5 மாத குழந்தைக்கு இரவில் இருமல் ...... உதவி தேவை தோழிகளே

எனது 5 மாத குழந்தை ஓவியா இரவில் இருமுகிறாள்... பகலில் 2/3 மணி நேரத்திற்கு ஒருமுறை இருமுகிறாள்.. மருத்துவரிடம் காட்டியாகிவிட்டது . டாக்டர் லேப் டெஸ்டும் எடுத்துவிட்டார் . நோய் தொற்று எதுவும் இல்லை . நார்மல் என்று சொல்லிவிட்டார்கள்.முன்னேற்றம் இல்லை . உங்களுக்கு தெரிந்த வீட்டு மருத்துவம் சொல்லுங்களேன்

கீழே தமிழ் எழுத்துதவி இருக்கு. அதுல போய் தமிழ்லில் டைப் பண்ணி உங்க கேள்வியை தமிழில் கேளுங்க. அப்ப தான் நிறைய பேர் பதில் சொல்லுவார்கள். இங்கே உள்ள மூத்த உறுப்பினர்கள் யாரும் தமிழில் எழுதியிருந்தால் மட்டுமே பதில் போடுவதாக சபதம் எடுத்துள்ளனர்:) அதனால் தான் சொல்கிறேன். செய்வீர்களா?

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

வெத்திலையில் விக்ஸ் தடவி சுடு காட்டி மார்பில் வைத்து ஒத்தடம் கொடுங்க.
நீங்க தாய்ப்பால் கொடுத்தால் இஞ்சி சாறு கால் டம்ளர் எடுத்து தேன் கலந்து குடிங்க. சாறின் தன்மை குழந்தைக்கு பட்டால் இருமல் குறைய வாய்ப்புண்டு. (5 மாதம் குழந்தைக்கு இஞ்சி சாறு கொடுக்கலாமா என தெரியவில்லை)

மற்ற தோழிகள் என்ன சொல்கிறார்கள் என பார்க்கலாம். தமிழில் போட்டதற்கு மிக்க நன்றி

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஐந்து மாதக் குழந்தைன்னு சொல்லும் போதுதான் கைவைத்தியம் சொல்ல பயமா இருக்கு. நல்ல தரமான கற்பூரத்தை சுத்தமான தேங்காய் எண்ணெயில் போட்டு வெயிலில் வைத்து சூடாக்க வேண்டும். கற்பூரம் கரைந்ததும் குழந்தையின் நெஞ்சு தொண்டை முதுகில் தடவலாம். ஆனால் குழந்தையின் மெல்லிய சருமம் இதைத் தாங்குமான்னு யோசிக்கணும் :(

நீங்க பாலூட்டிவதாக இருந்தால் ஓமவல்லி மற்றும் துளசி கஷாயம் எடுத்துக்கொள்ளுங்கள். இன்னும் அனுபவசாலிங்க வருவாங்க

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

coconut oil udan karpuram serthu heat seidhu , marbu, thondai, kadhu pinpuram endru thadavavum. arinalum thadavavum , vicks idea pola thadavavum, inghi , poondu, lavangam serthu kashayam vaithu kalayil mattum kodukkavum.

sorry enakku tamil fonts down load theriyavillai.

shanthi

எதிர்பார்த்தால்தானே எமாற்றம்

http://arusuvai.com/tamil_help.html இங்க போனா தமிழ்ல எழுத முடியும்:௦)

நீங்க சொன்ன குறிப்பு ரொம்ப பயனுள்ளது எங்கம்மாவும் இப்படிதான் செய்யச்சொல்வாங்க.

Don't Worry Be Happy.

மேலும் சில பதிவுகள்