தேதி: September 21, 2010
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
துண்டு மீன் = 6 துண்டு
வெங்காயம் = 2
தக்காளி = 2
குடை மிளகாய் 1/2
டோமொடோ கெச்சப் =1மேஜை கரண்டி
கருவேப்பிலை = சிறிதளவு
மிளகாய் தூள் 1 1/2 தேகரண்டி
மல்லி தூள் = 1/2 தேகரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் =1/2 தேகரண்டி
உப்பு = தேவையான அளவு
எண்ணெய் =4 மேஜை கரண்டி
மீனை சுத்தம் செய்து 1 தேகரண்டி மிளகாய் தூள் மல்லி தூள் உப்பு சேர்த்து பிசறி சிறிது நேரம் ஊறவைத்து சிறிது எண்ணெய் ஊற்றி மீனை முறுகாமல் பொரித்து எடுக்கவும் .
மீதம் இருக்கும் எண்ணெய் ஊற்றி வெங்காயம் கருவேப்பிலை போட்டு உப்பு சிறிதளவு போட்டு வதக்கவும் வெங்காயம் சிறிது வதங்கியவுடன் தக்காளி இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும் இஞ்சி பூண்டு வதங்கியவுடன் குடமிளகாய் சேர்த்து வதக்கி மீதம் இருக்கும் மிளகாய்த்தூள் டோமொடோ கெச்சப் சேர்த்து வதக்கி மீனை சேர்த்து பிரட்டி எடுக்கவும் .
சுவையான மீன் ரோஸ்ட் ரெடி
சாம்பார் சாதத்துடன் சாப்பிடலாம்
Comments
nasreen
nasreen ,
புதுமையா இருக்கே..
மேலும் பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்,
கவிதா
மீன் ரோஸ்ட்
கேக்கும் போதே நல்லா இருக்கும்னு தான் தோணூது.
பொதுவாகவே வெங்காயதுடன் குடைமிளகாய் சேர்த்தால் அருமையான வாசனை கிட்டும்.இதுல மீன் வேற போட்டா சொல்லவா வேண்டும். வாழ்த்துக்கள் பா
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
ஹாய் ஆமி
ஹாய் ஆமி
ஆமா ஆமினா நீங்க சொல்வது போல் வெங்காயத்துடன் குடமிளகாய் சேர்த்து செய்தால் நல்வாசனயாகதான் இருக்கும் எனக்கு அந்த வாசனை ரொம்ப பிடிக்கும் இது கேரளா டிஷ் பா செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க ஆமினா
அஸ்லாமு அலைக்கும் ஆமினா
அஸ்லாமு அலைக்கும் ஆமினா உங்கள் ரெசிபிஸ், கவிதை ,கதை, எல்லாம் அருமை (எனக்கு ஒரு உதவி எளிதில் டைப் செய்வது எப்படி என்று தெரியவில்லை சொல்லவும்)
பாத்திமா
வ அலைக்கும் சலாம் வரஹ்....
பாத்திமா நான் கவனிகல பா. சாரி! கீழே சொன்ன முறையில் செய்து டைப் பண்ணுங்க. எளிதாக எளிதலாம் ( முதலில் எழுத கஷ்ட்டமாக தான் இருக்கும். போக போக நல்லா வரும்)
அது ஒன்னும் பெரிய விஷயமில்லை
English Type பன்னுவது போல அதே எழுத்துதான் தமிழுக்கும் வரும், இதுக்கு தமிழ் டைப்பிங்க் தெரியவேண்டிய அவசியமில்லை.
அதாவது...கீழேயுள்ள லிங்கில் போய் NHM Writer Software ஐ download
பன்னுங்க,
http://software.nhm.in/products/writer
அப்பறம் அதை இன்ஸ்ஸ்டால் பன்னுங்க, பன்னிட்டு உங்க PC யில் install பன்னுங்க
அதுக்கு அப்பறம் நீங்க தமிழில் டைப் பன்னுங்க. இதை Install பன்னும்போது நல்ல கவனித்து Language selection வரும் இடத்தில் pull down button ஐ கிளிக் செய்து Tamilஐ
செலெக்ட் செய்து next click செய்து installation ஐ முடிக்கவும் அதன் பின்பு, இதை முதலில் செய்து முடிங்க அப்பறம் உள்ளதை சொல்கிறேன், அப்பதான் எனக்கும் சொல்ல கொஞ்சம் ஈசியா இருக்கும்,nhm install செய்த பிறகு டாஸ்க் பாரில் அதாவது System ல கீழே timeக்கு பக்கத்துல ஒரு bell மாதிரி icon இருக்கும் அதுதான் nhm software, ok இப்ப word அல்லது note pad (text document) ஐ ஒபென் செய்து கொள்ளுங்கள் பின்பு அதில் மௌசை வச்சு லெஃப்ட் கிளிக் டபுள் கிளிக் செய்து கொள்ளுங்கள் இப்ப Alt பட்டனை press செய்து கொண்டு 2 வை பிரஸ் பன்னுங்க அப்பறம் டைப் பன்னினால் தமிழ்ல டைப் வரும், வரலேனா இன்னொருமுறை அதே மாதிரி press பன்னுங்க.
(இதை நான் சொல்லல. இங்கே ஒருத்தர் கம்யூட்டர் வியாபரம் பண்ணிட்டு இருந்தார். அவர் சொன்னது)
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
ஹாய் கவி
ஹாய் கவி வாழ்த்துக்கு நன்றிபா செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க பா
அஸ்லாமுஅலைக்கும் நஸ்ரின்
அஸ்லாமுஅலைக்கும் நஸ்ரின் உங்க்ள் மீன் ரோஸ்ட் ரெஸீபி ஈசியாக இருக்கிறது
வ அழைக்கும் முசலம் பாத்திமா
வ அழைக்கும் முசலம் உங்க வருக்கு மிக நன்றி செய்து விட்டு எப்படி இருந்ததுன்னு சொல்லுங்கபா google transliteration la தமிழ் ஈஸியாக டைப் பண்ணலாம் பா