தேதி: March 27, 2006
பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கடலை மாவு - 2 டம்ளர்
அரிசிமாவு - ஒரு டம்ளர்
காரப்பொடி - ஒரு தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - அரைத் தேக்கரண்டி
நெய் - 50 கிராம்
எண்ணெய் - 250 கிராம்
கடலைமாவையும், அரிசிமாவையும் சலித்து எடுத்து கொள்ளவும்.
இரண்டு மாவினையும் ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் மிளகாய்பொடி, பெருங்காயப்பொடி, நெய், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து தண்ணீர் விட்டு பிசையவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவினை அச்சில் வைத்து, பிழிந்து வெந்தவுடன் எடுக்கவும்.