திண்டுக்கல் பிரியாணி

தேதி: September 21, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.1 (24 votes)

இந்த திண்டுக்கல் சிக்கன் பிரியாணியை திருமதி. ஆசியா உமர் அவர்கள் திருமதி. ஆமினா அவர்களின் குறிப்பிலிருந்து எடுத்து செய்து பார்த்து அதனை விளக்கப்படங்களுடன் நம்முடன் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

 

பாஸ்மதி அரிசி - 4 டம்ளர் (1 கிலோ)
கோழி - 1 கிலோ
தேங்காய் பால் - 2 டம்ளர்
தண்ணீர் - 5 டம்ளர்
நாட்டு தக்காளி - 4 (நான்கு நான்காக நறுக்கவும்)
வெங்காயம் - 2
சின்ன வெங்காயம் விழுது - அரை கப்
இஞ்சி, பூண்டு விழுது - 4 தேக்கரண்டி
புதினா - 1 கட்டு
கொத்தமல்லி - 1 கட்டு
பச்சை மிளகாய் - 6
நெய் - 100 மில்லி
எண்ணெய் - 100 மில்லி(விரும்பினால்)
தயிர் - அரை கப்
எலுமிச்சை - 3
தரமான மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி
பட்டை, ஏலக்காய், கிராம்பு (வாசனை தூள்) - 1 தேக்கரண்டி
முந்திரி - 10
உப்பு - தேவைக்கு
வாசனை பொருட்கள்:
பட்டை - 1
ஏலக்காய் - 2
கிராம்பு - 3
பிரிஞ்சி - 2
அன்னாசி பூ - 2


 

சிக்கனை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். புதினா கொத்தமல்லியை ஆய்ந்து அலசி நறுக்கி வைத்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பிரியாணி செய்யப்போகும் பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி முந்திரி, வாசனைப்பொருட்கள் சேர்த்து கிளறவும். நறுக்கிய கொத்தமல்லி, புதினா, மிளகாய் சேர்த்து நன்கு சுருள வதக்கவும்.
மல்லி, புதினா சுருள வதங்கிய பின்பு, இஞ்சி பூண்டு விழுது, வெங்காய விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
அதனுடன் மிளகாய்த்தூள் மற்றும் வாசனை தூள் சேர்த்து நன்கு வதக்கவும். அதில் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் அத்துடன் தயிர் சேர்த்து கிளறவும்.
பின்பு நன்கு சுத்தம் செய்து நறுக்கிய கோழி துண்டுகள் சேர்த்து அத்துடன் உப்பு சேர்க்கவும். மசாலா கோழித் துண்டுகளில் ஒட்டும் படி பிரட்டி விடவும். பின்னர் மூடி விடவும்.
தேங்காய்ப்பாலை விடவும். கோழித்துண்டுகள் அரைவேக்காடாக வெந்ததும், தண்ணீர் சேர்க்கவும், உப்பு சரி பார்த்து கொள்ளவும்.
கொதி வரவும் கழுவிய அரிசியை சேர்க்கவும். தண்ணீர் வற்றி சோறு வெந்து வரும். கால் வாசி தண்ணீர் இருக்கும் பொழுது எலுமிச்சைபழம் பிழிந்து விடவும். திரும்ப மெதுவாக ஒரு சேர பிரட்டி விடவும்.
தம் போட பிரியாணி பாத்திரத்தின் அடியில் தோசைக்கல்லை வைத்து சூடேறியதும் அடுப்பை சிம்மில் வைக்கவும். பாத்திரத்தை அலுமினியம் ஃபாயில் கொண்டு மூடி திரும்ப மூடி போட்டு மூடவும். அல்லது ஆவி போகாமல் தம் ஆக மேலே கனமான பாத்திரத்தில் தண்ணீர் வைக்கலாம்.15-20 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்கவும்.
உடனே திறக்காமல், மீண்டும் கால் மணி நேரம் கழித்து திறந்து, பிரட்டி விட்டு பரிமாறவும்.
சூடான சுவையான திண்டுக்கல் சிக்கன் பிரியாணி ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

திண்டுக்கல் பிரியாணி

ஆசியா ஒமர் நன்றி என் குறிப்பை தேர்ந்தெடுத்ததற்கு!

சாப்டீங்களா? எப்படி இருந்தது?

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அருமையாக இருந்தது.நான் எப்பவும் வடித்து தட்டி தான் சமைப்பேன்.இந்த முறையில் செய்து இப்ப அசத்தியாச்சு.சூப்பர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஜொள்ளுதான் வேற ஒண்ணுமில்லை :). ஆமியோட குறிப்பை பார்த்துட்டே செய்யணும்ன்னு இருந்தேன். இப்போ படத்தோட ஆசியாவும் போட்டாச்சு. இந்த வாரமாச்சும் செய்யணும் :). யாராச்சும் செய்து பார்சல் அனுப்பியாச்சுன்னா ரொம்பவே சந்தோஷமா சாப்பிடுவேன் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

சாப்பிடணும் போலே இருக்கே
பிரியாணி அருமையான படங்களுடன் வந்துள்ளது
வாழ்த்துக்கள் ஆசியா மேடம்,ஆமினா

என்றும் அன்புடன்,
கவிதா

அருமையான பிரியாணி,அழகான படங்கள்..கூடவே..சூப்பரான சைட் டிஷ்..தோழி,இப்பவே செய்து சாப்பிடத்தோன்றுகின்றது.

arusuvai is a wonderful website

ஆசியா மேடம், ஆமினா

திண்டுக்கள் பிரியாணி பார்க்கவே அருமையா இருக்கு புரட்டாசி மாசத்துல இப்படியா நாக்குல எச்சு ஊரவைக்கிரது, கண்டிப்பா அடுத்த மாதம் பண்ணிடுவேன் செய்து பார்த்துவிட்டு பின்னூட்டம் தருகிறேன்.

குறிப்பை வழங்கிய ஆமினாவுக்கும் அதை அருமையாக செய்துகாட்டி அசத்திய ஆசியா அவர்க்ளுக்கும் நன்றி, வாழ்த்துக்கள்.

அன்புடன்
நித்யா

கருத்து சொன்ன தோழிகள் அனைவருக்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.நிச்சயம் செய்து பாருங்க.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆசியா..
ஹ்ம்ம்ம் டெக்ரேஷன் வேற பட்டைய கிளப்புது.. எனக்கு பசியும் ஆசையும் பட்டைய கிளப்புது.. ;)

விருப்ப பட்டியலுக்கு போயாச்சு

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஆசியா... உங்க குறிப்புக்கு நான் ரசிகை ஆச்சே!!! எதை விட்டேன் இதை விட.... சீக்கிரமே சமைச்சுட்டு சொல்றேன் "சூப்பரா இருந்தது" என்று. :) உங்க குறிப்புன்னா ருசியை சொல்லவா வேணும்???

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இது ஆமினாவின் குறிப்பு.நன்றி அவங்களுக்கு தான் சொல்லனும்.கருத்திற்கு மகிழ்ச்சி.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

திண்டுக்கல் பிரியாணி ரொம்ப நல்லா இருந்தது நன்றி ஆமி ஆசியா அக்கா படங்கள் அருமை நன்றிக்கா

திண்டுக்கல் பிரியாணி செய்துட்டேன். ரொம்ப சூப்பரா இருந்துச்சு. கொஞ்சம் கூட மீதம் இல்லை. எல்லாம் காலி :).

நன்றி ஆசியா & ஆமினா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நானும் உங்கள்ளொட விசிறி

u r the best.

வெங்காயம் - 2 enna seiya ?

2 வெங்காயம் கட் செய்து ,கரம்மசாலா,மல்லி,புதினா,முந்திரி வதக்கிய பின்பு சேர்த்து நன்கு வதக்கி அதன் பின்பு தான் இஞ்சி பூண்டு பேஸ்ட்,ஆனியன் பேஸ்ட் சேர்க்க வேண்டும்,குறிப்பிட தவறிவிட்டார்கள் என்று நினைக்கிறேன்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

THANNI EVVALUVUNU SOLLAVE ILLAYE.PLS TELL THIS.

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

மேலே இருக்கு சொல்லியிருக்காங்களே!

5 டம்லர் தண்ணீர், மற்றும் 2 டம்லர் தேங்காய் பால்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அருமையான பிரியாணி... நேற்று செய்ததாக கவிசிவா சொல்லி உசுப்பேத்தி விட்டாங்க... இன்னைக்கு செய்து சுட சுட சாப்பிட்டாச்சு. அருமை அருமை. ரொம்ப சூப்பரா இருந்துது. சுவையான குறிப்பை தந்த ஆமினாக்கும் அதை செய்து பார்க்க தூண்டும் படங்களை தந்த ஆசியாக்கும் பாராட்டுக்கள். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Good