singapore ல் preethi mixie சின்ன jar எங்கு வாங்கலாம்? எனது mixieயின் சின்ன jar பழுதாகும் நிலையில் உள்ளது. பச்சரிசி எங்கு கிடைக்கும்?
singapore ல் preethi mixie சின்ன jar எங்கு வாங்கலாம்? எனது mixieயின் சின்ன jar பழுதாகும் நிலையில் உள்ளது. பச்சரிசி எங்கு கிடைக்கும்?
மிக்ஸி ஜார்
மிக்சி ஜார் வாங்க லிட்டில் இந்தியாவில் ஜோதி ஸ்டோரில் கேட்டுப் பாருங்க.
பொன்னி பச்சரிசி பொதுவா எல்லா இந்திய கடைகளிலும் கிடைக்கும். தாய் பச்சரிசி போதும்னா ஃபேர் ப்ரைஸ், ஷெங் ஷ்யோங் இப்படி எல்லா கடைகளிலும் கிடைக்கும்
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
நானும் சிங்கப்பூர் தான்
preethi mixie jar நீங்க jothi store flower shop -Tekka- ல் கிடைக்கும், பச்சரிசி - Gayathri department store - Tekka -ல் கிடைக்கும்,
மிக்ஸி ஜார்
ஹாய் செல்வா கணேஷ்.. உங்களுக்கு மிக்ஸி ஜார் இங்க ஜோதி ஸ்டோர்ல வாங்கலாம். ஆனா கொஞ்சம் காஸ்ட்லியா இருக்கும். அதுனால நீங்க ஊருக்கு போகும்போதோ அல்லது ஊர்ல இருந்து யாராவது வந்தாங்கன்னா அவுங்க கிட்ட சொல்லி வாங்கிட்டு வரச்சொல்லுங்க. அது தான் பெஸ்ட்.
பச்சரிசி டேக்கா ல நிறைய தமிழ் கடைகளில் கிடைக்கிறதுப்பா.. முஸ்தபா-லயும் கிடைக்கிறது. டேக்கா போய் கடைகளில் விசாரித்தால் நமக்கு தேவையான அனைத்து சாமான்களும் வாங்கிவிடலாம்.
"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"
ராதா ஹரி
mixie jar
Tekka வில் விசாரித்துப் பார்க்கிறேன். கவி, ராதா,Rithi அனைவருக்கும் நன்றி.
அருகில் இருக்கும் தமிழ்
அருகில் இருக்கும் தமிழ் கடையில் பச்சரிசி கிடைக்கும். தேக்கா சென்றால் நிச்சயம் கிடைக்கும். மிக்சி ஜார் ஜோதி ஸ்டோர்ஸில் ஆர்டர் செய்தால் 3 முதல் 4 வாரங்களில் கிடைக்கும். நான் சிங்கை வாசி வுட்லண்ட்ஸ் வட்டாரத்தில் வசிக்கிறேன்.