தோழிகளே அனைவரும் வாருங்கள் எனக்கு குழப்பமாக உள்ளது

ஹாய் தோழிகளே எனக்கு ஒரு விளக்கம் தேவை. எனக்கு pcod இருக்கு ஆகஸ்ட் மாதம் தான் தெரிந்தது ட்ரீட்மென்ட் ஆரம்பித்து விட்டேன். போன மாதம் எனக்கு ஓவர் ப்லீடிங் அதனாலதான் நான் ஹொஸ்பிடல் போனேன் அவங்க ஸ்கேன் எடுத்து பார்த்து pcod இருக்குன்னு சொன்னாங்க. என்னோட மென்சன்ஸ் ஸ்டார்ட் தேதி 15/08/2010 ட்ரீட்மெண்ட் ஆரம்பித்தவுடன் ப்லீடிங் நின்றது. நின்ற தேதி 23/08/2010 இன்னும் ட்ரீட்மெண்ட் பொய்ட்டு இருக்கு எனக்கு இன்னும் மென்சன்ஸ் வரல நான் எந்த தேதி கனக்கெடுப்பது எப்ப டெஸ்ட் பன்னலாம். எனக்கு இர்ரெகுலர் பீரியட்ஸ் கூட ஆனா ட்ரீட்மென்ட் ல அது சரியாகிவிடும் அல்லவா எனக்கு ஏன் இன்னும் பீரியட்ஸ் வரல நான் எப்ப டெஸ்ட் எடுக்கனும்.
வாங்க தோழிகளே உங்களது ஆலோசனை கூருங்கள்.

pcod என்னனு சொன்னிகன்னா நல்லா இருக்கும். எல்லாருக்கும் easya பதில் சொல்ல முடியும்

ன்ன சொல்ரது சரி தானா? தோழி!!!!

அதுக்குள்ள அவசரப்படாதீங்க...அப்படின்னா செய்ய செய்யவே சரியாகிடும்னில்ல..உங்கள் எதிர்பார்ப்பு நல்லது தான் ..ஓரிரு வாரம் கழிச்சு செய்து பாருங்களேன்

தளிகா ம் இன்னும் இரண்டு வாரங்கள் கழித்து பார்க்கிரேன்

அன்புடன்
ஸ்ரீ

ஹாய் ஷஃபிகா pcod நா பாலிசிஸ்டிக் ஓவரீஸ் இது இருந்தா இர்ரெகுலர் மென்சன்ஸ் அதிக உடல் எடை இருக்கும்

அன்புடன்
ஸ்ரீ

ஸ்ரீமதி Pcod என்பது நீர்கட்டிகள்தான் இப்போது உள்ள் சூழ்நிலையில் 90 சதவீத பெண்களுக்கு இருக்கு. இதற்கான காரணம் நிறைய இருக்கு. ஓவர் வெயிட், பெற்றோர் சுகர் பேஷண்ட்டாக இருப்பது, அதிகபடியான டென்ஷன், மன உளைச்சல் இதெல்லாம் முக்கிய காரணம். சிலருக்கு குறைவாக இருக்கும், சிலருக்கு நிறைய இருக்கும். ஆரம்பநிலை என்றால் ஒரு 4 மாதத்திலேயே சாரியாகி விடும்.ஸ்கேனில் உங்களுக்கு எந்த நிலையில் இருக்கு என்பதை விவரித்து இருப்பார்கள். அதை படித்து பாருங்கள். பிசிஓடி இருந்தால் இர்ரெகுலர் பீரியட்ஸ் சகஜம்தான். பிசிஓடி இருக்கும் போது கருத்தரிக்க முடியாது, அதற்கான மெடிஷனை தொடர்ந்து எடுத்து வருவதன் மூலமே குறைக்க முடியும். மாத்திரை எடுத்துக் கொண்டு இருக்கும் போதே கன்சிவாகவும் வாய்ப்பு இருக்கு. இது ஒரு பெரிய வியாதி என்று நினைத்து குழம்பிக் கொள்ள வேண்டாம். டாக்டர் அட்வைஸை ஒழுங்கா ஃபாலோ பண்ணுங்க போதும். 25 தேதி வீட்டிலேயே டெஸ்ட் பண்ணி பாருங்க. pcod பற்றி நிறைய பதிவு மன்றத்தில் இருக்கும்.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

மேலும் சில பதிவுகள்