கருத்தடை

நான் கரு களைப்பு செய்து கொண்டு உடனே காப்பர்-t போடு கொண்டடேன் அப்பொழுது முதல் ரத்த போக்கு உள்ளது நான் என்ன செய்வது ?எனக்கு ஒரு மாதமாக இது உள்ளது. நான் டாக்டரிடம் சொன்ன போது இது 2 மாதம் அப்படிதான் இருக்கு அன்று கூறுகிறார் . எதனால் நான் உடல், மனம் பாதிக்கபட் உள்ளேன் . தயவு செய்து என்னக்கு ஒரு வழிகூறுகள் .என்னக்கு ஒர் ஆண் குழந்தை உள்ளது.வயது 2 .தாய் பால் தருகிறேன்.இதானால் எப்பொழுதும் கோபம் வருகிறது . நம்பிக்கை இல்லாமல் இருக்றேன் .கடத்த 2 நாளாக அதிகமாக உள்ளது. என் ஓர் தீர்வு யாராவது கூறுங்கள் .

திரும்பவும் டாக்டரிடம் போய்க் காட்டுங்க. வைத்துக் கொண்டு இருக்க வேண்டாம்.

‍- இமா க்றிஸ்

நன்றி
டாக்டரிடம் சொனேன். காப்பர்-t செட் ஆகு வரை இப்படி இருக்கு என கூறுகிறார் . நான் பயத்தில் இருக்றேன் .

காயத்ரி சிலருக்கு காப்பர் டி ஒத்துக் கொள்ளாது. நீங்கள் மீண்டும் நல்ல மருத்துவரை அணுகுங்கள். தொடர்ச்சியான ரத்தப்போக்கு உடல்நலனுக்கு நல்லது இல்லை.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவி கூறியது போல் வேறு ஒரு நல்ல மருத்துவரை உடனே கலந்து ஆலோசியுங்கள். மனதை தைரியமாக வைத்துக் கொள்ளுங்கள். ஒன்றும் பிரச்சினை ஆகாது. பேரீட்சை,பாலக்,ரைசின்ஸ் போன்ற இரும்புச் சத்து நிறைந்த உணவை எடுத்துக் கொள்ளுங்கள்.. தற்போதைய இழப்பை சரி செய்ய உதவும்..

நன்றி
ரத்த போக்கு போது எடுக்க முடியாது என ஒரு ஊசி போடு மாத்திரை கொடுத்து நேற்று அனுப்பினர் . அதில் என்னகும் என் கணவருக்கு சந்தேகம் உள்ளது. அந்த மருத்துவர் மீண்டும 1 மாதமா இதை செய்கிறார்

காயத்ரி நீங்க வேற நல்ல கைனகாலஜிஸ்ட்டை பார்ப்பதுதான் நல்லது. சாந்தினி சொல்வது போல நல்ல சத்தான இரும்புச்சத்து உள்ள உணவுகளை எடுத்துக்கோங்க.

தாமதிக்காமல் வேறு மருத்துவரைப் பாருங்கள்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி
நீங்க எல்லோரு என்னக்கு நல்ல வழிகள் தருவதற்கு நன்றி என் வயது 27 . எனக்கு எல்லாம் முடித்து விட்டது போல் தோன்றியது .
நன்றி

அடடா இதுக்கெல்லாமா வாழ்க்கையே முடிந்து விட்டதோன்னு யோசிக்கறது. ஹார்மோனில் ஏற்படும் மாற்றங்களால் உங்களுக்கு அப்படி தோணியிருக்கலாம். கவலைப் படாதீங்க. எத்தனையோ பேர் இதை விட அதிகமான பிரச்சினைகளை எல்லாம் கடந்து வந்திருக்காங்க. இதுவும் கடந்து போகும். தைரியமா இருங்க

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ரொம்ப நெகடிவ்வா யோசிக்காதீர்கள். எனக்கு தெரிந்த தோழிக்கு காப்பர்-டி ஒத்துக் கொள்ளாமல் போனதுகூட தெரியாமல் விட்டு விட்டு பல பிரச்சினைகள் அவர் உடலில் ஏற்பட்டன. இருந்த போதும் இன்று அவர் மன உறுதியால் வீட்டையும் குழந்தைகளையும் நன்றாகவே பார்த்துக் கொண்டு உள்ளார்..
நீங்கள் ஒரு மாதத்திலேயே விழித்துக் கொண்டுள்ளீர்கள். எனவே அதை நினைத்து சந்தோஷப் படுங்கள்..மன உறுதி மிக முக்கியம்.. மனதை தளர விட வேண்டாம்.

நான் நல்ல தைரியமான பெண் . இந்த விசயம் என்னை மிகவும் காயம் செய்து விட்டது . என் குழந்தையிடம் கூட என்னால் இயல்பாக இருக்க இயலவில்லை என்பது தான் கஷ்டமாக உள்ளது. கோபம் வருகிறது . என்னக்கு என் தாய்,தந்தை கூட உதவ வரவில்லை . என்னக்கு எந்த உதவியும் இல்லாத நிலை. அதான் இப்படி. thanks
kavi madam and chathini madam

மேலும் சில பதிவுகள்