ஹாய் தேவா மேடம் மற்றும் தோழிகள் எனக்கு உதவி செய்யுங்கள்

ஹாய் தேவா மேடம் உங்கள் குறிப்புகள் எல்லாம் மிக அருமை...
தேவா மேடம் மற்றும் தோழிகள் எனக்கு உதவி செய்யுங்கள் நான் சென்னைல இருக்கேன் கல்யாணம் ஆகி மூன்று ஆண்டு ஆகிறது.. குழந்தை இல்லை... நான் கல்யாணத்துக்கு முன்னாடி வெயிட் நார்மலா தான் இருந்தேன்...
1. இப்போது அறுபத்தி ஐந்து கிலோ இருக்கேன்.. உயரமும் கம்மிதான் வெயிட் குறைக்க ஆலோசனை சொல்லுங்க.....(நொறுக்கு தீனிலாம் சாப்பிட மாட்டேன்..) எப்பவும் ஒரு சோர்வு இருந்து கொண்டே தான் இருக்கு....
2. நான் நல்ல நிறமாக இருபேன்... இதுவரைக்கும் ஒரு மூன்று தடவை தான் பார்லர் போயிருக்கேன்... என்னுடையும் முகம் மற்றும் கழுத்து கருப்பாகி வருது... கழுத்து ரொம்பவும் கருப்பாக இருக்கு மேடம். முகம் எப்பவும் சோர்வாகவே உள்ளது... இதில் இருந்து நான் வெளி வரதுக்கு எனக்கு ஆலோசனை சொல்லுங்க. (நான் lux சோப்பு தான் use பண்றேன் என்னுடைய சருமம் ஆயில் face.. இதருக்கு தகுந்த சோப்பு சொல்லுங்க மேடம்).
4. கண்ணுக்கீழ கருவளையம் வேற வந்துடுச்சு... (10hrs working in computer)
5. என்னுடையும் புருவத்தில் கம்மியான முடிகள் தான் இருக்கு... புருவத்தில் நல்ல முடிகள் வளருவதற்கு ஆலோசைனை சொல்லுங்க...
என்னுடையும் அழகே போய்டுச்சு என்னுடைய பழைய நிறம் வரதுக்கு உங்களுடைய ஆலோசைனை சொல்லுங்க... ப்ளீஸ்....

நிறைய கேள்விகள் கேட்டுன்னு நினைக்குறேன்.... மன்னிக்கவும்....
Stella Ebenezar

ஹாய் ஸ்டெல்லா உங்கள் முதல் கவிதை நன்றாக இருந்தது வாழ்த்துக்கள். இந்த லிங்குல பாருங்க ஸ்டெல்லா உங்களுக்கு உதவியா இருக்கும். தேவா மேடம் உங்கள் கேள்விக்கு உள்ள பதில்கள் பழைய த்ரெட்களில் இருக்கலாம். நேரம் கிடைக்கும்போது அதையும் பாருங்கள். http://www.arusuvai.com/tamil/forum/no/3677

ஸ்டெல்லா, முதல்ல நம்பிக்கை தான் முக்கியம். நா சுறுசுறுப்பா இருக்கே, இருப்பேன்னு மனசுக்குள்ள சொல்லிகிட்டே இருங்க.. என்னால உடம்ப குறக்க முடியும்னு நம்புங்க.. நிறைய நடங்க... யோகா செய்யலாம். முகத்துக்கு ஒரே சோப்பா யூஸ் பண்ணுங்க... அது ஆயுர்வேதிக் சோப்பா இர்ந்தா நல்லது. நிறைய தண்ணி குடிங்க.

இப்போ சிஸ்டம் முன்னாடி உக்கார்ரதுக்கு ஒரு கிளாஸ் வந்துருக்கு அதை யூஸ் பண்ணா கண்கள் பாதிக்காது.

முகத்துக்கும் கழுத்துக்கும் கீழே உள்ள கருப்பு மாருவதற்கு சுத்தமான வெண்ணய் அல்லது பால் ஏடு எடுத்து முகத்தில் அப்ளை பண்ணிக்கோங்க அது அப்ளை பண்றதுக்கு முன்னாடி அடுப்பில் வென்னீர் போடுங்க. மூடி வச்சி கொதிக்க வங்க. கொதிக்க ஆரம்பிச்ச உடனே அதில் துளசி, வேப்பிலை எல்லாம் போட்டு இறக்கி வச்சி ஆவி புடிங்க... முகத்தில் பூசிய பேஸ்ட் உருகி வழியும் அதை மென்மையான டவல் அல்லது துணி வைத்து துடைத்து விட்டு கடலை மாவு போட்டு முகம் கழுவவும். அதற்கப்புறம் முகத்தில் சோப்போ, பொட்டோ வைக்காமல், இரவு படுத்துவிடுங்கள். மறுனாள் காலை எழுந்ததும் முதலில் முகத்தை கடலை மாவில் அல்ம்பி பின் சோப் போடவும். இது மாதம் இருமுறை செய்யவும். உடனே மாற்றம் தெரியும். அதிக குளிர்ச்சி உடம்பு எனில் இது மாதம் ஒருமுறை போதும்

புருவ முடி வளர்வதற்கு சோத்துக்க்ற்றாழையை எடுத்து அத்ன் நுனியை உடத்து அதை வள்க்கெண்ணையில் ஏற்றிய தீபத்தில் சுட்டு அதில் வரும் கரியை புருவத்தில் பூசினால் முடி விரைவாக வளரும். இல்லைஎனில் எரவு விளக்கெண்ணைய் புருவத்தில் தடவி படுக்கவும்.

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

ஹாய் vinoja17
//ஹாய் ஸ்டெல்லா உங்கள் முதல் கவிதை நன்றாக இருந்தது வாழ்த்துக்கள்.//
என்னோட கவிதை அறுசுவை தளத்தில் வெளி வந்ததா எனக்கு அந்த லிங்க் அனுப்புங்க ப்ளீஸ்.. நான் பாகவே இல்ல வினோஜா....

http://www.arusuvai.com/tamil/forum/no/3677
நீங்க குடுத்த லிங்க் ஒப்பேன் ஆகல... ப்ளீஸ் எனக்கு கரெக்ட் லிங்க் அனுப்புங்க எனக்கு ரொம்ப உதவிய இருக்கும்...

http://www.arusuvai.com/tamil/node/16334

இந்த லிங்க்ல இருப்பது தானே உங்க கவிதை? என்னப்பா இப்படி சொல்லிட்டீங்க. அப்ப வினோ சொல்லலன்னா உங்களுக்கு தெரியாம போயிருக்குமே:(

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஹாய் அமீனா...
எனக்கு ரொம்ப சந்தோஷம்... வினோ மற்றும் நீங்க சொல்லித்தான் எனக்கு தெரியும்.... லிங்க் குடுத்ததுக்காக ரொம்ப நன்றி...

மேலும் சில பதிவுகள்