஜேந்திரன் விஜய் டிவியில் வாங்க பேசலாம் ஒரு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு பேசினார். இந்த நிகழ்ச்சி நீங்கள் பார்ப்பது உண்டா. ஆவிகள் பற்றியும் சில விஷயங்கள் சொன்னார்.
ஆவிகள் இருப்பதாக நம்புகிறீர்களா. சும்மா ஆவிகள் பற்றிய த்ரெட் ஆரம்பிச்சிங்களே ஆவிப்பத்தி பேசலாமேதான்:-)

ஆவி இருக்குப்பா. நம்புங்க இல்லேன்னா எப்படி இட்லி புட்டு எல்லாம் வேகும் நாமளும் எப்படி சாப்பிடுவோம்.

ஹி ஹி ஜோக் அரத பழசா இருக்கோ ஹி ஹி கஷ்டப் பட்டு டைப் பண்ணியிருக்கேன். கஷ்டப்பட்டாவது சிரிச்சுட்டு போங்க :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வாங்க குட்டித்தலை கடி தாங்கமுடியல. என்ன ஒரு ஞானம். கஷ்டப்பட்டு சிரிச்சேன். நிஜாம்தான் கவி கேக்குறேன். இறந்த போன ஆவியை கூட பேசுறதுக்கு
ஒரு கட்டம் போட்டு A,B,C, D,& நம்பர்ஸ் எழுத்தி யெஸ், நோ இரண்டு கேள்வி எழுதி, மெழுகுவர்த்தி ஏத்திவச்சி கூப்பிடுவாங்களே. டிவி சீரியல், படத்துல பார்த்து இருக்கலாம்.

மேலும் சில பதிவுகள்