பயனுள்ள அரட்டை பாகம்-1

இனிய காலை பொழுதை காண்பவர் இனிதாய் நாட்களை நகர்த்திடவும்....
நாட்களை நகர்த்தியவர் இனிதாய் கனவுலகில் மிதந்து மறு நாள் பூத்த ஆதவனை காணும் பாக்கியம் பெறவும்

வாழ்த்துகிறேன்....

சும்மா அரட்டையையே அடிக்காம ஏதாவது பேசணூம்னு ஆசை...அதாவது ஒவ்வொரு அரட்டையிலும் ஏதாவது ஒரு தலைப்புல பேசலாம் (பட்டிமன்றம் இல்ல)

மாமி சென்னைக்கு போயிட்டு வந்துருக்காங்க. போகும் போது சும்மா போகாம சென்னை பத்தி ஒரு பதிவு போட்டாங்க.அதோட பாதிப்பு தான் இன்னைக்கு பேச போவது. பொதுவாக எல்லாரும் சென்னையை பார்த்திருப்போம். அங்கே நிகழ்ந்த சுவையான சம்பவம்,கசப்பான சம்பவம்,அனுபவம், வர்ணனை என எது பற்றி வேண்டுமானாலும் பேசலாம்...சென்னை மட்டுமின்றி மாநகரங்களை பற்றியும் பேசலாம்

வாங்கோ பார்ப்போம் (அரட்டையும் இருக்கலாம். ஆனால் அரட்டையாகவே இருக்க கூடாது:)

நாந்தான் முதல்ல!

கிகிகிகிக்!

யரோ என்னை பத்தி தப்பா மெயில் பண்ணிருக்கேள் அட்மின் சாருக்கு!

இது அடுக்காது! அந்த கருப்பு ஆடு யார்! உண்மயை சொல்லிடுங்கோ!

இல்லேனா ! நடக்கறதே வேற!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மாமி வந்துட்டேன்

மீரா கிருஷ்ணன்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா

மாமி காத்தால்யே பெக்கா என்ன விட்டுடுங்கோ மாமி

மீரா கிருஷ்ணன்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா

மாமி.........நான் வந்துட்டேன்...............உங்கள தனியா டீ ஆத்த விட்டுடுவோமா.. ஆமி வேற பயனுள்ள அரட்டைனு கொடுத்திருக்காங்கோ.......

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

பக்கத்துல டாஸ் மாக்!

போட்டுகிட்டா கிக்மாக்! அட்மின்கிட்ட

போட்டு கொடுத்தா உடம்புள பிளேட் மார்க்!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

திருக்குறள்

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.

(781)
விளக்கம்:

நட்பைப் போல் ஒருவன் செய்து கொள்வதற்கு அருமையான செயல் எதுவுமே இல்லை. நட்பைப் போல் செயல்களுக்கு அருமையான பாதுகாப்பும் எதுவுமில்லை

மீரா கிருஷ்ணன்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா

சென்னை யுனிவர்சிட்டிக்கு போகனும் பணம் கட்ட. எனக்கு ட்ரைன் தான் பெஸ்ட்ன்னு தோணூச்சு.அதான் கிடச்சது. பஸ்ஸுல தொங்க கூட இடமில்ல. எப்படியும் போகும் வழியில் அந்த பஸ்லாம் ஒரு பக்கமா சாய்ந்து கவிழும்னு தெரியும். அதான் ட்ரைன் பயணம். அங்கே போனா அதைவிட கொடுமை. இவ்வளவு மக்கள் எப்படி தான் இங்கே இருக்காங்கன்னு...

அந்த கூட்டத்தில் நிக்க கூட இடமில்லை. ஆனாலும் நின்னாச்சு:) தி நகர் தாண்டியது. யாரோ என் கேன் பேக்கை தடவுவது போல் உணர்ந்தேன். நாம்மலாம் ரொம்ப உசார்ல. பேக்கை இழுத்து கெட்டியா புடுச்சேன்.

நுங்கம்பாக்கம் ஸ்டேஷன் வந்தது. ஒரு அலரலும் கேட்டது. என் அருகில் நின்ற பெண்மணியின் கேன்பேக்ல செல்போனும் பணமும் காணாமாம். ஜிப் மட்டும் திறந்து இருக்கு. அதுக்கு முன் தான் அந்த பெண் தன் குழந்தைக்கு போன் பேசினாள்.பூங்கா ஸ்டேஷன் வரும் போது பாதி பேர் இறங்கியதால் கண்டுபிடிக்க முடியவில்லை (எந்த ஸ்டேஷனா இருந்தாலும் கண்டுபிடிக்க முடியாது தான்). அந்த பெண்ணுக்கு யாரோ கேன்பேக் இழுத்தது போன்ற உணர்வு இருந்ததாம்.ஆனால் கூட்டத்தில் இது சகஜம் என சகஜமா விட்டுச்சாம். நல்ல வேளை என் 3000 பணம் தப்பித்தது.

எல்லாரும் இனி ஜாக்ரதையா இருங்கோ!!!!!!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

பயனுள்ள அரட்டைங்கரதால தமிழ் இலக்கியம் பற்றி எனக்கு தெரிந்தத சொல்றேன்
சங்க இலக்கிய நூல்கள மூன்று வகையா பிரிச்சிருக்கா

எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
பதினெண் கீழ்கணக்கு

மீரா கிருஷ்ணன்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா

சங்க இலக்கியம் 2 வகையா தானே பிரிச்சுருக்கா!அதுக்குள்ளையும் 3 ஆக மாத்திட்டாங்களா?

பதினெண் கீழ் கணக்கு நூல்கள்
பதினெண் மேல் கணக்கு நூல்கள்

பதினெண் மேல் கணக்கு நூல்கள் 2 வகையா பிரிக்கிறாங்க. எட்டுத்தொகை பத்துப்பாட்டு

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

எட்டுத்தொகையும் பத்துப் பாட்டையும் சேர்த்து பதினெண் மேற்க்கணக்கு நூல்கள்னு சொல்வா
எட்டுத்தொகை நூல்கள் என்னென்னனா
நற்றினை
குறுந்தொகை
ஐங்குறுநூறு
புறநானூறு
அகநானூறு
பதிற்றுப்பத்து
பரிபாடல்
கலித்தொகை

மீரா கிருஷ்ணன்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா

மேலும் சில பதிவுகள்