Sugar problem

நான் US-ல் இருக்கிரேன், இப்ப 7 மாதம் ஆகிறது, சுகர் அதிகமாக இருக்கிறது என்று Hospital-ல் சொன்னார்கள்.நான் என்ன மாதிரியான உணவு சாப்பிட வேண்டும்.தயவு செய்து பதில் தாருங்கள்.

ரைஸ், சீனி, கிழங்கு அதாவது வெள்ளையாக இருக்கும் உணவுப் பொருட்கள் எல்லாவற்றையும் தவிர்க்கவும். பேக்ட் சிக்கன், சலாட் வகைகள், வீட் ரொட்டி, சப்பாத்தி, கீரை வகைகள் நிறைய சாப்பிடவும். உங்கள் டாக்டரிடம் கேட்டால் ஒரு லிஸ்ட் குடுப்பார்கள். அதன்படி சாப்பிடுங்கள். நிறைய நடவுங்கள். எனக்கும் 2 வது பிள்ளைக்கு சுகர் இருந்திச்சு. நான் நிறைய உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடுகள் கடைப்பிடித்தேன். ஒரு மாசம் டைம் தந்தார்கள். அந்த ஒரு மாசத்தில் சுகர் நார்மல் லெவலுக்கு வந்து விட்டது. உங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி உடற்பயிற்சிகள் செய்யுங்கள். எப்போதும் அதையே நினைத்துக் கொண்டிக்காமல் வேறு எதிலாவது கவனத்தை திருப்புங்கள். எல்லாம் நல்லபடியாக முடியும்.

வாணி

சைடில் உள்ள லேபிலில் கர்பிணிகளுக்கு என்று குறிப்பு இருக்கு பாருங்கள்.

அதில் நிறைய ரெசிபிகள் இருக்கும். நல்ல சாப்பிடுங்கல்

Jaleelakamal

நல்லாருக்கீங்களா? முதல்ல உங்களுக்கு வாழ்த்துக்கள். கவலைபடாதீங்க ரிலாக்ஸ்டா இருங்க. சாதம் கம்மி பன்னிக்கங்க, பயறு வகைகளை(பாசிப்பயறு, மொச்சை, கொண்டைகடலை, பச்சைபட்டாணி, காராமணி) வேகவைத்து பசிக்கும் போது சாப்டுங்க. எல்லா உணவுவகைகளிலும் கடுகு சேர்த்துக்கங்க. கீரைகளையும் சேத்துக்கங்க. வேகவைத்த உணவுகளை சாப்டுங்க அதுவும் கம்மியா...கிழங்குவகைகள் (மன்னுக்கு அடியும் விளையும் காய்கள்) எதுமே சாப்டாதீங்க. முள்ளங்கி, அவரைக்காய், புடலங்காய், வெள்ளைபூசணி நிறைய சாப்டுங்க. வெந்தய கீரை கிடைச்சாலும் சாப்டுங்க. தர்பூசணி எவ்ளோ வேணாலும் சாப்டலாம். வேற நினைவு வரும்போது சொல்றேன். அவங்க சொல்ற அளவு மட்டுமே எடுத்துக்கனும் இந்த டைம்ல. இது அதிக ஸ்ட்ரெஸ் காரணமாகூட வரும் சோ ரிலாக்ஸ்டா இருங்க ஓகே... நல்ல ஆரோக்யமான குழந்தையை பெற்றெடுக்க என்னைக்கும் என் பிரார்த்தனைகள் உங்களுக்கு உண்டு...

மீண்டும் பேசலாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

எல்லாருக்கும் ரொம்ப நன்றி.Phone-லதான் result சொன்னார்கள். இந்த வாரம்தான் doctor-ஐ பார்க்க போகிறேன். கண்டிப்பா நீஙக சொன்னதை follow பண்ரேன். Anu

மேலும் சில பதிவுகள்