பயனுள்ள அரட்டை பாகம்-2

நேத்து சென்னை பத்தி அதிகமாவே (சும்மா விளம்பரத்துக்கு. கொஞ்சம் தான் ஒத்துக்குறோம்:) பேசியாச்சு. ஆந்திரா, தமிழ்நாடுன்னு டூர் கூடிட்டு போனதுக்கு ஆளாளுக்கு ஆமி பேர்ல 3000 ரூபாய் அக்கவுண்ட்ல போட்டு விடுங்க:)
அக்கவுண்ட் நம்பர்- 420 111
பேங்க் நேம் - பேங்க் ஆப் நாமம், அபேஸ் நகர் :)

ஓக்கே மேட்டருக்கு வாங்க. இன்னைக்கு என்ன பேசலாம்னா (தூங்காம யோசிச்சேன். நம்புங்க) மாறி வரும் சமூகம்....

அதாவது நேத்து அப்பா,அம்மாவை தூண்டிவிட்டு பொண்ணு வீட்டுல பைக்,பணம் என மாப்பிள்ளை கேட்ட காலம் மாறி அம்மா,அப்பாவே வற்புறுத்தினாலும் “வரதட்சணை வாங்குனா நான் கல்யாணம் பண்ணவே மாட்டேன்”அப்படின்னு மிரட்டும் நல்ல அறிவான ஜெண்டில் மேன் லாம் உருவாக ஆரம்பிச்சுட்டாங்க. இது ஒரு உதாரணம். இப்படி நல்ல விஷயங்களும் பேசலாம்.

இப்படி என்ன இந்த சமுதாயத்துல மாற்றம் கண்டீங்க? இன்னும் அப்படி தானுங்க இருக்கு. கலிகாலம்....என சொல்பவர்களும் சொல்லலாம்

(யாரும் கோபமா பேசாதீங்க. சும்மா ஜாலியா பேசணும் நம்ம மாமி மாறி. எவ்வளவு நாள் தான் வெட்டியாவே பொண்ணுங்க பேசுவாங்க? நாம்மளும் முன்னேற வேண்டாமா? )

ஆமினா நான் தான் முதலில் வருவேன் ஆமாம்.....,
சமுதாயத்தின் இன்றைய மாற்றங்கள் நிறையவே இருக்கு அதில் நல்லதும், கேட்டதும் இருக்கு, நீங்க சொன்னது போல வரதட்சணை வேண்டாம்மேன்றும் சொல்லும் காலம் வந்துவிட்டது ஆனால் இன்னும் முழுமையாக மாறவில்லை என்றுதான் நான் சொல்வேன்.
எவ்வளவுதான் தங்கம் விலை கூடினாலும் அதற்க்கு மட்டும் ஆசைபடும் மக்கள் இன்னும் குறையவில்லை, அதலால் வரதட்சணையும் யாரும் கேட்க்காமல் இருப்பதில்லை, நம்தேவைக்கேற்ப்ப வாங்கிக்கொண்டு அதை அனுபவிக்க முதலில் எல்லோரும் முன்வர வேண்டும்.

அன்புடன்
நித்யா

//எவ்வளவுதான் தங்கம் விலை கூடினாலும் அதற்க்கு மட்டும் ஆசைபடும் மக்கள் இன்னும் குறையவில்லை, அதலால் வரதட்சணையும் யாரும் கேட்க்காமல் இருப்பதில்லை//

சும்மா இருங்கப்பா! நகை கேட்பது எவ்வளவு நல்ல விஷயம் தெரியுமா? அத வச்சு மாப்பிள்ளை கடன் வந்தால் அடைக்க வேண்டாமா ;)

எனக்கு தெரிஞ்சு நல்லவங்களா மாற ஆரம்பிச்சுட்டாங்க. அதுவும் குறிப்பா படிச்ச பசங்க. நாகரிகம் தெரிஞ்ச பசங்க (ஸ்கூல் பாடத்தின் எபேக்ட்டோ???) சுத்தமா விரும்புறது இல்ல. அம்மாமார்களே சொன்னாலும் கூட தடுத்து அப்படின்னா எனக்கு கல்யாணம் வேண்டாம்னு சொல்றாங்க (எவ்வளவு பெரிய மனசு)

சமீபத்துல அப்படி ஒரு பையனை பார்த்தேன். அம்மாவுக்கும் மகனுக்கும் நடந்த போட்டியில் மகன் தான் ஜெய்த்தான்:)

இன்னொரு கொடுமையான விஷயமும் நடந்தது. அடுத்த பதிவில்!

நித்யா ரொம்ப நன்றி திண்டுக்கல் பிரியாணி பத்தி பாராட்டியதற்கு

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

தலைப்பு மிகவும் அருமை.வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்ய மாப்பிள்ளை நினைத்தால் கூட மாப்பிள்ளை வீட்டில் இருப்பவர்கள் விடுவதில்லை.எதேனும் காரணம் சொல்லி மாப்பிள்ளை மனதே மாற்றுகிறார்கள்.ex மாப்பிள்ளைக்கு எதேனும் குறை இருப்பதாக.இதற்கு ஒரே வழி இன்றைய தலைமுறை பெண்கள்.2009- 2010 கணக்கெடுப்பின் படி ஆண்களை விட பெண்களின் சதவிதம் அதிகம்.முந்தியோர்க்கு மட்டுமே பெண் என்ற நிலை.so பெண்கள் மற்றும் பெண்களின் குடும்பம் வரதட்சணை கொடுக்காமல் திருமணம் செய்ய முடிவு எடுத்தால் மட்டுமே முடியும்.என்று நான் நினைக்கிறேன்

என்று நீ ஒரு உயிர் மீது அளவுகடந்த அன்பு கொள்கிறாயோ அந்த நொடி முதல் நீ மனதால் பலவீனம் அடைகிறாய்-பகவத் கீதை.
அன்புடன்
ஜானகி

ஜானகி

அந்த கொடுமையை ஏன் கேக்குறீங்க? இதுக்குன்னே ஒரு கூட்டம் எங்க ஊர்ல அழையுது:( மாப்பிள்ளை வீடு பெருந்தன்மையா பணம் வேண்டாம்னு சொன்னது மட்டும் தெரிஞ்சா போதும் உடனேயே நம்ம வீட்டுக்கு வருவாங்க (பொண்ணு வீடு)

அவன் சரியில்ல அப்படி இப்படி, இப்படி அப்படி என சொல்லியே மனச மாத்துவாங்க. எங்க வீட்டுக்கு கூட ராங் கால் லாம் வந்துச்சு. நான் தான் எங்கம்மாவுக்கு தெரியாம வயறை கட் பண்ணேன்:)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அன்பு தோழிகளுக்கு காலை வணக்கம்.ஆமி இந்த மாதிரி தலைப்பு வச்சி பேசறது நல்லாயிருக்கு.வுங்களுக்கு hates up .எங்கள் ஊர் ( திருநெல்வேலி) பக்கம் வரதட்சிணையாக நகையே எதிர் பார்கிறார்கள். நூறு பவுனா அரைகிலோவா என்கிற ரேஞ்சில் போய்கொண்டிருக்கிறது. அங்கெல்லாம் பெண் குழந்தைகள் பிறந்துவிட்டால் சிருவயதிருந்தே தங்கம் சேர்க்க ஆரம்பித்து விடுகிறார்கள்.என் அம்மாவும் என்னை நச்சரிக்க தொடங்கிவிட்டார்கள்.வரதட்சினை இப்பொழுது இன்னும் கூடி இருக்கிறது என்றே சொல்லலாம்.வரதட்சினை கொடுமை அவ்வளவாக இல்லையென்றாலும் வரதட்சினை வாங்குவதுகுறையவில்லை.

இதுவும் சரிதான்!. நம்ம ஊர்கார்களுக்கு அடுத்தவன் வீட்டை பற்றி பொறனி பேசுவதை பொளப்பு. அடுத்தவன் வீட்டில் நல்லது நடந்தால் அவனுக்கு பொருக்காது.
அன்புடன்
ஜானகி

என்று நீ ஒரு உயிர் மீது அளவுகடந்த அன்பு கொள்கிறாயோ அந்த நொடி முதல் நீ மனதால் பலவீனம் அடைகிறாய்-பகவத் கீதை.
அன்புடன்
ஜானகி

சுந்தரி,ஜானகி

எங்க மாவட்டம்ல (ஊர்மானத்த வாங்காதன்னு பாசக்கார பயபுள்ளைங்க திட்டுனா?அதான் மாவட்டம்:) அதாவது சுத்தி இருக்குற இடத்துலலாம் நகை கூட வேண்டாம். 1 1/2 லட்சம் வேண்டும்னு கேக்குறாங்க. எப்படியும் அவங்களுக்கு தெரியும் நகை போடாம அனுப்ப மாட்டாங்கன்னு :(

சில பசங்க ரொம்ப உஷார். வெளிநாட்டுல இருந்து வரும் போதே வருங்கால மனைவிக்கு 5 பவுன் முதல் வாங்கிட்டு வந்துடுவாங்க அம்மாவுக்கு தெரியாம. இதெப்படி இருக்கு?

சுந்தரி ஜீடால்க்ல இன்வைட் பண்ணேனே கவனிக்கலையா?

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

akka நான் இப்போது gtalk liஇருக்கிறேன் mail janakigift@gmail.com

என்று நீ ஒரு உயிர் மீது அளவுகடந்த அன்பு கொள்கிறாயோ அந்த நொடி முதல் நீ மனதால் பலவீனம் அடைகிறாய்-பகவத் கீதை.
அன்புடன்
ஜானகி

விருப்பம் இருந்தால் mail id கொடுக்கவும். ஆமினா அக்கா

என்று நீ ஒரு உயிர் மீது அளவுகடந்த அன்பு கொள்கிறாயோ அந்த நொடி முதல் நீ மனதால் பலவீனம் அடைகிறாய்-பகவத் கீதை.
அன்புடன்
ஜானகி

இப்ப இருக்க பசங்க வரதட்ச்சணை அவ்வளவா வாங்கறது இல்லை....இப்பளாம் வர போற Wife-க்கு அவங்களே நகை பன்னிரங்க... ஆன அவங்க அம்மாக்கள் தான் வர மருமகள் நிறய நகை கொன்டுகிட்டு வரனும் மத்தவங்க முன்னாடி என் பையனுக்கு இவ்வளவு செஞ்சங்கனு சொல்லி பெருமை
பட்டுக்கனும்......பொண்ணுக்கு எதிரி எப்பவுமே பொண்ணுதான்

மேலும் சில பதிவுகள்