வெண்டிக்காய் களனி

தேதி: September 19, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (2 votes)

 

வெங்காயம் =1
தக்காளி =1
வெண்டிக்காய் =10
பச்சை மிளகாய் =4
அரிசி கலைந்த தண்ணீர் =1/2 டம்ளர்
எண்ணெய் =1மேஜை கரண்டி
கடுகு = சிறிதளவு
கருவேப்பிலை =சிறிதளவு
புளி =நெல்லிக்காய் அளவு
உப்பு = தேவையான அளவு


 

வெண்டிக்காய் ,வெங்காயம் ,தக்காளி,கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கவும்
பச்சை மிளகாய் கீறி கொளவும் புளியை அரிசி கலைந்த தண்ணீர் இல் கரைத்து வைத்து கொள்ளவும்

பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை தாளித்து வெங்காயம் தக்காளி வெண்டிக்காய் பச்ச மிளகாய் உப்பு சேர்த்து நங்கு வதக்கவும்
காய் நன்கு வதங்கியவுடன் புளி தண்ணிரை ஊற்றி கொதிக்கவைத்து நன்றாக சுண்டியவுடன் இறக்கவும்


சாம்பார் சாதம் ,கறி குழம்பு கோழி குழம்புடன் சாப்பிட சுவையாக இருக்கும்

மேலும் சில குறிப்புகள்


Comments

நஸ்ரின், வெண்டைகாயை வைத்து ஒரு அருமையான டிஸ் கொடுத்துட்டீங்க..... சீக்கிரமாவே செஞ்சு பாத்துட்டு பின்னூட்டம் அனுப்பறேன்.

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

ஹாய்
ரங்கலஷ்மி உங்கள் பின்னூட்டம் கண்டு மிக மகிழ்சி செய்து பார்த்து விட்டு மறக்காமல் எனக்கு சொல்லுங்க நாம இதுதான் முதல் தடவை பேசுகிறோம் ரொம்ப சந்தோசம் உங்கள் வருகைக்கு நன்றி

வித்யாசாமான வெண்டக்காய் கள்னி

ஹாய் பாத்திமாஅஸ்ஸலாமு அழைக்கும் இந்த குறிப்பை போடலாமா வேண்டாமான்னு நினைத்தான் ஆனா நீங்க வித்தியாசமான குறிப்புன்னு சொல்லி இருக்கீங்க ரொம்ப சந்தோசமா இருக்குபா செய்து பார்த்துடு சொல்லுங்கபா உங்கள் வருகைக்கு நன்றி

மசாலா தூள் எதும் தேவை இல்லையா?///

ஹாய் ரீம நலமா இருக்கீங்களா? மசாலா தூள் எதுவும் தேவை இல்லைப்பா செய்து பார்த்துடு சொல்ல்ங்க ரீம உங்கள் வருகைக்கு நன்றி

நஸ்ரின் கனி.. உங்க குறிப்பு நல்லாருக்கு.. என் அம்மா இது பண்ணுவாங்க.. ஆனா எனக்கு சுத்தமா மறந்துபோச்சு. ஞாபகப்படுத்தியதற்கு மிக்க நன்றிப்பா.. கடைசில கொஞ்சம் வெல்லம் சேர்த்துப்போம். நன்றி...

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

களனி

நானும் களனி செய்வேன். ஆனா வித்தியாசமா இருக்கும். இம்முறையில் செய்கிறேன். வாழ்த்துக்கள் நஸ்ரின்..

(சமையல் குறிப்பு ’சேர்க்க’ என்பதை 2 முறை அழுத்திட்டீங்களோ? அண்ணாவிற்கு இன்னொன்றின் லிங்க் அட்ரஸ் கொடுத்துட்டு அழிக்க சொல்லுங்க.)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஹாய் ஆமி உங்களுக்குதான் நன்றி சொல்லணும் நீங்க ஏன் குறிப்பே அனுபறது இல்லை கேட்டு இருந்திங்க அதான்பா ஆமாப முன்னடியலாம் எதாவது தப்பா இருந்த நீக்கு என்று இருக்கும் ஆனா இப்போ அது இல்லை இதோட லிங்க் அட்ரஸ் தெரியலபா எப்படி பாக்குறதுன்னு சொல்லுங்க செய்து பார்த்துடு மறக்காம சொல்லுங்க அப்புறம் நீங்க எப்படி செய்விங்க அதயும் சொல்லுங்க

ராதா அக்கா உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி செய்து பார்த்து விட்டு சொல்லுங்க வெல்லம் சேர்த்தாலும் நல்லாத்தான் இருக்கும் புளிப்பு அதிகமாகி விட்டால் வெல்லம் அல்லது ஜீனி சேர்த்தல் சுவையாக இருக்கும்

நஸ்ரின் மேலே உங்க பெயருக்கு பக்கத்தில் மாற்று என இருக்குமே! அதுல போய் வேற ஏதாவது எல்லாவற்றையும் அழித்துவிட்டு வேறு குறிப்பு கொடுக்கலாம். இல்லையேல்

http://arusuvai.com/tamil/node/16365 இந்த லிங்கை அழிக்க சொல்லி அண்ணாவிற்கு ஒரு மெயில் போடுங்கள்!!

என் களனி குறிப்பை இன்னொரு நாள் கொடுக்கிறேன்....
நன்றி பா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நஸ்ரின்,
உங்க குறிப்பு வித்தியாசமா நல்லா இருக்கு. வெண்டைக்காயில், இது மாதிரி செய்தது இல்லை. பெயரும் வித்தியாசமாய் இருக்கே. இது எந்த ஊர் டிஷ்?
மேலும் நிறைய குறிப்புகள் கொடுத்து ஸ்டார் வாங்க வாழ்த்துக்கள்.

ஹாய் அன்பரசி நலமா
எல்லாம் நம்ம தமிழ் நாடு டிஸ் தான்பா எங்க ஊர் பக்கம் [புதுகோட்டை ]இது எல்லாருக்கும் தெரியும் செய்து பார்த்துடு சொல்லுங்கபா உங்க பெயர் அன்பரசிய நீங்க எந்த ஊர்பா வாழ்த்துக்கு நன்றிபா