முருங்கைக்காய் குழம்பு

தேதி: September 15, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.7 (29 votes)

 

முருங்கைக்காய் - 2
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
பூண்டு - 4 பல்
புளி - எலுமிச்சை அளவு
சாம்பார் பவுடர் - 2 1/2 தேக்கரண்டி
ரெடிமேட் தேங்காய் பால் - 4 தேக்கரண்டி
உப்பு, மஞ்சள் தூள் - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு - ஒரு தேக்கரண்டி
கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
மிளகாய் வற்றல் - ஒன்று
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு


 

முருங்கைக்காயை ஓர் அங்குல நீளத்திற்கு வெட்டிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டை தோலுரித்து நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். புளியை தண்ணீரில் ஊற வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு, மிளகாய்வற்றல், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து பிறகு பொடியாக நறுக்கி வைத்த வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும், நறுக்கி வைத்துள்ள தக்காளி மற்றும் முருங்கைக்காய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு சாம்பார்பொடி போட்டு மேலும் ஒரு நிமிடம் வதக்கவும்.
பிறகு புளித்தண்ணீர் ஊற்றி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
காய் நன்கு வெந்து தண்ணீர் ஓரளவு வற்றியவுடன் தேங்காய்பால் விட்டு ஒரு கிளறு கிளறி அடுப்பை உடனே அணைத்து விடவும்.
முருங்கைக்காய் தேங்காய்பால் குழம்பு ரெடி.

ரெடிமேட் தேங்காய் பால் கிடைக்கவில்லை எனில் தேங்காயை துருவி தண்ணீர் விட்டு வரும் முதல் தேங்காய் பாலை எடுத்துக் கொள்ளவும். 2 வது 3வது பாலை ரசத்திற்கு உபயோகிக்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ராதாக்கா
பார்க்க அழகாய் உள்ளது. விருப்ப பட்டியலில் சேர்த்துட்டேன். முருங்கைக்காய் புளித்தண்ணிலயே வெந்திடுமா.

செய்து பார்த்துட்டு சொல்றேன். இன்னும் நிறைய குறிப்புகளா சொல்லுங்க, செஞ்சும் கொடுத்த நல்லாதான் இருக்கும். ஹூம்

அன்புடன்
பவித்ரா

நானும் இதேபோல்தான் செய்வேன்..அவசரத்திற்கு......தொடர்ந்து நல்ல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

சூப்பர் குழம்பு.
செய்து பார்க்கனும் விரைவிலேயே!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

Unga kuripu pargarathuku supera erukuthu

என்றும் அன்புடன்,

மணிமேகலைராம்குமார்
வாழ்க்கை வாழ்வதற்கே

ராதா! அருமையான ரெசிப்பி. நானும் இதேபோல்தான் செய்வேன்.
பார்க்க மிக அழகு.சுவையும் சூப்பராக இருக்கும் என்று நினைக்கிறேன்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

முருங்கைக்காய் குழம்பு தேங்கா பால் விட்டு செய்ததே இல்லை. உங்க
குறிப்புப்படி செய்துபாத்துட்டு எப்படி இருந்ததுன்னு சொல்ரேன்

ராதா அக்கா,
வாசனை இங்கே வரைக்கும் வருது
இதை மிளகாய் பொடி சேர்த்து இதே முறையில் செய்து இருக்கேன்
சாம்பார் பொடி சேர்த்து ஒரு நாள் செய்கிறேன்..
மேலும் பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் மக்களுக்கு மிக்க நன்றி...

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

பவி
தேங்ஸ்டா.. வந்து முதல் ஆளா பதிவு போட்டு பாராட்டிருக்க.. புளித்தண்ணில தாராளமா வேகப்போடலாம்டா… இது சாதாரணமா அவசரத்திற்கு பண்ற குழம்பு. செய்து பார்த்துட்டு சொல்லு…. உனக்கு இல்லாததா? வீட்டுக்கு வா.. தாராளமா பண்ணித்தரேன்.

இளவரசி மேடம்
உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி. ஆமாம் மேடம், இது அவசரத்திற்கு பண்ற குழம்பு தான். ஆனால் டேஸ்ட் ரொம்ப நல்லாருக்கும். அதான் குறிப்பு போட்டுட்டேன். என் வீட்ல எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும்.

ஆமினா
தேங்ஸ்பா.. ரொம்ப ஈஸியான ரெசிப்பி.. கண்டிப்பா செய்து பார்த்துட்டு சொல்லுங்க…

யோகா
உங்க பாராட்டுக்கு மிக்க நன்றிப்பா.. நீங்களும் இப்படித்தான் செய்வீங்களா?...

சித்ரா
ரொம்ப நன்றி.. கண்டிப்பா ஒரு நாள் செய்து பாருங்க.. ரொம்ப நல்லாருக்கும்.

கவிதா
தேங்ஸ்டா.. உன்னைவிடவா.. நீ தான் சமையல்ல எக்ஸ்பர்டா இருக்கியே. சாம்பார் பொடி போட்டு செய்து பாருங்கப்பா. நல்லாருக்கும்.

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ராதா,
முருங்கைக்காய் குழம்பு, பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு. தேங்காய் சேர்த்து செய்து பார்க்கனும். உங்க குறிப்புகள் எல்லாமே நல்லா இருக்கு. மேலும் நிறைய குறிப்புகள் கொடுங்க.வாழ்த்துக்கள்.

முருங்கை குழம்பு தேங்காபால் சேர்த்து செய்ததே இல்லை. உங்க குறிப்புப்படி
செய்துபாத்துட்டுச் சொல்ரேம்பா.

இப்பத்தான் ஹர்ஷாவோட குறிப்பில் புலம்பிட்டு வரேன். நீங்களும் இப்படி முருங்கைக்காயில் ரெசிப்பி கொடுத்தா என்ன அர்த்தம். நான் படத்தைப் பார்த்து ஜொள்ளு விட்டுக்கறேன் :(. உங்க வீட்டுக்கு வரும் போது தண்ணி மட்டும் கொடுக்காம இதெல்லாம் செய்து கொடுங்க சரியா :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ராதா, சாம்பார் சாதம் இப்ப முருங்கை காய் குழம்பா? என்னோட பேவரட் முருங்கைகாய்ப்பா. என் அம்மாவும் இதே முறையில் சற்று வித்தியாசமாக செய்வார். பொட்டுக்கடலை துவையலுடன் சாப்பிட்டா ஆஹா அது டேஸ்டே டேஸ்டு. என் அம்மாவை ஞாபகப்படுத்திட்டீங்கப்பா. பிரசன்டேஷனே ஆளை தூக்குது. வாழ்த்துக்கள் ராது :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அன்பரசி... உங்க வாழ்த்துக்கு மிக்க நன்றி. தேங்காய்ப்பால் கண்டிப்பாக நல்ல டேஸ்ட் கொடுக்கும். செய்து பாருங்கள்...

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

கோமு
கண்டிப்பா செய்து பார்த்துட்டு சொல்லுங்க.. நன்றாக இருக்கும். வந்து பின்னுாட்டம் இட்டதிற்கு மிக்க நன்றி....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

கவி வாங்க வாங்க.. வீட்டுக்கு வந்தா கண்டிப்பா தண்ணீயோட எல்லாம் சேர்த்தே தர்றேன். தாகத்துக்கு தான் தண்ணி குடிப்பீங்க.. கவலைப்படாதீங்க...

அங்க முருங்கைக்காய் கிடைக்காதா.. அதான் நாளைக்கு வருவீங்கள்ள அப்ப நிறைய வாங்கிட்டுப்போயிடுங்க....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

கல்ப்ஸ்.. என் பையனும் முருங்கைக்காய் பைத்தியம்.. பொட்டுக்கடலைத்துவையல் எப்டிப்பா செய்வீங்க.. பொட்டுக்கடலை பூண்டு மிளகாய் உப்பு சேர்த்து அரைத்துப்பண்ணுவார்களே.. அப்படியா?...வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

i tried this receipe today. its good